விஜய் டிவியில் டி.ஆர்.பி யில் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா என பலர் நடித்து வருகிறார்கள். சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி என்று சுற்றி கொண்டிருக்கிறார்.
பின் கோபியும் பாக்கியாவிற்கு போட்டியாக ரெஸ்ட்ராண்ட் திறந்தார். இன்னொரு பக்கம் ராதிகா கர்ப்பமாக இறந்தார். பின் வீட்டில் எல்லோருக்கும் இந்த உண்மை தெரிந்து அதிர்ச்சி ஆகி கோபியை திட்டினார்கள். ஈஸ்வரிக்கு, ராதிகா குழந்தையை பெற்று கொள்வதில் விருப்பம் இல்லை, கலைத்து விடு என்று சொன்னார். இறுதியில் கோபி, ஈஸ்வரியை தன்னோடு அழைத்து கொண்டு ராதிகா வீட்டிற்கு சென்று இருந்தார். இதனால் கடந்த சில வாரங்களாக ஈஸ்வரி, ராதிகா அம்மா இடையே கலாட்டா கலவரங்கள் நடந்தது.
பாக்கியலட்சுமி சீரியல்:
ஈஸ்வரி வந்தது ராதிகா அம்மாவிற்கு பிடிக்கவில்லை. இப்படி இருக்கும் நிலையில், ராதிகா கால் தடுமாறி கீழே விழுந்ததில் கர்ப்பம் கலைந்து விடுகிறது. இதனால் கோபமடைந்த ராதிகா, உங்க அம்மா தான் என்னை தள்ளிவிட்டார். உங்க அம்மா தான் என் குழந்தையை கொன்று விட்டார். குழந்தை வேண்டாம் என்று சொல்லி சொல்லி கடைசியில் குழந்தையே இல்லாமல் போய்விட்டது என்று சொன்னார். ராதிகா அம்மா பயங்கரமாக ஈஸ்வரியை திட்டி இருந்தார். இதையெல்லாம் கேட்டு கோபி, தன் அம்மா மீது கோபப்பட்டு வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார்.
ராதிகா அம்மா கொடுத்த புகார்:
ஈஸ்வரி, நான் எதையும் செய்யவில்லை என்று அழுது புலம்பியும் நம்மபவில்லை. இதனால் அவர் மனம் உடைந்து விட்டார். பின் அவரை பாக்கியா, வெளியில் அழைத்து சென்றார். அந்த சமயம் பார்த்து ராதிகா அம்மா, போலீஸில் ஈஸ்வரி மீது கொலை முயற்சி புகார் கொடுத்து இருந்தார். இதனால் போலீஸ், ஈஸ்வரியை கைது செய்கிறார்கள். இதை பார்த்து மொத்த குடும்பமே அதிர்ச்சி ஆகிறது. பின் கோபியை அவருடைய அப்பா பயங்கரமாக அடிக்கிறார்.
சீரியல் ட்ராக்:
ஈஸ்வரிக்கு ஜாமீன் கேட்டு எல்லோரும் அழைக்கிறார்கள். ஆனால், ஜாமீன் கிடைக்கவில்லை. பின் போலீஸ் ஸ்டேஷனில் எல்லோருமே கதறி கதறி அழுது கொண்டிருக்கிறார்கள். கோபிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இந்நிலையில் இன்றைய எபிசோடில், வீட்டிற்கு வந்த கோபி, ராதிகா மற்றும் அவருடைய அம்மாவிடம் கோபப்பட்டு கத்தி எல்லாத்தையும் போட்டு உடைக்கிறார். ராதிகாவை பயங்கரமாக திட்டுகிறார்.
இன்றைய எபிசோட்:
என்னுடைய அம்மாவிற்காக யாரை வேண்டுமானாலும் கொலை செய்து நானும் ஜெயிலுக்கு போவேன் என்றெல்லாம் பேசி விட்டு சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் ஈஸ்வரியை நினைத்து எல்லோருமே அழுகிறார்கள். என்ன செய்வதென்று புரியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஜெயிலில் ஈஸ்வரியை போலீஸ் கடுமையாக மிரட்டி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். பயத்தில் ஈஸ்வரியும் அழுது கொண்டிருக்கிறார். இனிவரும் நாட்களில் ஈஸ்வரி வெளியே வருவாரா? கோபி என்ன செய்யப் போகிறார்? ராதிகா எடுக்கும் முடிவு என்ன? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது