விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் இனியா, எனக்கு நிதிஷ் போதை பொருள் வழக்கில் கைதான விஷயம் தெரியும். அவர் திருமணத்திற்கு முன்பே அதை பயன்படுத்தி தான் இருந்தார். காலேஜ் படிக்கும்போதே அவர் கைதாகி சிறைக்கு எல்லாம் சென்றிருந்தார். இந்த விஷயத்தை நான் அப்பாவிடம் சொல்லி விட்டேன். நீங்களும் பாட்டியும் கஷ்டப்படுவீர்கள் என்று தான் சொல்லவில்லை என்றார். இதை கேட்டவுடன் ஈஸ்வரிக்கு பயங்கர அதிர்ச்சி. பாக்கியாவுமே வேதனையில் கதறி அழுதார். பின் கோபி, நானே என் மகளின் வாழ்க்கை கெடுத்துவிட்டேன் என்று கோபப்பட்டார் . பாக்கியா, இனிமேல் இதை பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை என்று சொன்னார்.

இனியா, என்னை பிடித்து போய் நிதிஷ் திருமணம் செய்யவில்லை. சுதாகருக்கு அம்மாவின் ரெஸ்டாரண்டை எப்படியாவது வாங்க வேண்டும். அதேபோல் போதைக்கு அடிமையான தன் மகனுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் என்னை பெண் கேட்டு வந்தார்கள் என்று எமோஷனலாக கதறி அழுதார். இதைக் கேட்டவுடன் பாக்கியாவுக்கு ஆத்திரம் தாங்கவே முடியவில்லை. அவள் காதலித்தால் என்பதற்காக இப்படி எதையும் விசாரிக்காமல் திருமணத்தை பண்ணி வைத்து என் மகள் வாழ்க்கையை வீணடித்து விட்டீர்களே என்று ஈஸ்வரி, கோபியை பார்த்து கேட்டார். கோபி, என் மீது தான் தவறு என்று அழுதார்.
பாக்கியலட்சுமி:
பின் சுதாகர் வீட்டிற்கு சென்ற பாக்கியா, கோபி இருவரும் தன் மகளுக்கு நடந்த அநீதிக்காக நியாயம் கேட்டு பேசி இருந்தார்கள். ஆனால், சுதாகர் அவர் மனைவி இருவருமே அதைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஏளனமாக பேசினார்கள். அதிலும் சுதாகரின் மனைவி, இனியாவின் நடத்தை பற்றி ரொம்ப கேவலமாக பேசினார். இதனால் பொங்கி எழுந்த பாக்கியா, என் மகளின் நடத்தியை பற்றி குறை சொல்ல யாருக்கும் எந்த அருகதையும் இல்லை. பொறுக்கியை பெற்று வைத்துவிட்டு பேசுகிறீர்களா? என்று சுதாகரையும் அவருடைய மனைவியையும் வெளுத்து வாங்கி இருந்தார். கோபியுமே பாக்கியா பேசுவது சரி என்பது போல அவருக்கு சப்போர்ட் செய்தார். கடைசியில் பாக்கியா, எல்லாத்திற்கும் நீங்கள் பதில் சொல்லித்தான் ஆகணும். இனி உங்களை சும்மா விட மாட்டேன் என்று சவால் விட்டார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் வீட்டிற்கு வந்த பாக்கியா, கோபியிடம் என்ன நடந்தது என்று விசாரித்தார்கள். அப்போது கோபி, நான் தான் ஒழுங்காக விசாரிக்காமல் இனியாவை கல்யாணம் செய்து கொடுத்துவிட்டேன். அவர்கள் முன்பு பேசினது ஒரு மாதிரியாக இருக்கு இப்போ வேற மாதிரி பேசி இருந்தார்கள். அவருடைய சுயரூபமே இப்போ வெளியே வந்தது. நான் அவர்களை சும்மா விட போவதில்லை என்று கத்தினார். பின் பாக்கியா, என் மகள் இங்கேயே இருக்கட்டும். எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அதற்கு இனியா, நான் நிதிஷ் உடன் கொஞ்ச நாள் கூட சந்தோசமாக வாழவில்லை. அந்த வீட்டில் ஏதோ சிறையில் இருந்தது போல இருக்கிறது என்றார்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் சுதாகர், எப்படியாவது இனியாவை இந்த வீட்டிற்கு அழைத்து வரவேண்டும். இல்லை என்றால் தேவையில்லாமல் அவருடைய அப்பா, அம்மா நம் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுப்பார்கள் என்று சொன்னார். ஆனால், நிதிஷின் அம்மாவிற்கு இனியாவை அழைத்து வருவதில் விருப்பமே இல்லை. இன்னொரு பக்கம் இனியா, பாக்கியா இருவருமே மனம் விட்டு ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார்கள். மறுநாள் காலையில் கோபி, இனியா நன்றாக இருக்கிறாளா? என்று விசாரிக்கிறார். ஈஸ்வரி தன்னுடைய பேத்தியின் நிலைமையை நினைத்து வேதனையில் இருந்தார்.
https://www.youtube.com/watch?v=ENQSy2KU0xM
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஜெயிலில் இருந்து வெளியே வந்த நிதிஷ், இனியாவிடம் பேச வேண்டும் என்று அவர் வேலை செய்யும் இடத்திற்கு போகிறார். ஆனால், இனியா பேசாமல் ரூமில் மறைந்து கொள்கிறார். அதற்குப்பின் பாக்கியா ஹோட்டலில் இனியா- ஆகாஷ் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை பார்த்து நிதிஷ், இனியாவின் கையைப் பிடித்து சண்டை போடுகிறார். அப்போது வந்த பாக்கியா, நிதிஷை திட்டி அனுப்பி விடுகிறார். அதற்குப்பின் சுதாகரின் வீட்டிற்கு சென்ற கோபி, இனிமேல் இனியாவிடம் நிதிஷ் பேச நினைத்தாலும் தொந்தரவு செய்தாலும் சும்மா இருக்க மாட்டேன் என்று மிரட்டுகிறார். நிதிஷ், நான் அப்படி தான் செய்வேன் என்று தெனாவட்டாக பேசுகிறார். அதனால் கோபத்தில் எழில், நிதிஷின் சட்டையை பிடித்து சண்டை போடுகிறார். இதையெல்லாம் பார்த்த சுதாகர் கோபத்தில் போலீஸ் ஸ்டேஷனில் பாக்கியா குடும்பத்தின் மீது புகார் கொடுத்து விடுகிறார்.






