விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கவுன்சிலர் சொல்லும் ஆர்டரை பாக்கியா சமைத்துக் கொடுத்தார். ஆனால், பெரிதாக இந்த முறை தகராறு எதுவும் செய்யவில்லை. பின் வீட்டில் செழியன், ஜெனி வேலை செய்வதை பற்றி பேசி இருந்தார். பின் வீட்டுக்கு வந்த பாக்கியாவிடம் வீட்டு வேலை செய்வதை பற்றி ஈஸ்வரி சொல்லி சண்டை போட்டார். மறுநாள் காலையில் பாக்கியா, வீட்டிற்கு புதிதாக வேலை செய்ய ஒரு ஆளை அழைத்து வந்தார். அப்போது ஈஸ்வரி, நான் உன்னை வேலை செய்ய சொன்னால் நீ வேறு ஒருவரை அழைத்து வருகிறாயா என்று சண்டைக்கு போனார்.

பின் பாக்கியா, எல்லா வேலைகளையும் இந்த பெண் பார்த்துக் கொள்வாள் என்று சொன்னார். உடனே ஈஸ்வரி, சம்பளத்தை யார் கொடுப்பார் என்று கேட்க, வீட்டு செலவுக்கு செழியன்- எழில் இருவருமே சேர்ந்து கொடுக்கட்டும் என்றவுடன் ஈஸ்வரியால் எதுவுமே பேச முடியவில்லை. இன்னொரு பக்கம் இனியா, ரெஸ்டாரண்டை எப்ப ஆரம்பிக்க போகிறீர்கள்? என்று கேட்டார். சுதாகர், சீக்கிரத்திலேயே ஆரம்பித்து விடுவேன். உடனே இனியா, நான் ரெஸ்டாரன்ட் மேனேஜ்மென்டை பார்த்துக்கொள்கிறேன் என்றவுடன் நிதிஷ், உனக்கு அதில் ஏதாவது அனுபவம் இருக்கிறதா? என்று கேட்டார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் இனியா, என் அம்மா எதுவும் ரெஸ்டாரண்டை பற்றி பேசவில்லை. வீட்டில் சும்மா இருப்பதால் எனக்கு போர் அடிக்கிறது. அதனால் ரெஸ்டாரண்டை எடுத்து நடத்தலாம் என்று கேட்டேன் என்றார். இதனால் கோபத்தில் நிதிஷ், இனியாவை திட்டி உள்ளே போக சொன்னார். இன்னொரு பக்கம் ஹோட்டலுக்கு செழியன் வந்திருப்பதை பார்த்து பாக்கியா ரொம்ப சந்தோஷப்பட்டார். அந்த சமயம் வந்த கவுன்சிலர், சாப்பாடு ஆர்டர் கொடுத்தார். அப்போது கவுன்சிலரின் கூட்டாளி, எதற்காக இந்த ஓட்டலுக்கு தினமும் வரணும்? என்று கேட்க, அந்த கவுன்சிலர், இங்குதான் அழகான ஆன்ட்டி இருக்கிறார் என்று பாக்கியாவை பற்றி ரொம்ப மோசமாக பேசி இருந்தார்.

நேற்று எபிசோட்:
இதை எல்லாத்தையும் கேட்ட செழியன் கோபப்பட்டு கவுன்சிலரை தாறுமாறாக போட்டு அடித்தார். பாக்கியாவிற்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. இருவரையும் விலக்கி வைத்தார்.
அதற்கு பின் வீட்டிற்கு வந்த செழியன், ஹோட்டலில் நடந்ததை பற்றி சொல்ல, அதை கேட்டு எழிலும் கோபப்பட்டார். உடனே ஈஸ்வரி, உன்னால் தான் வீட்டில் நிம்மதி இல்லாமல் போய்விட்டது என்று பாக்கியாவை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் பாக்கியா ஹோட்டல் திறக்கப் போனார். அப்போது அந்த கடையின் ஓனர், கவுன்சிலர் பிரச்சனை செய்வார். அதனால் கடை திறக்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் எழில், தன்னுடைய பட விஷயம் தொடர்பாக வெளிநாட்டுக்கு செல்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷமாக எழில், அமிர்தாவையும் வாழ்த்தி அனுப்புகிறார்கள். அதற்குப்பின் போலீஸ் பாக்கியா வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது அவர்கள், கவுன்சிலரை அடித்த விவகாரத்தில் செழியனை கைது செய்வதாக சொல்கிறார்கள். பாக்கியா, நடந்ததை சொல்ல வந்துமே போலீஸ் கேட்கவில்லை. செழியினை வலுக்கட்டாயமாக போலீஸ் இழுத்து செல்கிறார்கள். இதனால் மொத்த குடும்பமே கதி கலங்கி நிற்கிறது. வழக்கம் போல ஈஸ்வரி, எல்லாத்துக்கும் காரணம் நீதான் பாக்கியா என்று ரொம்ப கோபமாக திட்டிக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
ஜெனியுமே பாக்கியாவை தான் குறை சொல்கிறார். பின் கோபி போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறார்.
அதற்குப் பின் வீட்டிற்கு வந்த ஜெனியின் அப்பா, உண்மை தெரியாமல் பாக்கியாவை தான் திட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால், பாக்கியா எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறார். அதற்குப்பின் வீட்டுக்கு வந்த கோபி, கவுன்சிலர் நிறைய அரசியல்வாதிகளை கைக்குள் வைத்து இருக்கிறார். செழியனை வெளியே எடுப்பது கொஞ்சம் கஷ்டம் தான் என்று சொல்கிறார். அதற்குப்பின் சுதாகரும், இனியாவும் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது சுதாகர், என்னால் முடிந்த உதவியை செய்கிறேன் என்று நக்கல் ஆக பாக்கியாவை பார்த்து சொல்கிறார். அதற்குப்பின் செழியன் கைது செய்த விவகாரம் தொடர்பாக சுதாகர் விசாரிக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






