விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் தன் அம்மா ரெஸ்டாரண்ட் பற்றி இனியா, சுதாகரிடம் கேள்வி கேட்டார். உடனே சுதாகர், ஆமாம் நான்தான் வாங்கினேன். உன்னுடைய அம்மாவின் டீக்கடையையும் மூடச் சொல்லு என்று கோபமாக சொன்னார். நிதிஷ், இனியாவை தான் திட்டி இருந்தார். உண்மை அறிந்த உடன் வேதனையில் இனியா, பாக்கியாவை பார்க்க வந்தார். அப்போது இனியா, ரெஸ்டாரண்டை சுதாகர் வாங்கின விஷயத்தை பற்றி சொன்னார். அதற்கு பாக்கியா, எனக்கு ஏற்கனவே தெரியும். நீ அதைப் பற்றி எல்லாம் யோசிக்காதே. பெரியவர்கள் விஷயத்தில் தலையிடாதே.

உன்னுடைய வாழ்க்கையை பார் என்று அறிவுரை சொன்னார். இருந்தாலுமே இனியா குற்ற உணர்ச்சியில் ரொம்ப வருத்தப்பட்டார். பின் இனியா முகம் வாடி இருப்பதால் கோபி விசாரித்தார். அப்போது வீட்டில் நடந்த உண்மை எல்லாம் இனியா சொன்னார். இதைக் கேட்டவுடன் கோபிக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. பின் அவர், நான் உன் மாமனாரிடம் பேசுகிறேன் என்று இனியாவிற்கு ஆறுதல் சொன்னார். பின் சுதாகரை சந்தித்து கோபி பேசி இருந்தார். அப்போது கோபி, இனியாவிடம் பாக்கியா ஓட்டலை மூட சொன்னீர்களாமே? என்று கேட்டார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் கோபி, பாக்கியா அடிமட்டத்திலிருந்து வந்தவள். அவள் இந்த நிலைமைக்கு காரணமும் நான் தான். அதனால் ஓட்டல் எல்லாம் மூட முடியாது என்று சொன்னவுடன் சுதாகர் எதுவுமே பேச முடியவில்லை. கோபி சொன்னதற்கு சம்மதித்தார். பின் இனியா வேலைக்கு செல்வதை பற்றி கோபி பேசி இருந்தார். உடனே சுதாகர், வேலைக்கெல்லாம் போக தேவையில்லை. அப்படி செய்வதாக இருந்தால் வேறொரு வேலையை செய்யட்டும் என்று சொன்னார். கோபியால் எதுவும் பேச முடியவில்லை அங்கிருந்து கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் ஹோட்டலில் இனியா தன்னுடைய அம்மாவிற்காக உதவி செய்து கொண்டிருந்தார்.

நேற்று எபிசோட்:
அப்போது அங்கு வந்த ஆகாசிடம் இனியா நலம் விசாரித்தார். அந்த சமயம் பார்த்து நிதிஷ் வந்து விட்டார். நிதிஷ் எதுவும் சொல்லாமல் இனியாவை அங்கிருந்து அழைத்து வந்து விட்டார். அதற்குப்பின் பாக்கியாவின் ஓட்டலுக்கு வழக்கம் போல் வம்பு இழுக்க கவுன்சிலர் வந்தார். உடனே பாக்கியா, அமைச்சர் இடம் பேசுவது போல் போனில் டிராமா செய்தார். இதைக் கேட்டவுடன் கவுன்சிலர் அங்கிருந்து தலைதெறிக்க ஓடி விட்டார். கடைசியில் இனியா, நிதிஷ் இருவரும் ரூமில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது நிதிஷ், ஆகாஷை பற்றி கேட்டார்ர். இனியாவால் எதுவும் சொல்ல முடியாமல் தவித்தார். நிதிஷ், அவன் உன்னுடைய எக்ஸ் தானே என்று சொன்னவுடன் இனியா ஷாக் ஆனார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிதீஷ், அவன் உன்னுடைய எக்ஸ் தான் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். உனக்கு என்ன அவனோட பேச்சு? நீங்கள் வெளியே எல்லாம் சுத்தி இருக்கீங்களா? என்று ரொம்ப மோசமாக கேள்வி கேட்கிறார். இனியா, அப்படி எல்லாம் எதுவும் இல்லை. நான் இனி அவனுடன் பேசவும் இல்லை என்று சொல்கிறார். இருந்தாலுமே விடாமல் நிதிஷ், இனியாவை நோண்டி நோண்டி கேள்விப்பட்டு கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் இனியா தூங்கி விடுகிறார். ஆனால், நிதிஷ் ஒரு சைக்கோ மாதிரி இரவு முழுவதும் விழித்துக் கொண்டு இனியா காதல் விஷயத்தைப் பற்றியே புலம்பிக் கொண்டு இருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
மறுநாள் காலையில் இந்த விஷயத்தை வீட்டில் உள்ள எல்லோரிடமும் நிதிஷ் சொல்லி விடுகிறார். வீட்டில் யாருமே இனியாவிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லை. இனியாவும் அவர்களுடன் சகஜமாக பேசப்போகிறார். ஆனால், யாருமே பேசவில்லை. அவளுக்கு சாப்பாடும் போடவில்லை. ஒரு கட்டத்தில் நிதிஷின் அம்மா, நீ நல்ல பொண்ணு என்று நினைத்து தான் உன்னை திருமணம் செய்து வைத்தோம். ஆனால். நீ இப்படி செய்வாய் என்று நான் நினைக்கவில்லை. உங்கள் குடும்பம் எங்களை மொத்தமாக ஏமாற்றி விட்டது என்று கோபப்படுகிறார். உடனே சுதாகர், தன் மனைவியை அமைதியாக இருக்க சொல்கிறார். பின் இனியா அங்கிருந்து கிளம்பி விட்டார். இத்துடன் சீரியல் முடிகிறது






