விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னணியில் இருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தொடங்கிய நாள் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்கிறார். விவாகரத்துக்கு பின் பாக்யா சமையல், ஹோட்டல் பிசினஸ் என்று பிசியாக ஓடி கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் ராதிகா கர்ப்பமாக இருந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக கால் தடுமாறி ராதிகா கீழே விழுந்ததால் கர்ப்பம் கலைந்து விட்டது.
மேலும், இதற்கு ஈஸ்வரி தான் காரணம் என்று எல்லோரும் பழி போட்டார்கள். இந்த நேரத்தில் ராதிகாவின் அம்மா, ஈஸ்வரி மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துவிட்டார். இதனால் போலீசும் ஈஸ்வரியை கைது செய்தது. கடைசியில் ராதிகாவின் மகள் மையூ சொன்ன சாட்சியால் ஈஸ்வரி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்காக ராதிகா கமலா மீது கோபப்பட்டு பேசியிருந்தார். அதனால், கமலாவும் வீட்டை விட்டு சென்று விட்டார்.
பாக்கியலட்சுமி சீரியல்:
பின் கோபி, தனது அம்மா ஈஸ்வரி இடம் அழுது மன்னிப்பு கேட்டார். ஆனால், ஈஸ்வரி ‘இனி நீ எனக்கு மகனே இல்லை. எனக்கு இருப்பது ஒரே மகள் பாக்கியா தான். நான் இறந்த பிறகு கூட என்னுடைய சாவிற்கு கூட நீ வரக்கூடாது’ என்று கூறிவிட்டார். கோபியும் எதுவும் பேச முடியாமல் மனம் நொந்து ராதிகா வீட்டிற்கு வந்து விட்டார். இந்த சூழ்நிலையில் சென்னையில் நடக்கும் சமையல் போட்டியில், பாக்கியா – கோபி இருவரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இனியா செய்த வேலை:
இன்னொரு பக்கம் இனியா, தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து படிக்க செல்கிறேன் என்று பொய் சொல்லி பாட்டில் ஆட்டம் போடுகிறார். அப்போது, இனியா போன் எடுக்கவில்லை என்ற பதட்டத்தில் செழியனிடம் சொல்லி இனியாவை தேட சொல்கிறார் பாக்கியா. ஆனால், பார்ட்டியில் நடந்த பிரச்சினையால் போலீஸ் அனைவரையும் கைது செய்கிறது. அந்த சமயம் அங்க வந்த ராதிகா இனியாவை காப்பாற்றுகிறார். பின் ராதிகா, பாக்கியாவை வர வைத்து நடந்ததை சொல்கிறார். அதைக் கேட்டு பாக்கியா உடைந்து விடுகிறார்.
நேற்றைய எபிசோட்:
பின் ராதிகா, பாக்கியாவிடம் மையூவை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்ததற்காக ஜாடையாக திட்டுகிறார். நேற்று எபிசோடில், சமையல் போட்டியில் கோபி வெற்றி பெற்று விடுகிறார். அதனால் செல்வியிடம், பாக்கியாவை கிண்டலடித்து பேசியிருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் எல்லாருமே இனியாவை திட்டிக் கொண்டிருந்தார்கள். ஈஸ்வரி வழக்கம்போல் இனியாவை திட்டி விட்டு பாக்கியாவை தான்குறை சொன்னார். இன்னொரு பக்கம், இனியாவுக்கு என்ன ஆனது என்று செழியன் மூலம் கோபி தெரிந்து கொள்கிறார்.
இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோடில், பாக்கியா இனியாவிடம் போய் சமாதானம் செய்து அவருக்கு அறிவுரை சொல்கிறார். கோபி, இனியாவை காப்பாற்றியதற்காக ராதிகாவிடம் நன்றி சொல்கிறார். அந்த சமயம் கோபியிடம் ராதிகா கோபமாக பேசுகிறார். அடுத்த நாள் காலையில் கோபி, பாக்கியா வீட்டிற்கு வந்து இனியாவிடம் நலம் விசாரிக்கிறார். பின், இதுதான் நீ குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் லட்சணமா என்று கேட்கிறார் பாக்கியாவை திட்டுகிறார். பாக்கியாவும் பதிலுக்கு கோபியை திட்டுகிறார். கடைசியில் கோபி, இனியாவிடம் நீ அப்பாவோடு வந்துவிடு. நான் உன்னை நன்றாக பார்த்துக் கொள்கிறேன் என்று கூறுகிறார். இனி வரும் நாட்களில், இனியா கோபியுடன் செல்வரா? பாக்கியா எடுக்கப் போகம் முடிவு என்ன? போன்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கிறது.