விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ஈஸ்வரி, கோபியின் நிலைமையை நினைத்து பாக்யாவிடம் புலம்பி கொண்டிருந்தார். பின் கோபி விவாகரத்து வழக்குக்காக கோர்ட்டுக்கு கிளம்பி இருந்தார். ஈஸ்வரி, நானும் வருகிறேன் என்றவுடன் கோபி வேண்டாம் என்று சென்று விட்டார். அதன் பின் ஈஸ்வரி, கோர்ட்டில் என்ன நடக்குமோ? ராதிகாவுடன் கோபி சென்று விடுவானோ? என்றெல்லாம் புலம்பி கொண்டிருந்தார். அதற்கு பாக்கியா, எதுவாக இருந்தாலும் அவர்களுடைய முடிவு என்று அறிவுரை சொல்லிவிட்டு சென்றார் . இன்னொரு பக்கம் கோர்ட்டில் கோபி, ராதிகாவை சந்தித்து பேசி இருந்தார். அப்போது கோபி, நாம் சேர்ந்து வாழலாம். இந்த விவாகரத்து வேண்டாம்.

எனக்காக கொஞ்சம் டைம் கொடு என்றெல்லாம் பேச, ராதிகா எதுவுமே பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார். நேற்று எபிசோட்டில் கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடந்தது. அப்போது ராதிகா, நான் கோபியுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை. விவாகரத்து வேண்டும் என்று சொன்னார். இதை கேட்டவுடன் கோபி ஷாக் ஆனார். பின் நீதிபதி, இருவருக்குமே அவகாசம் கொடுத்தார். அதற்குப்பின் ராதிகா, பாக்கியாவை சந்தித்து பேசி இருந்தார். இருவரும் தங்களின் வாழ்க்கையை நினைத்து பேசிக்கொண்டு இருந்தார்கள். இதை கோபி பார்த்தவுடன் பாக்யாவிற்கு விவாகரத்து கொடுத்ததை நினைத்து வருத்தப்பட்டார்.
பாக்கியலட்சுமி:
இன்னொரு பக்கம் ஈஸ்வரி, கோர்ட்டில் என்ன நடந்ததோ? என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.
நேற்று எபிசோட்டில் கோபி, கோர்ட்டில் நடந்ததை எல்லாம் ஈஸ்வரிடம் சொல்லி ரொம்ப வருத்தப்பட்டார். ஈஸ்வரியும் கோபிக்கு ஆறுதல் சொன்னார். ஆனால், அவரால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ராதிகா செய்தது நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார். இது எல்லாம் பார்த்து ஈஸ்வரிக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. பின் தன் கணவரின் போட்டோவிற்கு முன்பு கோபி பற்றி ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார்.

நேற்று எபிசோட்:
அதற்குப்பின் சில மாதங்களுக்கு பிறகு என்று எபிசோடை காண்பிதார்கள். அப்போது பாக்கியா, அழகாக எழிலுடைய படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தயாராகி இருந்தார். குடும்பத்தில் உள்ள எல்லோருமே எழில் படத்தின் விழாவிற்காக தயாராகி கிளம்பி இருந்தார். இன்னொரு பக்கம் எழில் தன்னுடைய படத்தின் விழாவிற்காக சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தார். அப்போது விழாவிற்கு பாக்கியா குடும்பத்தில் இருந்து ஒவ்வொருவருமே வந்து கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் எழில் படத்தின் விழாவிற்கு பாக்கியா வருகிறார். அவரைப் பார்த்தவுடன் எழில் ரொம்ப சந்தோஷப்படுகிறார். அதோடு எழில் பழைய விஷயத்தை எல்லாம் நினைத்து பார்த்து வருத்தப்படுகிறார். அதற்கு பின் எழில் தன்னுடைய அம்மாவுடன் விழாவிற்குள் செல்கிறார். அப்போது பாக்கியா, ராதிகாவையும் இந்த விழாவிற்கு வர வைத்திருக்கிறார். ராதிகாவை பார்த்தவுடன் எல்லோருமே ஷாக் ஆகிறார்கள்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் ராதிகா எல்லோரிடமும் பேசுகிறார். ஆனால், கோபியை கண்டு கொள்ளவில்லை. கோபி ராதிகாவை பார்த்தவுடன் சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் படத்தின் விழா நல்லபடியாக தொடங்குகிறது. எழில், தன்னுடைய குடும்பத்தை பற்றி ரொம்ப பெருமையாக பேசுகிறார். யாரும் எதிர்பாராத வகையில் தன்னுடைய அப்பா கோபியை பற்றியும் பேசிக்கிறார். இதையெல்லாம் பார்த்து கோபி சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் ராதிகா எல்லோரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். கோபி, ராதிகாவிடம் பேச முயற்சிக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






