விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் இனியா ஆபிஸில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவருடன் வேலை செய்பவர்கள் போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது இனியா, அதைப்பற்றி விசாரித்தார். அப்போது ஒருவர், சுதாகர் என்ற பெரிய பிசினஸ்மேன் உடைய பையன் தான் இந்த போதை வழக்கில் சிக்கி இருந்தார். லட்சக்கணக்கில் செலவு செய்து அந்த பையனை பற்றி வெளியில் பேசவிடாமல் பண்ணி விட்டார்கள். ஆறு மாதம் சிறையில் இருந்தான் என்றெல்லாம் சொன்னார்கள். இதைக் கேட்டு இனியா ரொம்பவே ஷாக் ஆகிறார். பின் சுதாகரை பற்றி சோசியல் மீடியாவில் பார்த்தார்.

அதில் நிதிஷ் போதை வழக்கில் கைதாகி இருப்பதை பார்த்து இன்னும் அதிர்ச்சி ஆனார் இனியா. பின் வீட்டிற்கு வந்த இனியா, சுதாகரிடம் பேச போனார். ஆனால், பார்ட்டிக்கு உறவினர்கள் எல்லோரும் வந்து இருப்பதால் வேண்டாம் என்று அமைதியாக இனியா வந்து விட்டார். பின் இதைப்பற்றி நிதிஷிடம் இனியா பேசி இருந்தார். வழக்கம் போல நிதிஷ், இனியாவை தவறாக பேசிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். பின் பர்த்டே பார்ட்டிக்கு இனியாவின் குடும்பத்திலிருந்து எல்லோருமே வந்தார்கள். எல்லோருமே சந்தோசமாக தன்னுடைய மகளிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோடில் இனியா பர்த்டே பார்ட்டி முடிந்ததும் பாக்கியா வீட்டில் எல்லோருமே கிளம்பினார்கள். உடனே இனியா, தன்னுடைய அப்பாவை மட்டும் இருக்க சொன்னார். பின் இனியா- கோபி இருவரும் தனியாக பேசி இருந்தார்கள். அப்போது இனியா, நீங்கள் எனக்காக பார்த்த மாப்பிள்ளை எப்படிப்பட்டவர் என்று விசாரித்தீர்களா? உங்களுக்கு அவரைப் பற்றி ஏதாவது தெரியுமா? என்று கேட்டார். கோபிக்கு ஒன்றுமே புரியவில்லை. பின் இனியா, நிதிஷ் போதை பழக்கத்துக்கு அடிமையாகி கைதான விஷயத்தை பற்றி சொன்னார். கோபி பயங்கர ஷாக் ஆனார். பின் இனியா எல்லா ஆதாரங்களையும் காண்பித்தார். இதனால் கோபி ரொம்பவே மனமடைந்து அழுதார்.

நேற்று எபிசோட்:
பின் இனியா-கோபி இருவருமே சுதாகரிடம் நடந்ததை பற்றி கேட்டார்கள். அதற்கு சுதாகர், இது பெரிய விஷயம் இல்லை. தெரியாமல் சின்ன வயதில் தவறு செய்து விட்டான். அதை விட்டு விடுங்கள் என்று கூலாக சொன்னார். இதனால் கோபி- சுதாகர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமானது. கடைசியில் கோபி, என் மகளை என் வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என்றார். அப்போது சுதாகரின் மனைவி, கல்யாணமான உடனே உங்கள் மகள் உங்கள் வீட்டுக்கு வந்தால் நாலு பேர் தப்பாக பேச மாட்டார்களா? என்று சொன்னார். அதற்கு கோபி, எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் இனியா, நான் பார்த்துக்கொள்கிறேன். பிரச்சனை என்றால் உங்களை அழைக்கிறேன். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருங்கள் என்று கோபிக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைக்கிறார். அதற்கு பின் இனியாவிடம் சுதாகர், ரொம்ப நன்றி இனியா. நிதிஷ் சீக்கிரமாகவே மாறிவிடுவான். இந்த வீட்டில் உனக்கு எந்த பிரச்சனையும் வராது என்று சொல்கிறார். அதற்கு இனியா எதுவுமே பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை. அதற்குப் பின் நிதிஷ் வீட்டிற்கு வருகிறார். வழக்கம் போல் அவர் போதை பொருளை பயன்படுத்தி இருக்கிறார். இதை பார்த்த சுதாகர் பயங்கரமாக நிதிஷ் மீது கோபப்படுகிறார். இன்னொரு பக்கம் கோபி தன்னுடைய மகளின் வாழ்க்கையை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
வீட்டிற்கு வந்த கோபி சரியாக யாரிடமும் பேசவில்லை. இதை பார்த்த பாக்கியாவிற்கு சந்தேகம் வருகிறது. பின் பாக்கியா, இனியாவிற்கு ஏதாவது பிரச்சனையா? உங்களை ஏன் தனியாக சந்தித்து பேசினார் என்று கேட்கிறார். ஆனால், கோபி உண்மையை சொல்லாமல் ஏதோ சொல்லி சமாளிக்கிறார். மறுநாள் காலையில் இனியா வேலைக்கு கிளம்பினார். அப்போது நிதிஷ், பிறந்தநாள் பரிசு கொடுக்கிறார். இனியா அதை வாங்கிக்கொண்டு வேலைக்கு கிளம்பினார். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த கோபி, இனியாவை நான் அழைத்து செல்கிறேன் என்கிறார். பின் வரும் வழியில் கோபி, ஏதாவது பிரச்சனையா? என்று கேட்கிறார் அதற்கு இனியா, எந்த பிரச்சினையும் இல்லை. நீங்கள் எதை பற்றியும் கவலைப்படாதீர்கள். நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






