விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தாத்தாவின் 80 ஆவது நாள் பிறந்தநாளை கொண்டாட ஈஸ்வரி, எழிலை கூப்பிட்டார். ஆனால், அவர் வர மறுத்தார். பின் ராமமூர்த்தியின் 80 ஆவது பிறந்தநாளை கோவிலில் தடபுடலாக கொண்டாடி இருந்தார்கள். தாத்தாவின் பிறந்தநாளுக்கு உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் வந்து இருந்தார்கள். யாரும் எதிர்பார்க்காத வகையில் எழில் வந்தார். இதை பார்த்தவுடன் மொத்த குடும்பமே சந்தோஷப்பட்டது. பின் உண்மை அறிந்த கோபி கோவிலுக்கு வந்தார்.
கோபியை பார்த்தவுடன் மொத்த பேருமே அதிர்ச்சியாக, ராமமூர்த்தி கோபப்பட்டு பேசி இருந்தார். பின் ஈஸ்வரி- ராமமூர்த்தி எவ்வளவு திட்டியும், அசிங்கப்படுத்தியும் கோபி கிளம்பாமல் அங்கே இருந்தார். அதன் பின் எல்லோருமே ஈஸ்வரி- ராமமூர்த்தி இடம் ஆசிர்வாதம் வாங்கி இருந்தார்கள். கடைசியில் கோபி ஆசிர்வாதம் வாங்க வந்தவுடன் ராமமூர்த்தி திட்டி ஆசீர்வாதம் பண்ணவில்லை. பின் கோபி கிஃப்ட் கொடுத்ததற்கு ராமமூர்த்தி தூக்கி வீசிவிட்டு சென்று விட்டார். உடனே கோபி, தன் அம்மாவிடம் மன்னிப்பு கேட்க, ஈஸ்வரி கோபமாக திட்டி இருந்தார்.
பாக்கியலட்சுமி சீரியல்:
மேலும், பாக்கியா வீட்டில் எல்லோரும் சந்தோசமாக பேசி இருந்தார்கள். ராமமூர்த்தி, நான் பேசணும், மனசுக்கு நிறைவாக இருக்கிறது என்று சொல்லி பேசிக் கொண்டிருந்தார். கடந்த வாரம் ராமமூர்த்தி தூக்கம் வராமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தார். பின் வெளியில் வந்து ஹாலில் சுத்தி எல்லாத்தையும் பார்த்து வேதனை படுவது போல் இருந்தார். அதன் பின் ஈஸ்வரி, அவரை சமாளித்து தூங்க வைத்தார். மறுநாள் வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்க ஈஸ்வரி, ராமமூர்த்தியை எழுப்பி இருந்தார். ஆனால், ராமமூர்த்தி எழவே இல்லை.
ராமமூர்த்தி இறப்பு:
பயத்தில் ஈஸ்வரி கத்த, மொத்த குடும்பமே வந்து ராமமூர்த்தியை எழுப்பி இருந்தார்கள். ஆனால், அவர் எழவே இல்லை. உடனே பயத்தில் மருத்துவரை வரவைத்து செக் பண்ண, அவர் இறந்துவிட்டார் என்று சொன்னவுடன் மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி அழுகிறார்கள். ராமமூர்த்தி இறந்ததை நம்பவும் முடியாமல், ஏற்று கொள்ள முடியாமல் மொத்த குடும்பமும் பரிதவித்து நிற்கிறது. ஈஸ்வரி மட்டும் அதிர்ச்சியில் உறைந்து விடுகிறார். கோபி, என்ன பிரச்சனை? என்று உள்ளே வந்து பார்த்தவுடன் தன்னுடைய தந்தை இறந்ததை அறிந்து ரொம்ப அழுகிறார்.
நேற்று எபிசோட்:
இதை அவர் ராதிகாவிடம் சொல்லி அவரையும் கூட்டிக் கொண்டு வந்து தன்னுடைய அப்பாவை நினைத்து கதறி கதறி அழுகிறார். நேற்று எபிசோடில், செழியன் , தாத்தா இறந்த விஷயத்தை எழிலுக்கு சொல்ல அவர் கதறி அழுது வீட்டிற்கு ஓடோடி வந்தார். தாத்தாவை பார்த்து ரொம்பவே மனம் உடைந்து புலம்பி அழுகிறார். ஈஸ்வரியும் எழிலிடம் தாத்தாவை நினைத்து பேசி அழுகிறார். ஒவ்வொருவருமே தாத்தாவை நினைத்து புலம்பி அழுது கொண்டிருக்கிறார்கள். அப்போது பழனிசாமி வீட்டிற்கு வந்து கோபிக்கு ஆறுதல் சொல்லி, ராமமூர்த்தி பார்த்து வருத்தப்பட்டு அழ, பாக்கியாவும் ரொம்பவே மனம் உடைந்து அழுகிறார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில் பழனிச்சாமி, இறுதி சடங்கிற்கு தேவையான வேலைகளை செய்யலாம் என்று சொல்ல கோபியும் ஒத்துக் கொள்கிறார். ஒவ்வொருவரும் ராமமூர்த்திக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறார்கள். அப்போது ராதிகாவின் அம்மா வந்து ஓவராக ட்ராமா செய்கிறார். இதை பார்த்து ஈஸ்வரிக்கு கோபம் வருகிறது. பின் ராதிகா, தன்னுடைய அம்மாவை இழுத்து சென்று விடுகிறார். பழனிசாமி எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்வதை பார்த்து கோபி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். பாக்யா, தன் மாமனார் சொன்னதை நினைத்துப் பார்த்து ரொம்ப வேதனைப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.