விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி என்று சுற்றி கொண்டிருக்கிறார். பின் ராதிகா கர்ப்பமாக இருந்த உண்மை வீட்டில் எல்லோருக்கும் தெரிந்து அதிர்ச்சி ஆகி இருந்தார்கள். ஈஸ்வரிக்கு, ராதிகா குழந்தையை பெற்று கொள்வதில் விருப்பம் இல்லை, கலைத்து விடு என்று சொன்னார். இறுதியில் கோபி, ஈஸ்வரியை தன்னோடு அழைத்து கொண்டு ராதிகா வீட்டிற்கு சென்று இருந்தார்.
அதற்கு பின் வீட்டில் கலவரங்கள் நடந்தது. கடந்த வாரம், கால் தடுமாறி ராதிகா கீழே விழுந்ததால் கர்ப்பம் கலைந்தது என்று மருத்துவர்கள் சொன்னார்கள். இதனைக் கேட்டு கோபமடைந்த ராதிகா, ஈஸ்வரியை பயங்கரமாக திட்டி தீர்த்தார். அதேசமயம் ராதிகா அம்மா, கோபி எல்லோரும் ஈஸ்வரியை தான் திட்டி இருந்தார்கள். பின் கோபி, தன் அம்மாவை வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். மனமுடைந்த ஈஸ்வரி, பாக்கியா வீட்டிற்கு வந்து விட்டார். இருந்தாலும் கோபி சொன்னதை நினைத்து அழுது கொண்டே இருந்தார் ஈஸ்வரி. இந்த நேரத்தில் ராதிகா அம்மா, போலீஸ் ஸ்டேஷனில் ஈஸ்வரி மீது புகார் கொடுத்து விட்டார்.
பாக்கியலட்சுமி சீரியல்:
இதனால் போலீசும் ஈஸ்வரியை கைது செய்தது. ராதிகா, கமலா மீது கோபி பயங்கரமாக கோபப்படுகிறார்.
மேலும், நீதிமன்றத்தில் ஈஸ்வரி, நான் எந்த தவறும் செய்யவில்லை என்று அழுகிறார். அதை அடுத்து ராதிகா, கோபியிடம் விசாரித்தார்கள். எல்லா பக்கமும் ஈஸ்வரிக்கு எதிராக இருந்தது. இதனால் ஈஸ்வரியை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். என்ன செய்வது என்று புரியாமல் பாக்கியா குடும்பம் திகைத்துப் போய் நின்றது. அப்போது பார்க்கில் இருந்த மையூ, என்னுடைய அம்மா பூ ஜாடி தடிக்கி தான் கீழே விழுந்தார்.
நீதிபதி தீர்ப்பு:
ஈஸ்வரி பாட்டி தள்ளிவிடவில்லை. அவர் காப்பாற்ற தான் சென்றார். அதை நான் பார்த்தேன் என்று சொன்னதைக் கேட்டு பாக்கியா அதிர்ச்சி ஆகிறார். நேற்று எபிசோடில் மயூ சொன்ன சாட்சியை ஏற்று நீதிமன்றம் ஈஸ்வரி வழக்கை தள்ளுபடி செய்து விடுகிறது. ஈஸ்வரியும் விடுதலை ஆகிறார். மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், ராதிகா- கமலா கோபத்தில் இருக்கிறார்கள். ஒரு வழியாக ஈஸ்வரி வீட்டுக்கு வந்து விடுகிறார்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோடில் ராதிகா கோர்ட்டில் நடந்ததை மயூ இடம் விசாரிக்கிறார். அப்போது அவர், ஆமாம், பாட்டி தள்ளவில்லை என்று மீண்டும் அதையே சொல்கிறார். அதற்கு ராதிகா, இதை ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கேட்டதற்கு நீங்கள் எல்லாம் சண்டை போட்டு இருந்தீர்கள். எனக்கு அப்போது பயமாக இருந்தது என்று சொல்கிறார். பின் கமலாவை பார்த்து ராதிகா, எதற்கு பொய் கேஸ் போட்டீர்கள்? என்று கேட்க ? அந்த அம்மா தள்ளி இருப்பார் என்று நினைத்து சொன்னேன், மயூவை பொய் சொல்ல வைத்திருக்கிறார்கள் என்று சமாளிக்கிறார்.
சீரியல் ட்ராக்:
இருந்தாலுமே, ராதிகா பயங்கரமாக கோபப்பட்டு கமலாவிடம் பேசுகிறார். இன்னொரு பக்கம் கோபி பாரில் உட்கார்ந்து தன்னுடைய அம்மாவை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். பின் வீட்டில் எல்லோருமே உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். ஈஸ்வரியும் உட்கார்ந்து சாப்பிடுகிறார். அந்த சமயம் கோபி வீட்டிற்கு வருகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது. இனி வரும் நாட்களில் ஈஸ்வரி, கோபியை மன்னிப்பாரா? ராதிகா- கோபி இடையே விரிசல் ஏற்படுமா? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.