வீட்டை விட்டு வெளியேறும் ராதிகா, கோபி எடுக்கும் முடிவு என்ன? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

0
116
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இனியா காம்பிடிஷனுக்காக கோபி, மயூ- ராதிகா இருவரையும் அழைத்தார். ஆனால், இருவருமே வர முடியாது என்று சொன்னார்கள். ராதிகாவை விடாமல் கட்டாயப்படுத்தி அழைத்துக் கொண்டு போனார் கோபி. பின் கல்லூரியில் இனியாவின் பெற்றோர்களை மேடைக்கு அழைக்க, பாக்கியா போனார். அதே போல் கோபி, ராதிகாவும் போனார்கள். மூன்று பேரும் மேடையில் இருப்பதை பார்த்து எல்லோருமே இனியாவை கிண்டல் கேலி செய்தார்கள். அதனால் அவர் ரொம்ப அவமானப்பட்டார்.

-விளம்பரம்-

அவமானத்தில் இனியாவால் எதுவுமே பேச முடியவில்லை. அவரின் நண்பர்கள், ஆசிரியர்கள், விழாக்கு வந்த எல்லோருமே இனியாவையும் அவருடைய குடும்பத்தையும் கேலி கிண்டல் செய்தார்கள். இதனால் அவர் ரொம்பவே மனமடைந்து விட்டார். பாக்யா அவருக்கு ஆறுதல் சொல்லியும் இனியாவால் கவனம் செலுத்தி நடனம் ஆட வில்லை. இதனால் போட்டியில் இனியாவுக்கு மூன்றாம் பரிசு தான் கிடைத்தது. கோபத்தில் இனியா ரொம்பவே கத்தி இருந்தார். அப்போது அவர், உங்களால் தான் நான் தோற்றேன்.

- Advertisement -

பாக்கியலட்சுமி:

நீங்கள் எங்களுடைய வாழ்க்கையில் வந்த பிறகுதான் எல்லா பிரச்சினையும் என்று ரொம்ப மோசமாக ராதிகாவை பேசி விட்டார். ஆனால், எதுவுமே பேசாமல் வேதனையில் ராதிகா அங்கிருந்து கிளம்பி விட்டார். உடனே பாக்கியா, அவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து வந்தது உன் அப்பா தான். எல்லா பிரச்சனைக்கும் அவர் தான் என்று இனியாவை திட்டிவிட்டு கோபியை கேள்வி கேட்டார். அவரால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். நேற்று எபிசொட்டில் பாக்கியா, இரண்டு குடும்பமும் உங்களுடன் இருக்க நினைப்பது ரொம்ப தவறு. எல்லா தவறும் நீங்கள் செய்துவிட்டு மற்றவர்கள் மேல் பழி போடாதீர்கள் என்று கோபியை திட்டி இருந்தார்.

நேற்று எபிசோட்:

அதற்குப்பின் பாக்கியா, நீ ராதிகாவை பற்றி பேசுவதற்கு எந்த உரிமையும் கிடையாது. எதுவாக இருந்தாலும் நீ உன் அப்பாவை தான் கேட்கணும் என்று சொன்னவுடன் இனியா கோபப்பட்டு உள்ளே சென்று விட்டார். அதற்கு பாக்கியா, என் மகளை நான் பார்த்துக்கொள்கிறேன். அவரவர்கள் வேலையை செய்யுங்கள் என்று சொன்னார். பாக்கியா சொன்னது தான் சரி என்று நினைத்து கோபி வருத்தப்பட்டார். பின் பாக்கியா, இனியாவிடம் பேசி அவரை சமாதானம் செய்து விட்டார். இன்னொரு பக்கம் ராதிகா, இனியா சொன்னதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

சீரியல் ட்ராக்:

அப்போது வந்த கோபி, நான் உன்னை அழைத்துக் கொண்டு போயிருக்கக் கூடாது. இந்த பிரச்சனை வந்திருக்காது. எல்லோருமே சந்தோஷமாக இருப்பார்கள் என்று தன்னுடைய குடும்பத்தை மட்டும் யோசித்து பேசி இருந்தார். கொஞ்சம் கூட ஒரு ராதிகாவின் நிலைமையை அவர் யோசிக்கவில்லை. மறுநாள் காலையில் பாக்கியா-ராதிகா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ராதிகா, எல்லோரும் வெளியே போகலாமா? நான் வீட்டில் எல்லோரையும் வரவைக்கிறேன் என்று சொன்னவுடன் பாக்கியா ஒத்து கொண்டார். பின் இதைப் பற்றி ராதிகா, கோபியிடம் சொல்ல, அவரும் சம்மதித்து இனியா ஈஸ்வரிடம் பேச, அவர்களும் ஒத்துக்கொண்டார்கள்.

சீரியல் ப்ரோமோ:

இப்படி இருக்கும் நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ராதிகா, பாக்கியா கொடுத்த ரெண்டு நாள் முடிந்துவிட்டது. நாளை வீட்டை விட்டு கிளம்புகிறோம் என்று சொன்னவுடன் எல்லோருமே ஷாக் ஆகிறார்கள். இனியா ரொம்பவே எமோஷனலாக அழுகிறார். கோபியாலும் எதுவுமே பேச முடியவில்லை.
மறுநாள் ராதிகா, மயூ இருவரும் தங்களுடைய துணிகளை பேக் செய்து கீழே வருகிறார்கள். கோபியும் அதிர்ச்சியில், நான் துணிகளை எடுத்து வருகிறேன் என்று சொல்கிறார். உடனே ராதிகா, நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இருங்கள். நானும் மயூவும் தான் கிளம்புகிறோம். உன் அப்பாவை உங்களுடனே விட்டு செல்கிறேன் என்று இனியாவிடம் சொல்கிறார். சந்தோஷத்தில் இனியா, ராதிகாவை கட்டிப்பிடித்து அழுகிறார்.

Advertisement