விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா- கோபியை சேர்த்து வைப்பதற்காக தேவையில்லாத வேலைகளை ஈஸ்வரி செய்தார். இதை கவனித்த செல்வி, பாக்யாவிடம் சொல்ல, அவர் கோபப்பட்டு பேசி இருந்தார். பின் தனக்கு கிடைத்த ஆர்டரை பற்றி பாக்கியா வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கோபி ஐடியா கொடுத்தார். இதை கேட்டு எல்லோருமே பாராட்ட, பாக்கியா மட்டும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். பின் பார்க்கில் கோபி, உனக்குள் நிறைய திறமைகள் இருக்கு.

ஒருவேளை நான் உன்னை சரியாக புரிந்து இருந்தால் நம்ம ரெண்டு பேரும் பிரிந்து இருக்கவே மாட்டோம் என்று சொல்ல, பாக்கியா கோபப்பட்டு பேசி இருந்தார். இதை எல்லாம் கேட்டு ராதிகா மனம் உடைந்து விட்டார். பின் பாக்கியா வீட்டிற்கு வந்த ராதிகா, ஏன் அங்கே வரவில்லை என்று கேட்டார்? அதற்கு கோபி, இங்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. உடம்பு சரியானவுடன் நான் வந்து விடுகிறேன். என்னுடைய அம்மா, பிள்ளைகள் நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள் என்று தன்னுடைய குடும்பத்தை பற்றியே பேசி இருந்தார்.
பாக்கியலட்சுமி:
இதனால் ராதிகாவிற்கு இன்னும் கோபம் அதிகமாகி வெளியில் வந்து விட்டார். அப்போது ஈஸ்வரி, நீ கோபியை விவாகரத்து செய்துவிடு. இனி உன்னுடன் அவன் வரமாட்டான் என்று சொல்ல, ராதிகா இன்னும் கோபப்பட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார். பின் பாக்கியா, காபி கொடுத்துவிட்டு உங்களுடைய உடம்பு எப்படி இருக்கிறது என்று கேட்டு இருந்தார். அதற்கு கோபி, உடம்பு நன்றாக இருக்கிறது. இதை நான் உன்னிடம் எதிர்பார்த்து இருந்தேன் என்று சொன்னார்.

கடந்த வாரம் எபிசோட்:
உடனே பாக்கியா, எப்போது உங்க வீட்டுக்கு போகிறீர்கள்? உங்களால் ராதிகா ரொம்ப கஷ்டப்படுகிறார். இங்கே நீங்க தங்க முடியாது என்று கேட்க, கோபியால் எதுவுமே பேச முடியவில்லை. இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா, நீங்களே கிளம்புவீர்கள் என்று பார்த்தேன். ஆனால், அது நடக்கவில்லை. உங்களுக்கு ஒரு வாரம் டைம் கொடுக்கிறேன். தயவுசெய்து இந்த வீட்டை உங்களுடைய வீட்டிற்கு போங்கள் என்று சொன்னவுடன் கோபியின் முகமே மாறுகிறது.

இன்றைய எபிசோட்:
மறுநாள் காலையில் கோபி, பாக்கியாவை இம்ப்ரஸ் செய்வதற்காக காபி எல்லாம் கொண்டு வந்து கொடுத்து பேசுகிறார். ஆனால், பாக்கியா அதை கண்டுகொள்ளவில்லை. இருந்தும் விடாமல் கோபி பேசி கொண்டே இருந்ததால், கோபத்தில் பாக்யா, காய்கறிகளை வேகமாக கட் பண்ணுகிறார். இதை பார்த்தவுடன் கோபி அங்கிருந்து சென்று விடுகிறார். அதற்குப் பிறகு கோபி கொடுத்த காபியை வாஷ்பேஷனில் கொட்டி விட்டு பாக்கியா வெளியே செல்கிறார். அந்த சமயம் பார்த்து மையூ அங்கு வருகிறார். பாக்கியா-மையூ பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து வந்த ராதிகா, மையூவை திட்டுகிறார்.

சீரியல் ட்ராக் :
பின் ராதிகா, நீங்கள் முகத்திற்கு முன்னாடி நல்லவர்கள் போல் நடிக்கிறீர்கள். ஆனால், பின்னாடி வேற மாதிரி இருக்கிறீர்கள். பார்க்கில் நீங்கள் பேசினதெல்லாம் பார்த்தேன். தயவுசெய்து பொய்யான வாக்குகளை கொடுக்காதீர்கள் என்று சொன்னவுடன் பாக்யாவிற்கு கோபம் அதிகமானது. வீட்டுக்குள்ளே வந்த பாக்கியா, எல்லோரும் கலகலப்பாக பேசுவதை பார்த்துவிட்டு இன்னும் கோபப்படுகிறார். பின் கோபியிடம் பாக்கியா, உங்களால் எல்லோருடைய வாழ்க்கையும் நாசமாகிறது. வீட்டை விட்டு கிளம்புங்கள் என்கிறார். உடனே ஈஸ்வரி, கோபிக்காக சப்போர்ட் செய்து அவன் இங்கதான் இருப்பான், வெளியே போக மாட்டான் என்று சொன்னவுடன், நான் எங்கேயாவது போய் விடுவேன் என்று பாக்கியா சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






