விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி ‘ சீரியலில் கடந்த வாரம், ஈஸ்வரியை மோசமாக பேசியதற்காக பாக்கியா, ராதிகாவிடம் அவர் அம்மாவை பற்றி கோபமாக திட்டி இருந்தார். உடனே ராதிகா, ஈஸ்வரியை பார்த்து தன் அம்மா பேசியதற்கு மன்னிப்பு கேட்டார். ஈஸ்வரி செய்த தவறை சுட்டிக்காட்டி ராதிகா பேசியிருந்தார். இது எல்லாம் கேட்டு ஈஸ்வரி- பாக்கியா கோபப்பட்டார்கள். இது ஒரு பக்கம் இருக்க ரெஸ்டாரண்டில் கோபி மற்றும் செழியன் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
அப்போது செழியன் தன் மன கஷ்டங்களை கோபியிடம் சொல்லி புலம்பி குடிக்கிறார். ஆனால், கோபி அதை தடுக்காமல் அவரை என்கரேஜ் செய்தார். நிலை தடுமாறும் அளவிற்கு செழியன் குடித்து விடுவதால் வீட்டில் கொண்டுவந்து கோபி விடுகிறார். இதைப் பார்த்து ஜெனி, ஈஸ்வரி, பாக்கியா மூவருமே ஷாக் ஆகி நிற்கிறார்கள். அப்போது பாக்கியா, நீங்கள் தான் இதையெல்லாம் அவனக்கு சொல்லித் தருகிறீர்களா? என்று கேட்க, வீட்டில் நிம்மதி இல்லை என்றால் அப்படித்தான் குடிப்பான் என்று கோபி சொல்ல, பாக்கியா பதிலடி கொடுத்திருந்தார்.
பாக்கியலட்சுமி சீரியல் :
மேலும் ஈஸ்வரி, உன் பிள்ளையின் வாழ்க்கையை கெடுக்கிறாயா ? என்று திட்டி இருந்தார். ஆனால், கோபி யார் சொல்வதையும் பற்றி கவலை இல்லாமல் அவர்களுக்கு பதிலடி கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார். பின் நேற்று எபிசோடில், கோபி வீட்டிற்கு வந்த உடனே ராதிகா அம்மா, எதற்காக பாக்கியா வீட்டிற்கு போனீர்கள்? என்று கேட்கிறார். அதற்கு கோபி, உங்களுடைய வேலையை மட்டும் பாருங்கள் என்று பேச இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.
நேற்றைய எபிசொட்:
இன்னொரு பக்கம், எழில் தன்னுடைய வாழ்க்கையை நினைத்து வருத்தப்பட பாக்யா அவருக்கு ஆறுதல் கூறுகிறார். பின், செழியனை நினைத்து ஜெனி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கார். அந்த சமயம் வந்தா செழியன் இடம் பாக்கியா, நீ எதற்கு இப்படி எல்லாம் செய்கிறாய்? உனக்கு என்ன பிரச்சனை? போராடி குறித்த உன் வாழ்க்கையை கெடுத்துக்காதே என்று அறிவுரை சொல்லி புரிய வைக்கிறார். பின் வீட்டில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். அப்போது இனியா, தன்னுடைய நடனப் போட்டியை பற்றி பேச, எல்லாரும் கிண்டல் கேலி செய்து கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய எபிசொட்:
.இந்நிலையில் இன்றைய எபிசோடில், இனியாவின் நடனப் போட்டியை காண்பதற்கு பாக்யா தன் மாமியாரை கிளம்ப சொல்கிறார். ஆனால், ஈஸ்வரி போட்டியை காண செல்ல மறுக்கிறார். ஆனால், பாக்கியா தன் மாமியாரை புது புடவை கட்ட சொல்லி வற்புறுத்த, ஈஸ்வரியும் மறுக்க முடியாமல் போட்டிக்கு செல்ல தயாராக இருக்கிறார். அந்த சமயம் பார்த்து வந்த அமிர்தாவின் அம்மா , ஈஸ்வரியிடம் மற்றவர்களைப் போலவே கணவர் இறந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை அதற்குள் எங்கும் வெளியே போகக்கூடாது என்று அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார்.
சீரியல் ட்ராக் :
பின் பாக்கியா, அமிர்தாவின் அம்மாவை திட்டி அனுப்புகிறார். இதையெல்லாம் கேட்டு வருத்தமடைந்த ஈஸ்வரி, போட்டிக்கு செல்ல மறுக்கிறார். பின் இனியா நடனப் போட்டியில் கலந்துகொண்டு நன்றாக ஆடுகிறார். இனியா ஆடும் போது கோபி கீழே இருந்தே என்கரேஜ் செய்து கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்த்த எழில் கோபியை தனது அம்மாவிடம் திட்டுகிறார். கடைசியில், சென்னையிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து போட்டியாளர்களில், இனியாவும் செலக்ட் ஆகிறார். இதைக் கேட்டவுடன் அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.