விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் சுதாகர், நாம் கோபப்பட்டால் இனியாவை அவருடைய வீட்டிற்கு அழைத்து சென்று விடுவார்கள். எல்லாம் எனக்கு தெரியும். நீங்கள் அமைதியாக இருங்கள் என்று சொன்னார். இன்னொரு பக்கம் பாக்கியாவின் ஹோட்டலுக்கு கவுன்சிலர் மீண்டும் வந்து வம்பிழுத்துக் கொண்டிருந்தார். அப்போது பாக்கியாவுடைய கஸ்டமர் ஒருவர், தன்னுடைய அம்மா சமைத்த சமையலை செய்து கொடுக்க சொன்னார். பாக்கியாவும் அதை சமைத்துக் கொடுக்க, அதை சாப்பிட்ட அந்த கஷ்டமர் ரொம்பவே அழுதார். இதை பார்த்து கவுன்சிலரும் சாப்பாட்டிற்கு காசை கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றார். பின் இனியா தன்னுடைய அம்மாவை பார்க்க வீட்டிற்கு வந்தார்.

பாக்கியா, இனியாவிற்கு பார்த்து பார்த்து சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தார். கோபி தன்னுடைய மகளிடம் ரொம்ப சந்தோசமாக பேசிக் கொண்டிருந்தார். கோபி, பாக்கியா, இனியா மூவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ஈஸ்வரி ரொம்ப சந்தோஷப்பட்டார். பின் பாக்யாவிடம் ஈஸ்வரி, நீ கோபியை மீண்டும் கல்யாணம் செய்து கொள். இரண்டு பேரும் சந்தோஷமாக இருங்கள். என்னுடைய ஆசையே அதுதான் என்று பேசி இருந்தார். அதற்கு பாக்கியா, ஏதேதோ சொல்லி சமாளித்தார். அதற்கு பின் பாக்கியா ஹோட்டலுக்கு வந்த கவுன்சிலர், எனக்கு பிடித்த சாப்பாட்டை சமைத்துக் கொடுங்கள் என்று பாக்கியாவிடம் சொன்னார். பாக்கியாவுமே எதுவும் பேசாமல் கவுன்சிலர் சொன்ன சமையலை சமைத்துக் கொடுத்தார்.
பாக்கியலட்சுமி:
கவுன்சிலரும் சாப்பிட்டுவிட்டு எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். அப்போது பாக்கியா, நீங்கள் தினமும் வந்து சாப்பிடுங்கள். எந்த பிரச்சினையும் செய்ய வேண்டாம் என்று சொன்னார். அதற்குப்பின் பாக்கியாவின் ஓட்டலுக்கு வருபவர்கள் தங்களுக்கு பிடித்த உணவை கேட்பதால் அவர் மனம் கோளாமல் சமைத்து தந்தார். இதை அறிந்த இனியா, தன்னுடைய அப்பாவிடம் இதைப் பற்றி சொன்னார். அவரும் பாக்கியாவிடம் தனக்கு பிடித்த சமையலை சொல்ல, பாக்கியாவுமே அதை சமைத்துக் கொண்டு வந்து தந்தார். அதை சாப்பிட்டு பார்த்து கோபி ரொம்பவே புகழ்ந்து பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோட்டில் இனியா, வேலை முடித்துவிட்டு சுதாகர் வீட்டின் கதவை தட்டுகிறார். ஆனால், யாருமே திறக்கவில்லை. நிதிஷுக்கு போன் செய்துமே அவர் எடுக்கவில்லை. இனியா வெளியில் இருப்பது தெரிந்தும் நிதிஷ் வேண்டும் என்று கதவை திறக்காமல் உள்ளே இருக்கிறார். இதனால் இனியா தன்னுடைய அம்மாவின் ஹோட்டலுக்கு சென்று விடுகிறார். அங்கு வேலையை முடித்துவிட்டு இனியாவும் அவருடைய அம்மாவும் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது ஈஸ்வரி, என்ன பிரச்சனை? இந்நேரத்திற்கு வந்திருக்கிறாய் என்று கேட்கிறார். இனியா, ஒன்றுமில்லை சும்மாதான் வந்தேன். உங்களை எல்லாம் பார்க்கணும் போல் இருந்தது என்று ஏதோ சொல்லி சமாளித்துவிட்டார்.

சீரியல் ட்ராக்:
அதற்கு பின் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். அப்போது கோபிக்கு போன் செய்த சுதாகர், இனியா அங்கு இருக்கிறாளா? இன்னும் வீட்டிற்கு வரவில்லை என்று சொல்கிறார். உடனே கோபி, இனியா இங்குதான் இருக்கிறார். உங்களிடம் சொல்லவில்லையா? என்று கேட்கிறார். அதற்கு சுதாகர், எங்களிடம் எதுவுமே சொல்லாமல் அங்கு வந்து விட்டார். எதுவாக இருந்தாலும் சொல்லிட்டு செய்யணும் என்று சுதாகர் கோபப்படுகிறார். பின் கோபி, அதைப் பற்றி இனியாவிடம் கேட்க ரூமிற்கு போகிறார். ஆனால், அங்கு பாக்கியா- இனியா இருவருமே நன்றாக தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். மறுநாள் காலையில் கோபி, இனியா யாரிடமும் சொல்லாமல் வீட்டிற்கு வந்ததை பற்றி ஈஸ்வரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். பின் பாக்கியாவிடம் சொல்லி இனியாவை வரவைக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=aBM50c87GnA
சீரியல் ப்ரோமோ:
இப்படி இருக்கும் நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் இனியாவை அழைத்துக் கொண்டு பாக்கியா,ஈஸ்வரி, கோபி எல்லோருமே சுதாகரின் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது கோபி, இனியா செய்த தவறுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன். இனிமேல் இந்த தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார். அதற்குப்பின் நிதிஷின் அம்மா, உங்க ரெண்டு பேருடைய உறவு தான் புரியாத புதிராகவே இருக்கிறது. விவாகரத்து வாங்கியுமே நீங்கள் ரெண்டு பேரும் ஒரே வீட்டில் இருக்கிறீர்கள் என்று கேட்கிறார். ஆனால், கோபி- பாக்கியாவால் எதுவுமே பேச முடியவில்லை. பின் வீட்டிற்கு வந்த பிறகு ஈஸ்வரி, ஊரில் எல்லோரும் உங்களைப் பற்றிதான் பேசுகிறார்கள். இரண்டு பேரும் மீண்டும் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார்.






