விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ஈஸ்வரி, கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடந்தது. அப்போது ராதிகா, நான் கோபியுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை. விவாகரத்து வேண்டும் என்று சொன்னார். இதை கேட்டவுடன் கோபி ஷாக் ஆனார். பின் நீதிபதி, இருவருக்குமே அவகாசம் கொடுத்தார். அதற்குப்பின் ராதிகா, பாக்கியாவை சந்தித்து பேசி இருந்தார். இருவரும் தங்களின் வாழ்க்கையை நினைத்து பேசிக்கொண்டு இருந்தார்கள். இதை கோபி பார்த்தவுடன் பாக்யாவிற்கு விவாகரத்து கொடுத்ததை நினைத்து வருத்தப்பட்டார்.
இன்னொரு பக்கம் ஈஸ்வரி, கோர்ட்டில் என்ன நடந்ததோ? என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.
நேற்று எபிசோட்டில் கோபி, கோர்ட்டில் நடந்ததை எல்லாம் ஈஸ்வரிடம் சொல்லி ரொம்ப வருத்தப்பட்டார். ஈஸ்வரியும் கோபிக்கு ஆறுதல் சொன்னார். ஆனால், அவரால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ராதிகா செய்தது நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார். இது எல்லாம் பார்த்து ஈஸ்வரிக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. பின் தன் கணவரின் போட்டோவிற்கு முன்பு கோபி பற்றி ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார்.
பாக்கியலட்சுமி:
அதற்குப்பின் சில மாதங்களுக்கு பிறகு என்று எபிசோடை காண்பிதார்கள். அப்போது பாக்கியா, அழகாக எழிலுடைய படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தயாராகி இருந்தார். குடும்பத்தில் உள்ள எல்லோருமே எழில் படத்தின் விழாவிற்காக தயாராகி கிளம்பி இருந்தார். இன்னொரு பக்கம் எழில் தன்னுடைய படத்தின் விழாவிற்காக சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தார். நேற்று எபிசோட்டில் எழில் படத்தின் விழாவிற்கு பாக்கியா வந்தார். அவரைப் பார்த்தவுடன் எழில் ரொம்ப சந்தோஷப்பட்டார்.
நேற்று எபிசோட்:
அப்போது பாக்கியா, ராதிகாவையும் இந்த விழாவிற்கு வர வைத்திருந்தார். ராதிகாவை பார்த்தவுடன்
எல்லோருமே ஷாக் ஆகி இருந்தார்கள். அதற்குப்பின் ராதிகா எல்லோரிடமும் பேச, கோபியை மட்டும் கண்டு கொள்ளவில்லை. அதற்குப்பின் படத்தின் விழா நல்லபடியாக தொடங்கி இருந்தது. எழில், தன்னுடைய குடும்பத்தை பற்றி ரொம்ப பெருமையாக பேசி இருந்தார். இதையெல்லாம் பார்த்து கோபி- பாக்கியா சந்தோஷப்பட்டார்கள். அதற்குப்பின் ராதிகா எல்லோரிடம் பேசிக் கொண்டிருந்தார். கோபி, ராதிகாவிடம் பேச முயற்சித்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோபி, ராதிகாவிடம் பேசுகிறார். உடனே ராதிகா, நீங்கள் பழைய விஷயத்தை மீண்டும் பேச வேண்டாம். எழிலின் படவிழாவை சந்தோஷமாக என்ஜாய் பண்ணுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். ஈஸ்வரி, எதற்காக ராதிகாவை இங்கு வர வைத்தாய்? பிரச்சனை செய்ய வேண்டும் என்று இதையெல்லாம் செய்கிறாயா? என்று பாக்கியாவை திட்டிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த ராதிகா, ஈஸ்வரியிடம் பேச வருகிறார். அப்போது ராதிகா, நான் எந்த பிரச்சனையும் செய்ய வரவில்லை.
சீரியல் ட்ராக்:
பாக்கியா சொன்னதால் தான் எழிலின் பட விழாவிற்கு வந்தேன். முடிந்தவுடன் கிளம்பி விடுவேன் என்று சொன்னவுடன் ஈஸ்வரி அமைதியாக விடுகிறார். பின் பட விழா முடிந்தவுடன் எல்லோருமே போட்டோ எடுக்கிறார்கள். அப்போது ராதிகாவை இனியா கூப்பிடுகிறார். ஆனால், அவர் வரவில்லை. இதை எல்லாம் பார்த்து கோபிக்கு சங்கடமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் இனியா, தன்னுடைய நண்பருடன் ரெஸ்டாரண்டில் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், அவர்கள் இருவருமே காதலிப்பது போல தான் தெரிகிறது. இன்னொரு பக்கம் பாக்கியா, ராதிகா, செல்வி மூவருமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மறு திருமணம் பற்றி செல்வி, ராதிகா-பாக்கியாவிடம் கேட்கிறார்கள். அவர்கள் கிண்டலாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.