விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் வரதட்சணையாக உங்கள் மகள் பெயரில் இந்த ரெஸ்டாரண்டை எழுதி வையுங்கள் என்று சுதாகர் சொன்னார். இதைக் கேட்டவுடன் பாக்கியா ரொம்ப ஷாக் ஆனார். இந்த ரெஸ்டாரண்டின் பெயரை மட்டும் மாற்றி என்னுடைய கம்பெனியின் பெயரை வையுங்கள். மற்றபடி இந்த பொறுப்பை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் சொன்னார். பாக்கியா, யாருக்காகவும் எதற்காகவும் இந்த ரெஸ்டாரண்டை கொடுக்க மாட்டேன் என்று இருந்தார். உடனே சுதாகர், நாளை உங்கள் மகள் நிச்சயதார்த்தம் நடக்க வேண்டுமா? இல்லையா? என்று முடிவு செய்யுங்கள் என்று அங்கிருந்து கிளம்பி விட்டார்.

பாக்கியா, ரெஸ்டாரண்டில் சுதாகர் சொன்ன விஷயத்தை வீட்டில் எல்லோரிடமும் சொன்னார். ஆனால், அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை. கோபி, ஈஸ்வரி, செழியன் மூவருமே சுதாகருக்கு சப்போட்டாக தான் பேசி இருந்தார்கள். ரெஸ்டாரன்ட் அவருடைய பெயரில் இருப்பது நல்ல விஷயம் தான் என்றார்கள். உடனே ஈஸ்வரி, உன் மகளுக்காக இதைக் கூட தர மாட்டாயா? நல்ல வசதியான குடும்பம் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், பாக்கியா யார் சொல்வதையும் கேட்கவில்லை. அதற்கு அவர், என்னுடைய ரெஸ்டாரண்டை யாருக்காகவும் கொடுக்க முடியாது.
பாக்கியலட்சுமி:
இதற்கு நானே முடிவெடுக்கிறேன் என்று சொன்னார். பின் இனியாவிடம் பேசிய பாக்கியா, நான் எந்த முடிவு எடுத்தாலும் உனக்கு சம்மதமா? என்று கேட்டார். இனியா, எனக்காக நீங்கள் நிறைய தியாகம் செய்துவிட்டீர்கள். இந்த ரெஸ்டாரண்டை விடாதீர்கள். கல்யாணம் நின்றாலும் எனக்கு கவலை இல்லை என்று சொன்னார். பின் கோபி, சுதாகரை சந்தித்து பேசி இருந்தார். அப்போது சுதாகர், நான் ரெஸ்டாரண்ட் பெயரை மாற்றி வைக்க தான் சொன்னேன். மற்றபடி பொறுப்பெல்லாம் அவர்கள் தான். இதில் அவர்களுக்கு விருப்பமில்லை என்றாலும் எனக்கு பிரச்சனை இல்லை. அவர்கள் தான் தப்பாக புரிந்து இருக்கிறார்கள் என்று அப்படியே மாத்தி பேசி விட்டார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் சுதாகர், சம்மந்தி நினைக்கிற மாதிரி நான் ரெஸ்டாரண்டை நானே எடுத்துக்கொள்ள போவதில்லை. இந்த ரெஸ்டாரண்டுக்கும் திருமணத்திற்கும் சம்பந்தமில்லை என்று பொய் சொன்னார். கோபியும் அதை நம்பி விட்டார். பின் வீட்டில் இனியா நிச்சயதார்த்தத்திற்கு தயாராக இருந்தார். அப்போது அவர், அம்மா ரெஸ்டாரண்டை விட்டுக் கொடுத்து இந்த கல்யாணம் தேவையில்லை என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். உடனே அமிர்தா, எதுவாக இருந்தாலும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இதைப்பற்றி கவலைப்படாதே என்றார். பின் வீட்டுக்கு வந்த கோபி, சுதாகர் சொன்னதை சொன்னார். ஆனால், பாக்கியாவிற்கு நம்பிக்கையே இல்லை.
சீரியல் ட்ராக்:
பின் மண்டபத்தில் நிச்சயதார்த்தத்திற்கு முன்பு நடைபெறுவதற்கு முன்பு சுதாகரிடம் பாக்கியா குடும்பம் பேசி இருந்தார்கள். அப்போது பாக்கியா, ரெஸ்டாரண்டில் பெயர் மட்டும்தான் மாறும் என்றால் எனக்கு சம்மதம். ஆனால், எதுவாக இருந்தாலும் அக்ரிமெண்ட் போட்டுக்கொள்ளலாம் என்று சொன்னவுடன் சுதாகர் ஷாக் ஆனார். எப்படியாவது ரெஸ்டாரண்டை எடுக்க நினைத்தார். பாக்கியா குடும்பம் கொஞ்சம் ரொம்ப புத்திசாலித்தனமாக இருப்பதால் அதை வேற மாதிரி டீல் செய்ய வேண்டும் என்று தன்னுடைய மேனேஜரிடம் சொல்லிக் கொண்டிருந்தார் சுதாகர்.
https://www.youtube.com/watch?v=-DxHjmUzxzM
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ரெஸ்டாரன்ட் பெயர் மட்டும்தான் மாற்றப்படுகிறது என்று ஏமாத்தி பாக்யாவிடம் சுதாகர் கையெழுத்து வாங்கி விடுகிறார். பின் நல்லபடியாக இனியா திருமணம் நடக்கிறது. அதற்கு பின் ரெஸ்டாரன்ட் வந்த சுதாகர், இந்த ரெஸ்டாரன்ட் எனக்கு தான் சொந்தம். உங்களுக்கும் இந்த ரெஸ்டாரண்ட்க்கும் சம்பந்தமில்லை என்று சொன்னதை கேட்டு பாக்கியா அதிர்ச்சி ஆகிறார். பின் வீட்டில் இதை எல்லோரிடமும் சொல்லி பாக்கியா புலம்பினார். கோபிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.






