விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் சுதாகரின் குடும்பத்திற்கு பாடம் புகட்டஇனியா நினைத்தார். அப்போது டிவியில் இனியா, சுதாகர் உடைய பையன் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவன். அவனால் தான் என்னுடைய வாழ்க்கை சீரழிந்தது. ஆனால், அவர்களின் குடும்பம் என்னுடைய கேரக்டரை பற்றி தவறாக பேசுகிறார்கள். என்னுடைய குடும்பத்தை தொந்தரவு செய்கிறார்கள். இனி அவர்கள் என் குடும்பத்துக்கு எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என்றெல்லாம் சொன்னார். இதை பார்த்து சுதாகர் குடும்பத்தினர் பயங்கரமாக கோபப்பட்டார்கள்.

இனியா பேட்டி கொடுத்ததை பாக்கியா வீட்டில் எல்லோருமே பார்த்து விட்டார்கள். அதற்கு இனியா, இனி சுதாகர் குடும்பத்தால் நம் வீட்டுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது. நான் ஐஜியிடம் சுதாகர் குடும்பத்தின் மீது புகார் கொடுத்து விட்டேன் என்று சொன்னார். பின் இனியா அதை பற்றி பெரிதாக கவலைப்படாமல் கேஷுவலாக தன்னுடைய வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். பின் பாக்கியா, இனியாவிற்கு ஆறுதல் சொல்லி தைரியப்படுத்தி இருந்தார். இன்னொரு பக்கம் சுதாகருக்கு தெரிந்த போலீஸ் அதிகாரி, இனியா புகார் கொடுத்ததை சொன்னார்கள். இதனால் சுதாகர் குடும்பமே தலைமறைவாகிறது.
பாக்கியலட்சுமி:
அதற்குப்பின் சுதாகர் குடும்பத்தை கைது செய்ய போலீஸ் வந்தார்கள். ஆனால், சுதாகர் குடும்பம் தலைமறைவானதால் அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. இந்த விஷயம் இனியாவிற்கு தெரிந்தது.
அதற்குப்பின் கோபி, மன நிம்மதிக்காக நாம் ஒரு ட்ரிப் போகலாம் என்று வீட்டில் பேசி இருந்தார். எல்லோருமே சம்மதித்தார்கள். அதற்குப்பின் கோபி வரும் வழியில் சுதாகர் வழிமறித்து, ஒழுங்கு மரியாதையாக இனியாவை கம்பிளைன்ட்டை வாபஸ் வாங்க வேண்டும் என்று மிரட்டி இருந்தார். அதற்கு கோபி முடியாது என்று சொன்னார். இதனால் கொந்தளித்த சுதார், மொத்த குடும்பத்தையும் அழித்து சமாதி கட்டி விடுவேன் என்று கோபியை கீழே தள்ளிவிட்டு சென்றார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் கோபி, சுதாகர் செய்த வேலையை பற்றி வீட்டில் எல்லோரிடமும் சொன்னார். இதனால் கோபப்பட்ட இனியா, சுதாகருக்கு ஃபோன் செய்தார். அப்போது சுதாகர், நீ மீண்டும் நிதிஷ் உடன் வாழ வேண்டும். எங்கள் மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்கு என்றெல்லாம் பேசி இருந்தார். ஆனால், இனியா முடியாது என்று சொல்லி விட்டார். மறுநாள் காலையில் இனியா மீண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்கப் போனார். அந்த சமயம் பார்த்து போன் செய்த சுதாகர், தேவையில்லாமல் போலீஸ் கோர்ட் என்று இரண்டு வீடுமே அலைய வேண்டாம். உங்கள் வீட்டில் வர சொல்லு, பேசி முடிவெடுக்கலாம். உன் அம்மாவுடைய ரெண்டு ரெஸ்டாரன்டையும் தந்து விடுகிறேன்.

சீரியல் ட்ராக்:
கல்யாணத்திற்கு செலவு செய்த பணத்தையும் வட்டி முதலுமாக தருகிறேன். உனக்கு விவாகரத்தும் வாங்கி தருகிறேன். இது எல்லாம் நான் என் பையனுடைய வாழ்க்கைக்காக தான் செய்கிறேன். உன்னுடைய அம்மா ரெஸ்டாரண்டில் தான் நான் இருக்கிறேன். நீ அங்கே வந்தால் நான் எழுதி கொடுக்கிறேன் என்று சொன்னார். இதை நம்பி இனியாவுமே போனார். ஆனால், அங்கு சுதாகர் இல்லை. நிதீஷ் நிறைய போதை மருந்து சாப்பிட்டு இருந்தார். அப்போது இனியாவை பார்த்து நிதீஷ் ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதனால் கோபத்தில் இனியா, நிதீஷை கீழே தள்ள தலையில் அடிபட்டது. இனியா எவ்வளவு எழுப்பியும் நிதீஷ் எழவில்லை. இதனால் இனியா ரொம்பவே பயந்து விட்டார்.
https://www.youtube.com/watch?v=CJQEJMLljCU
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் இனியா நடந்த எல்லா விஷயத்தையும் வீட்டில் சொல்கிறார். இன்னொரு பக்கம் டிவியில் நிதிஷ் இறந்த செய்தி வெளியாகிறது. உடனே கோபி, தன்னுடைய குடும்பத்தை வேறொரு இடத்திற்கு அனுப்பி வைக்கிறார். பின் கோபி, நான் தான் நிதிசை கொலை செய்தேன் என்று போலீசில் சரணடைகிறார். ஆனால், போலீஸ் கோபியை அடித்து துன்புறுத்துகிறார்கள். ஆனால், கோபி உண்மையை சொல்லவே இல்லை. பின் கோபி கொலையை ஒத்துக்கொண்ட செய்தி வைரல் ஆகிறது. இதை பார்த்து பாக்கியா-இனியா இருவருமே பதறுகிறார்கள்






