பாக்கியலட்சுமியில் இருந்து விலகியது ஏன் – முதன் முறையாக வீடியோ மூலம் விளக்கமளித்த ஜெனி.

0
3361
jeni
- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து அந்த தொடரில் நடித்து வந்த ஜெனிபர் வீடியோ ஒன்றின் மூலம் விளக்கமளித்துள்ளார். தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆனால், விஜய் தொலைக்காட்சி படங்களில் தலைப்பில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வெற்றியை கண்டு வருகிறது. அந்த வகையில் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் கடந்த ஜூலை மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-10.png

இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும் அவரது கணவராக சதீசும் நடித்து வருகிறார். அதே போல இந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஜெனிபர். பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் அம்மன் சீரியலிலும் நடித்து வருகிறார். ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ பாக்கியலக்ஷ்மி தொடர் தான்.

- Advertisement -

நடிகை ஜெனிபர் ஆரம்பத்தில் ஒரு குரூப் டான்சராக தான் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் ஷாம் நடிப்பில் வெளியான ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்க ‘ படத்தில் இடம்பெற்ற யாமினி என்ற பாடலிலும் வந்து இருப்பார். ஆனால், சினிமாவில் சரியாக வாய்ப்பு அமையாததால் சீரியல் பக்கம் திரும்பினார். இப்படி ஒரு நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து ஜெனி விலகி இருந்தார்.

அவருக்கு பதிலாக பிக் பாஸ் நடிகை ரேஷ்மா நடித்து வருகிறார். ஆனால், பழைய ராதிகா, ஜெனி தான் வேண்டும் என்று ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர். மேலும், ஜெனியிடம் ஏன் விலகிவிட்டீர்கள் என்று ரசிகர்கள் பலரும் கேட்டு வந்த நிலையில் இது குறித்து வீடியோ மூலம் விளக்கமளித்துள்ள ஜெனி, பாக்கியலட்சுமி சீரியல் மற்ற மொழிகளிலும் சென்று கொண்டு இருக்கிறது. தற்போது அதே ட்ராக்கில் இந்த சீரியலும் செல்வது எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் நானாக இந்த சீரியலில் இருந்து விலகியதாக கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement