பாக்கியாவை திட்டும் கோபி, இனியாவுக்கு காத்திருந்த புது ப்ரச்சனை- விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

0
377
- Advertisement -

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி என்று சுற்றி கொண்டிருக்கிறார். பின் ராதிகா கர்ப்பமாக இருந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக கால் தடுமாறி ராதிகா கீழே விழுந்ததால் கர்ப்பம் கலைந்து விட்டது. இதனால் ராதிகா அம்மா, போலீஸ் ஸ்டேஷனில் ஈஸ்வரி மீது புகார் கொடுத்து இருந்ததால் அவரை கைது செய்தது.

-விளம்பரம்-

பின் மயூ சொன்ன சாட்சியை ஏற்று நீதிமன்றம் ஈஸ்வரி வழக்கை தள்ளுபடி செய்தது. மொத்த குடும்பமும் சந்தோஷமாகி இருக்கிறது. பின் ராதிகா, கமலா மீது கோபப்பட்டு பேசியதால் வீட்டை விற்று சென்று விட்டார். கோபி, தன்னுடைய அம்மாவிடம் அழுது மன்னிப்பு கேட்டார். ஆனால், கோபத்தில் ஈஸ்வரி, இனி எனக்கு மகனே இல்லை. எனக்கு இருப்பது ஒரே மகள் பாக்கியா தான் என்று தலையில் தண்ணீர் எடுத்து ஊற்றிக் கொண்டார். கோபி எதுவும் பேச முடியாமல் மனம் நொந்து வெளியே வந்து விட்டார். இந்த சூழ்நிலையில் சென்னையில் சமையல் போட்டி நடக்கிறது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

அதில் பாக்கியா-கோபி இருவரும் கலந்து கொண்டு இருந்தார்கள். சமையல் போட்டியும் மும்முரமாக நடைபெற்றது. இன்னொரு பக்கம் இனியா, தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து படிக்க செல்கிறேன் என்று பொய் சொல்லி பார்ட்டியில் ஆட்டம் பாட்டம் என்று சந்தோசமாக இருந்தார். ஆனால், பார்ட்டியில் நண்பர்களுக்குள் இடையில் சண்டை வந்ததால் போலீசிக்கு தகவலை சொல்லி இருந்தார்கள். போலீஸ் வந்து அனைவரையுமே கைது செய்ய பார்த்தது. அந்த சமயம் அங்கு வந்த ராதிகாவிடம் நடந்தது குறித்து இனியா சொல்லி அழுந்தார்.

ராதிகா செய்த வேலை:

பின் ராதிகா, இனியாவை காப்பாற்றுகிறார். அதற்கு பின் ராதிகா, பாக்கியாவை வர வைத்து நடந்ததை சொன்னார். அதை கேட்டு பாக்யா உடைந்து போய் எதுவும் பேசாமல் கையெடுத்து கும்பிட்டு நன்றி என்று ராதிகாவிடம் சொன்னார். கடைசியில் சமையல் போட்டியில் கோபி நன்றாக சமைத்து வெற்றி பெற்று விடுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோருமே இனியாவை திட்டி இருந்தார்கள். நடந்ததை நினைத்துப் பார்த்த பாக்கியா, இனியாவை அடித்து உன்னால் தான் எல்லா பிரச்சனையும் வருகிறது என்று திட்டி அழுது இருந்தார்.

-விளம்பரம்-

நேற்று எபிசோட்:

மேலும், இனியா நடந்ததை நினைத்து வருத்தப்பட்டார். பின் கோபி, நடந்ததை செழியன் மூலம் தெரிந்து கொண்டு இனியாவை பற்றி நினைத்து வருத்தப்படுகிறார். நேற்று எபிசோட்டில், கோபி வீட்டிற்கு வந்து பாக்கியாவை திட்டி சண்டை போடுகிறார். பின் இனியாவை, நான் என்னுடனே அழைத்து செல்கிறேன். நீங்கள் ஒழுங்காக பார்த்துக் கொள்ளவில்லை என்று சொன்னவுடன் ஈஸ்வரிக்கு கோபம் வந்து அவள் கையை விடு, வெளியே போ, எங்கள் வீட்டு பெண்ணை பார்த்துக் கொள்ள எங்களுக்கு தெரியும் என்று சொல்கிறார். இருந்தாலுமே, கோபி என் மகளை அழைத்துச் செல்வேன் என்று நிற்கிறார்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இனியா, நான் வரவில்லை. அம்மாவுடன் இருக்கிறேன் என்று சொன்னவுடன் கோபி எதுவும் பேசாமல் வெளியே போகிறார். கோபியும் வருத்தத்துடன் சென்று விடுகிறார். பின் ராதிகா, உங்கள் வீட்டில் உங்களை மதிப்பதே இல்லை, ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்று கோபியை திட்டிவிட்டு செல்கிறார். கடைசியில் கல்லூரியில், பார்ட்டிக்கு சென்ற மாணவர்களின் பெற்றோர்கள் வரவேண்டும், அதற்கு பிறகுதான் உங்களை வகுப்பில் சேர்த்துக் கொள்வேன் என்று சொல்லிவிடுகிறார்கள். இதனால் இனியா கோபிக்கு கால் செய்கிறார். இனி இனியாவுக்கு புதிய பிரச்சனை வருமா? கல்லூரியில் நடந்த விவகாரம் பாக்யாவுக்கு தெரிய வருமா? போன்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது

Advertisement