விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாக்கியா தொடர்ந்த வழக்குக்கு கோர்ட்டில் ஆஜராக சொல்லி சம்மன் வந்திருந்தது. இதை கேட்டவுடன் வீட்டில் எல்லோருமே அதிர்ச்சி ஆனார்கள். கோபத்தில் ஈஸ்வரி, பாக்கியாவிடம் சண்டைக்கு போனார். ஆனால், பாக்கியா எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். பின் கோபி, நான் எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக்கொள்கிறேன்.
நான் செய்தது தவறு தான் என்றார். பின் ராதிகா-கோபி இருவருமே வழக்கு பற்றி பேசி இருந்தார்கள். அப்போது கோபி, நான் 4,5 வருடம் ஜெயிலுக்குப் போய் விடுவேனா? குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள் என்றெல்லாம் ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார்.
அதற்கு ராதிகா, நான் பெரிய லாயரிடம் பேசி இருக்கிறேன். நான் பார்த்துக்கொள்கிறேன், பயப்படாதீர்கள் என்று ஆறுதல் சொன்னார். மறுநாள் காலையில் கோர்ட்டுக்கு கிளம்ப பாக்கியா தயாராக இருந்தார். ஈஸ்வரி, கடவுளிடம் தன் மகனுக்காக வேண்டிக்கொண்டு, கோபியை பார்த்து ரொம்ப எமோஷனலாக அழுது புலம்பி இருந்தார். பாக்கியா எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். பின் கோர்ட்டில் பாக்கியாவின் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பாக்கியாவின் லாயர், நாங்கள் கேஸ் வாபஸ் வாங்கிக் கொள்கிறோம் என்று சொன்னார். உடனே நீதிபதி, பாக்யாவை திட்டி விட்டு கேசை தள்ளுபடி செய்தார்.
பாக்கியலட்சுமி:
இதையெல்லாம் கேட்டு ராதிகா- கோபி இருவருமே ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். பின் கோபி ரொம்ப எமோஷனலாக பாக்கியாவிடம் பேசி இருந்தார். ஆனால், அதைப்பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் பாக்கியா கிளம்பி வந்து விட்டார். பின் வீட்டிற்கு வந்த கோபி, கோர்ட்டில் நடந்ததை சொல்ல ஈஸ்வரி ரொம்ப சந்தோஷப்பட்டார். ஆனால், ஈஸ்வரி, பாக்கியாவை திட்டி இருந்தார். அதற்கு கோபி, பாக்கியா என்னுடைய உயிரையும் மானத்தையும் காப்பாற்றி இருந்தார்.
கடந்த வாரம் எபிசோட்:
அவளை பற்றி எதுவும் பேசாதீர்கள் என்றெல்லாம் புகழ்ந்து பேசி இருந்தார். அதற்குப்பின் ராதிகா, ஈஸ்வரி பேசியதை பற்றி கேட்க, பாக்கியா பெருமையாக தான் பேசி இருந்தார். இது எல்லாம் கேட்டு ஈஸ்வரிக்கு சந்தோசமாக இருந்தது. இருந்தாலும் ராதிகா தன்னை பற்றி பேசியதற்கு கோபப்பட்டு அவரிடம் சண்டைக்கு போனார். அதற்கு ராதிகா, ஈஸ்வரியை எதிர்த்து பேசி மிரட்டி இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராதிகா, நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்டு செய்வதற்கு நான் பாக்கியா இல்லை.
இன்றைய எபிசோட்:
உங்கள் வேலையை நீங்கள் செய்யுங்கள் என்று பயங்கரமாக மிரட்டுகிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் ராதிகா மிரட்டலால் ஈஸ்வரி பயந்தே போகிறார். அதற்குப்பின் கோபி- ராதிகா இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்து ஈஸ்வரிக்கு பயங்கரமாக கோபம் தான் வருகிறது. அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு கோபியின் நண்பர் செந்தில் வருகிறார். அவர் வந்தவுடன் எல்லாமே நலம் விசாரிக்கிறார்கள். அப்போது ஈஸ்வரி, நக்கலாக ராதிகாப் பற்றி பேசுகிறார்.
சீரியல் ட்ராக்:
பின் கோபி-செந்தில் இருவரும் தனியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கோபி, பாக்யாவை பற்றி ரொம்ப புகழ்ந்து பேசுகிறார். அதோடு பாக்கியா-ராதிகா ரெண்டு பேருமே வீட்டில் இருப்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்றெல்லாம் சொல்கிறார். இதை எல்லாம் கேட்டு ராதிகா கோபப்படுகிறார்.
பின் கோபியிடம் ராதிகா இதைப் பற்றி கேட்டு சண்டை வாங்கினார். கோபியால் எதுவும் பேசா முடியாமல் திணறுகிறார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த எழில்-அமிர்தா வருகிறார்கள். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விஷயத்தை சொல்லி சந்தோஷப்படுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது