பரபரப்பாக நடக்கும் இனியா நிச்சயதார்த்தம், அதிரடியாக வந்த போலீஸ் -அடுத்து என்ன? பாக்கியலட்சுமி

0
132
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ஈஸ்வரி, இனியாவிற்கு திருமண ஏற்பாடு செய்கிறேன். மாப்பிள்ளை வீட்டிலிருந்து வரவைத்து இருக்கிறேன் என்று சொன்னவுடன் கோபி ஷாக் ஆனார். பின் கோபி, எதற்கு இந்த அவசர கல்யாணம் என்று கேட்டவுடன் ஈஸ்வரி, செல்விக்கு தான் பாக்கியா சப்போர்ட் செய்வார். அவள் ஆகாசை எப்படியாவது இனியாவிற்கு கல்யாணம் செய்து வைத்துவிடுவாள். அதற்குள் நாம் இனியாவிற்கு நல்ல வசதியான மாப்பிள்ளையை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சொன்னவுடன் கோபி ஒத்துக் கொண்டார். அதற்குப் பின் வீட்டில் உள்ள எல்லோரையும் ரெடியாகிக்கொண்டு ஈஸ்வரி வர சொன்னார்.

-விளம்பரம்-

பின் மாப்பிள்ளை வீட்டில் வந்து விட்டார்கள். ஈஸ்வரி, இனியாவை அறிமுகப்படுத்தி இவர் தான் கல்யாண பொண்ணு என்று சொன்னவுடன் மொத்த குடும்பமே ஷாக் ஆனது. உடனே ஈஸ்வரி, நாளை நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம். கல்யாணம் படிப்பு முடிந்தவுடன் செய்யலாம் என்று சொன்னவுடன் மாப்பிள்ளை வீட்டிலும் ஒத்துக்கொண்டார்கள். பின் மாப்பிள்ளை சென்ற பிறகு பாக்கியா, என்ன நடக்கிறது இங்கு? என் மகளுக்கு எதற்கு கல்யாணம்? என்று ஆவேசப்பட்டு கேட்டார். எழில் – செழியன் இருவருமே இனியாவிற்கு சப்போர்ட் செய்தார்கள். ஆனால், ஈஸ்வரி யார் சொல்வதையும் கேட்கவில்லை.

- Advertisement -

பாக்கியலட்சுமி:

நேற்று எபிசோட்டில் ஈஸ்வரி, நிச்சயதார்த்தம் கண்டிப்பாக நடக்கும் என்று சொன்னார். வீட்டில் உள்ள எல்லோருமே ஈஸ்வரிக்கு எதிராக தான் பேசி இருந்தார்கள். பாக்கியா, என் மகள் விஷயத்தில் முடிவெடுக்க உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அவளுக்கு திருமணம் நடக்காது என்று ஆவேசமாக கத்திவிட்டு இனியாவை அழைத்து கொண்டு சென்றார். ஆனால், ஈஸ்வரி-கோபி இருவரும் மட்டும் இனியாவுக்கு திருமணம் செய்வதற்காக ஏற்பாடுகளை செய்தார்கள். அதற்குப்பின் ஈஸ்வரி-கோபி இருவரும் இனியாவை தனியாக அழைத்து என்னென்னவோ கதைகளை சொன்னார்கள். ஆனால், இனியா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

நேற்று எபிசோட்:

அதற்குப்பின் தன்னுடைய பாட்டி, அப்பா சொன்னதைப் பற்றி பாக்கியாவிடம் சொல்லி அழுதார் இனியா. உடனே பாக்கியா, எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். நீ தைரியமாக இரு. உனக்கு இந்த கல்யாணம் நடக்காது என்று அவருக்கு ஆறுதல் சொன்னார். அதற்குப்பின் பாக்கியா, செல்வியின் வீட்டிற்கு சென்றார். ஆகாஷ் ஹாஸ்பிடலில் இருந்து வந்து விட்டார். பின் பாக்கியா, செல்விக்கு ஆறுதல் சொல்லிவிட்டு பண உதவி கேட்டார். ஆனால், செல்வி வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி, கோபி இருவருமே நிச்சயதார்த்தத்திற்கு தயாராக இருக்கிறார்கள். பாக்கியா, நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் இந்த நிச்சயதார்த்தம் நடக்காது. எனக்கு இதில் விருப்பம் கிடையாது. இதை நான் நடக்க விட மாட்டேன் என்று ஆவேசமாக பேசுகிறார். கோபமாக ஈஸ்வரி, பாக்கியாவிடம் சண்டைக்கு நிக்கிறார். உடனே கோபி, இனியா என்னுடைய மகள். இந்த நிச்சயதார்த்தம் நடக்கும்.அதை தடுக்க முடியாது என்று சொல்கிறார். அதற்குப்பின் ஈஸ்வரி, இனியாவை தயாராகி வர சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

இனியா யாருக்கும் தெரியாமல் போலீசுக்கு போன் செய்து தகவலை சொல்லி விடுகிறார். அதற்குப்பின் இனியா, எனக்காக நீங்கள் இரண்டு நாட்களாக கஷ்டப்பட்டது போதும். நீங்கள் எதுவும் பேசத் தேவையில்லை. நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தன்னுடைய அம்மா, அண்ணன்கள்,அண்ணிகளிடம் சொல்லிவிடுகிறார். நிச்சயதார்த்தமும் தொடங்கிவிட்டது. தட்டு மாற்றும்போது போலீஸ் வந்துவிடுகிறார்கள். இந்த நிச்சயதார்த்தம் நடக்கக்கூடாது என்று சொன்னவுடன் எல்லோரும் ஷாக் ஆகிறார்கள். ஈஸ்வரி, பாக்யாவை திட்டுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement