விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் இனியா, தயவுசெய்து என் அப்பாவுக்கு விவாகரத்து கொடுங்கள் என்று ரொம்ப மோசமாக ராதிகாவிடம் பேசி இருந்தார். இதனால் ராதிகா ரொம்பவே மனமடைந்து வீட்டை காலி செய்ய முடிவு எடுத்தார். இதை அறிந்த கோபி ராதிகாவை வீட்டிற்கு வரவைத்து பேசி இருந்தார். அப்போது ராதிகா-கோபி இடையே வாக்குவாதம் நடக்க, கோபிக்கு திடீரென்று நெஞ்சுவலி வந்தது. இதனால் எல்லோருமே பதறி போனார்கள். எதுவும் பேச முடியாமல் ராதிகா அமைதியாக இருந்தார்.

இனியா, உங்களால் தான் எங்க அப்பாவிற்கு இந்த நிலைமை. தயவு செய்து எங்க அப்பா வாழ்க்கையை விட்டு சென்று விடுங்கள். என் அப்பாவை பார்க்க வராதீர்கள் என்று பேச, ராதிகா ரொம்பவே மனமடைந்து விட்டார். இதையெல்லாம் கேட்ட பாக்கியா, இனியாவை அடித்து விட்டார். பின் வீட்டிற்கு வந்த கோபி, ராதிகாவிடம் எதுவும் பேசாமல் அமைதியாக ஓய்வெடுக்க போனார். ஈஸ்வரி, ராதிகாவை ரொம்ப மோசமாக திட்டி அனுப்பி இருந்தார்.
பாக்கியலட்சுமி:
இன்னொரு பக்கம் கோபி, தன்னுடைய நண்பர் செந்தில் இடம் தன்னுடைய குடும்பத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர், ஒரு பக்கமாக நில்லு. இரண்டு பக்கமும் கால் வைத்து தவிக்காதே. எதுவாக இருந்தாலும் சரியான முடிவெடு என்று அறிவுரை செய்தார். மேலும், வேகவேகமாக எல்லா துணிகளையும் பேக் செய்த ராதிகா, இங்கிருந்து கிளம்பலாம் என்று சொல்ல, அவருடைய அம்மா தடுத்தார் ஆனால், ராதிகா கேட்கவில்லை. கோபி வீட்டில் நடந்ததை சொல்லி வருத்தப்பட்டு பேசி இருந்தார் ராதிகா.

கடந்த வாரம் எபிசோட்:
அதற்கு அவர் அம்மா, தன் மகளின் வாழ்க்கை நினைத்து வேதனைப்பட்டார். பின் இனியா டான்ஸ் காம்பெடிஷன் நடந்தது. எல்லோருமே சந்தோஷமாக கல்லூரிக்கு போனார்கள். இனியாவுக்கு கோபி என்கரேஜ் செய்து அனுப்பி வைத்தார். பின் இனியா சூப்பராக நடனமாடி இருந்தார். அதை பார்த்து மொத்த குடும்பமே சந்தோஷமாக கைதட்டி ரசித்தது. இதையெல்லாம் டிவியில் ராதிகா பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், அவர் அம்மா தேவை இல்லாமல் பாக்கியாவை பற்றி தவறாக பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் இனியா கல்லூரியில் நடனப்போட்டி நன்றாக நடந்து முடிந்தது. அதில் முதல் ஃபைனலிஸ்டாக இனியா தேர்வாகியிருக்கிறார். அப்போது அவர் மேடையில் தன்னுடைய அம்மா, அப்பா இருவரையும் அழைத்துக் கொண்டு போய் பேசி இருந்தார். இதையெல்லாம் டிவியில் பார்த்த ராதிகா, வருத்தப்பட்டு கொண்டிருந்தார். மயூவின் பிறந்தநாளுக்கு எந்த ஒரு ஏற்பாடும் செய்யாமல் இருந்தார். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த பாக்கியா, மயூவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி, பரிசு கொடுத்து இருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
அப்போது ராதிகா, இனியா கல்லூரி விழா மேடையில் நீங்கள் இருவரும் ஒன்றாக இருந்ததை பார்த்தேன் என்று சொல்ல, இனியாவின் அப்பாவாகவும், அம்மாவாகவும் தான் அங்கு இருந்தோம். மற்றபடி வேறு எதுவுமே இல்லை. எல்லாம் மாறும் நம்பிக்கையாக இருங்கள் என்று சொல்லிவிட்டு பாக்கியா செல்கிறார். அதற்குப் பின் கோபி, எல்லோருக்குமே சாப்பாட்டை ஹோட்டலில் வாங்கிக் கொண்டு வந்து தருகிறார். ஆனால், பாக்யா அதை வாங்கிக்கொள்ளவில்லை. பின் மயூ பர்த்டேவிற்கு கிளம்பிய கோபியை, ஈஸ்வரி- இனியா எல்லோருமே போகவிடாமல் தடுக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து பாக்யாவிற்கு பயங்கர கோபம் வருகிறது.






