விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி என்று சுற்றி கொண்டிருக்கிறார். பின் ராதிகா கர்ப்பமாக இருந்த உண்மை வீட்டில் எல்லோருக்கும் தெரிந்து அதிர்ச்சி ஆகி இருந்தார்கள். இறுதியில் கோபி, ஈஸ்வரியை தன்னோடு அழைத்து கொண்டு ராதிகா வீட்டிற்கு சென்று இருந்தார்.

கடந்த வாரம், கால் தடுமாறி ராதிகா கீழே விழுந்ததால் கர்ப்பம் கலைந்தது என்று மருத்துவர்கள் சொன்னார்கள். இதனைக் கேட்டு கோபமடைந்த ராதிகா, ஈஸ்வரியை பயங்கரமாக திட்டி தீர்த்தார். பின் கோபி, தன் அம்மாவை வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். மனமுடைந்த ஈஸ்வரி, பாக்கியா வீட்டிற்கு வந்து விட்டார். இந்த நேரத்தில் ராதிகா அம்மா, போலீஸ் ஸ்டேஷனில் ஈஸ்வரி மீது புகார் கொடுத்து விட்டார். இதனால் போலீசும் ஈஸ்வரியை கைது செய்தது. மேலும், நீதிமன்றத்தில் எல்லா பக்கமும் ஈஸ்வரிக்கு எதிராக இருந்தது. இதனால் ஈஸ்வரியை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். என்ன செய்வது என்று புரியாமல் பாக்கியா குடும்பம் திகைத்துப் போய் நின்றது.
பாக்கியலட்சுமி சீரியல்:
அப்போது பார்க்கில் இருந்த மையூ, என்னுடைய அம்மா பூ ஜாடி தடிக்கி தான் கீழே விழுந்தார். ஈஸ்வரி பாட்டி தள்ளிவிடவில்லை. அவர் காப்பாற்ற தான் சென்றார். அதை நான் பார்த்தேன் என்று சொன்னதைக் கேட்டு பாக்கியா அதிர்ச்சி ஆகிறார். மேலும், மயூ சொன்ன சாட்சியை ஏற்று நீதிமன்றம் ஈஸ்வரி வழக்கை தள்ளுபடி செய்தது. ஈஸ்வரியும் விடுதலை ஆகிறார். மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருக்கிறது. ஒரு வழியாக ஈஸ்வரி வீட்டுக்கு வந்து விட்டார். பின் ராதிகா கோர்ட்டில் நடந்ததை மயூ இடம் விசாரித்தார். அதன் பின் கமலாவை பார்த்து ராதிகா, எதற்கு பொய் கேஸ் போட்டீர்கள்? கோபப்பட்டு பேசி இருந்தார்.

சீரியல் ட்ராக்:
மேலும், கோபி, தன்னுடைய அம்மா ஈஸ்வரிடம் மனம் விட்டு அழுது மன்னிப்பு கேட்டார். ஆனால், கோபத்தில் ஈஸ்வரி, இனி எனக்கு மகனே இல்லை. எனக்கு இருப்பது ஒரே மகள் பாக்யா தான். நான் இறந்த பிறகு கூட என்னுடைய சாவிற்கு நீ வரக்கூடாது என்று தலையில் தண்ணீர் எடுத்து ஊற்றிக் கொள்கிறார். இதை பார்த்து வீட்டில் உள்ள எல்லோருமே அதிர்ச்சி ஆனார்கள். கோபி எதுவும் பேச முடியாமல் மனம் நொந்து வெளியே வந்து விட்டார். பின் ராதிகா வீட்டிற்கு வந்து அழுது கொண்டிருந்தார். ராதிகா, நான் தெரியாமல் செய்து விட்டேன். சாரி என்று கேட்டவுடன் ஒரே சாரியில் எல்லாம் முடிந்ததா? என்று கோபி வேதனையில் பேசி இருந்தார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோடில், கோபி தன் அம்மாவை நினைத்து புலம்பி அழுது கொண்டிருந்தார். ராதிகா எவ்வளவோ மன்னிப்பு கேட்டும் கோபி ஏற்கவில்லை. அடுத்த நாள் ராதிகா, கோபத்தில் பாக்கியாவை திட்டி விடுகிறார். இன்னொரு பக்கம், வீட்டில் ஈஸ்வரி நடந்ததை நினைத்துக் கொண்டே இருந்தார். அவருடைய கணவர் ஆறுதல் சொன்னார். அந்த சமயம் பார்த்து கோபி வீட்டிற்கு மீண்டும் வருகிறார். கோபியை பார்த்தவுடன் ஈஸ்வரி அவருடைய கணவர் இருவருமே கோபத்தில் திட்டினார்கள். எவ்வளவோ பேசி மன்னிப்பு கேட்கிறார். இருந்தாலுமே, ஈஸ்வரி மனம் மாறாமல் கோபியை வெளியே போ என்று சொல்லி கதவை மூடி விடுகிறார்.

இன்றைய எபிசோட்:
இன்னொரு பக்கம் பாக்கியா தன் பிள்ளைகளிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது எழில், என்னுடைய கதையை வேணாம் என்று ரிஜெக்ட் செய்து விட்டார்கள் என்று வருத்தத்தில் பேசுகிறார். அமிர்தா- பாக்கியா இருவரும் அவருக்கு ஆறுதல் சொல்கிறார்கள். பின் வீட்டில் கோபி, ரொம்ப கஷ்டப்பட்டு ராதிகாவிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது ராதிகா, யாரை கேட்டு பாக்கியா என் மகளை கோர்ட்டுக்கு அழைத்து வந்தார்? இது ரொம்ப தவறான செயல் என்று பேசும்போது கோபி, அப்போ என் அம்மா வெளியில் வந்தது உனக்கு சந்தோஷம் இல்லையா? மயூ வந்தது தான் கஷ்டமா? என்று கேட்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது. இனிவரும் நாட்களில் கோபி- ராதிகா இடையே விரிசல் ஏற்படுமா? எழிலுக்கு சினிமா வாய்ப்பு கிடைக்குமா? போன்ற விறுவிறுப்பான கட்டத்தில் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.






