விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ஈஸ்வரி ரொம்ப மோசமாக பாக்கியாவை வேலைக்கு செல்லக்கூடாது என்று திட்டி விட்டார் உடனே ஆவேசப்பட்ட பாக்கியா, எல்லாம் பேசி முடித்து விட்டீர்களா? எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். எல்லா பிரச்சனைக்குமே நான் மட்டும் பொறுப்பேற்க முடியாது. உங்கள் மகனும் தான் பொறுப்பு. எல்லாத்திற்கும் என்மீது குறை சொல்லாதீர்கள் என்று ஈஸ்வரியை எதிர்த்து பேசிவிட்டு அங்கிருந்து சென்றார். இதைக் கேட்டு ஈஸ்வரி ஷாக் ஆகி கோபியிடம் புலம்பி இருந்தார்.
அதற்குப்பின் பாக்கியா ரெஸ்டாரண்ட் கிளம்பி போனார். அங்கு செல்வியை தேடினார். ஆனால், அவர் இல்லை. அதற்கு பின் செல்வி வீட்டிற்கு பாக்கியா சென்றார். அங்கு செல்வி, பாக்யாவிடம் மன்னிப்பு கேட்டு ரொம்பவே எமோஷனலாக கதறி அழுதார். பின் ஆகாசிடம் பாக்கியா, உன் படிப்பில் கவனம் செலுத்து. அதுதான் உன்னுடைய வாழ்க்கைக்கு நல்லது. இனியாவிடமும் நான் அதை தான் சொல்லி இருக்கிறேன். இரண்டு பேருமே இனி பேசக்கூடாது, படிப்பில் கவனம் செலுத்துங்கள் என்று சத்தியம் வாங்கிக் கொண்டார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோடில் ஆகாஷ், இனியாவிற்கு போன் செய்தார். இதனால் ஆவேசத்தில் கோபி, செழியன் இருவரும் செல்வியின் வீட்டுக்கு சென்றார்கள். அப்போது கோபத்தில் செழியன் ஆகாஷை அடித்தார். ஆகாஷ் சொல்வதைக் கேட்காமல் கோபி, செழியன் இருவரும் கோபப்பட்டு திட்டி இருந்தார்கள். ஒரு கட்டத்தில் செழியன், கட்டை எடுத்து ஆகாஷ் தலையில் அடித்து விட்டார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஆகாசிற்கு சப்போர்ட் செய்ய, செழியன்- கோபி அங்கிருந்து சென்று விட்டார்கள். அதற்குப்பின் ஆகாஷை ஹாஸ்பிடலில் சேர்த்துவிட்டு செல்விக்கு தகவலை சொன்னார்கள். உடனே செல்வி, பாக்கியா இருவரும் ஹாஸ்பிடலுக்கு வந்தார்கள்.
நேற்று எபிசோட்:
அப்போது நடந்ததை செல்வி இடம் சொல்ல, அவர் ரொம்ப வருத்தப்பட்டார். கோபத்தில் கொந்தளித்த பாக்கியா வீட்டிற்கு வந்து செழியன் இடம் பேசி இருந்தார். அப்போது அவர், எதற்கு ஆகாஷை அடித்தாய்? அவனை அடிக்கும் உரிமை உனக்கு யார் கொடுத்தது? என்று கேட்க, வீட்டில் எல்லோருமே ஷாக் ஆகி இருந்தார்கள். ஈஸ்வரி-கோபி இருவரும் செழியனுக்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார்கள். அதற்கு பாக்கியா, ஒரு அப்பாவாக பிள்ளைகளுக்கு நல்ல அறிவுரை சொல்லி வளர்க்கனும், ரவுடிசத்திற்கு அழைத்து செல்லக்கூடாது என்று கோபியை திட்டி இருந்தார். ஆனால், செழியன் இன்னும் மோசமாக ஆகாஷை பேச, ஆத்திரம் தாங்க முடியாமல் பாக்கியா செழியினை அடிக்க கை ஓங்கி இருந்தார். ஆனால் அடிக்கவில்லை, செழியனை திட்டி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் செழியன், இன்னொரு முறை ஆகாஷ் இனியாவிடம் பேசுவது தெரிந்தால் நான் வெட்டி போடுவேன் என்று ஆவேசப்பட்டார். உடனே கோபத்தில் பாக்கியா செழியனை அடித்து விட்டார். இதனால் மொத்த பேருமே சாக்கு ஆகி இருந்தார்கள். அப்போது ஜெனி, எதற்காக செழியினை அடிக்கிறீர்கள்? அவன் என்ன தவறு செய்தான்? என்று பேசுகிறார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே செழியனுக்கு சப்போர்ட் செய்கிறார்கள். ஆனால் பாக்கியா சொல்ல வருவதை யாருமே கேட்கவில்லை. இதனால் கோபித்துக் கொண்டு ஜெனி-செழியன் இருவரும் உள்ளே சென்று விடுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் பாக்கியா, இனியாவிற்கு ஆறுதல் சொல்லி அவளை சமாதானம் செய்கிறார். அதற்குப்பின் எழில், ஹாஸ்பிடலில் ஆகாசை பார்க்கப் போகிறார். அப்போது எழில், நடந்ததற்காக மன்னிப்பு கேட்டு செல்விக்கு ஆறுதல் சொல்கிறார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த எழிலிடம் கோபி- ஈஸ்வரி இருவரும் சண்டை போடுகிறார்கள். இனிமேல் இந்த வீட்டிலிருந்து யாரும் ஆகாஷை செல்வியை பார்க்க போகக்கூடாது என்று சொல்கிறார்கள். இதனால் வீட்டில் மாற்றி மாற்றி ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து அதிகமாகின்றது. உடனே இனியா, என்னால் தான் எல்லா பிரச்சனையும் நடக்கிறது. தயவு செய்து யாரும் சண்டை போடாதீர்கள். இனி நான் ஆகாஷ் உடன் பேசமாட்டேன். நான் இங்கு இருப்பது பிடிக்கவில்லை என்றால் நான் வீட்டை விட்டு வெளியே போகிறேன் என்றெல்லாம் பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.