விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் வீட்டுக்கு வந்த தொழில் அதிபர் சுதாகர் பற்றி அமிர்தா, இனியாவிடம் சொன்னார். உடனே பாக்கியா, அதைப் பற்றி நான் பார்க்கிறேன். நீ படித்து நல்ல பெரிய ஆளாக ஆக வேண்டும் என்று சொன்னார். இனியாவும் தன் அம்மாவின் ஆசைக்காக வேலை பார்த்துக் கொண்டே படிக்க சம்மதித்தார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, கோபி, செழியன் மூவருமே இனியாவிற்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் செந்தில், கோபிக்கு போன் செய்து சுதாகர் வீட்டிற்கு வர வைத்தார். சுதாகர், தன்னை பற்றி அறிமுகம் செய்து தன்னுடைய தொழில்,குடும்பத்தை பற்றியும் சொன்னவுடன் கோபி ஆச்சரியப்பட்டார்.

அதற்குப்பின் உங்களுடைய மகளை என் மகனுக்கு கட்டி வைக்க சம்மதமா? நான் என் மகனுக்காக பெண் தேடுகிறேன். உங்களுடைய குடும்பம் நல்ல குடும்பம் என்று எல்லாம் சொல்ல, கோபி ஷாக் ஆனார் .பின் என்ன சொல்வதென்று புரியாமல் அமைதியாக இருந்தார் கோபி. உடனே சுதாகர், என்ன அமைதியாக இருக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு வீட்டில் கேட்டு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கோபி சொன்னார். உடனே சுதாகர், உங்களுடைய முடிவு சொல்லுங்கள் என்று கேட்க, கோபி சம்மதம் சொன்னார். நேற்று எபிசோட்டில் சுதாகரின் குடும்பம் ரொம்ப பிடித்து விடுவதால் திருமணத்திற்கு சம்மதம் சொன்னார் கோபி.
பாக்கியலட்சுமி:
பின் வீட்டில் ஈஸ்வரி, செழியன் இடம் இதைப் பற்றி சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டார் கோபி. ஈஸ்வரிக்கும் இந்த திருமணத்திற்கு சம்மதம் சொன்னார். பின் பாக்யாவிடம் ஈஸ்வரி, செழியன், கோபி மூவருமே இனியா திருமணத்தை பற்றி பேசி இருந்தார்கள். ஆனால் பாக்கியாவிற்கு விருப்பமே இல்லை. இருந்தாலும் கோபி, பெரிய குடும்பம். நல்ல சம்மந்தம், இனியா வாழ்க்கை செட்டில் ஆகிவிடும் என்றெல்லாம் சொல்லி பேசி இருந்தார். அதற்கு பாக்கியா, இனியா இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள மாட்டார். அவளுடைய விருப்பம் தான் என்று சொல்ல, கோபத்தில் ஈஸ்வரி வழக்கம் போல பாக்கியாவை திட்டிவிட்டு சொன்னார்.

நேற்று எபிசோட்:
உடனே கோபியும், இந்த திருமணம் நடக்கும் என்று சவால் விட்டு சென்றார். அதற்குப்பின் கோபி, இனியாவை தனியாக சந்தித்து பேசி இருந்தார். அப்போது மாப்பிள்ளையின் போட்டோவை காண்பித்து திருமணத்தைப் பற்றி கோபி சொன்னார். உடனே இனியா, எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை. நான் மேற்கொண்டு படிக்கணும். என்னுடைய கேரியரில் சாதிக்கணும் என்று அங்கிருந்து சென்று விட்டார். பின் வீட்டில் தன் தந்தை சொன்னதை பற்றி பாக்கியாவிடம் சொன்னார் இனியா. அந்த சமயம் பார்த்து செழியன், உன்னால் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னவுடன் இனியா ஷாக் ஆனார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் இனியா, கோபியை பார்ப்பதற்காக அவருடைய வீட்டுக்கு செல்கிறார். அங்கு கோபி, எனக்கு மன அழுத்தத்தினால் நெஞ்சு வலிக்கிறது. மற்றபடி வேறு ஒன்றும் இல்லை என்று சொல்கிறார். உடனே ஈஸ்வரி, உன் கல்யாணத்தை நினைத்து தான் உன் அப்பா இந்த மாதிரி ஆனார் என்று சொன்னவுடன் இனியா தன் தந்தைக்காக திருமணத்திற்கு ஒத்து கொள்கிறார். இனியா தன்னைப் பெண் பார்க்கும் வரும் விஷயத்தை பாக்கியாவிடம் சொல்ல, அவரால் எதுவும் பேச முடியவில்லை. அமைதியாக இருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
அடுத்த நாள் சுதாகர் வீட்டில் இருந்து இனியாவை பெண் பார்க்க வருகிறார்கள். ஆனால், சுதாகர் வரவில்லை. அதற்கு பின் சுதாகர் வீட்டிற்கு வருகிறார். அவரை பார்த்தவுடன் பாக்யா, ஷாக் ஆகிறார். சுதாகரின் எண்ணத்தை பாக்கியா புரிந்து கொள்கிறார். ஆனால், வெளியில் எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக இருக்கிறார். அதற்குப்பின் இனியாவையும், சுதாகரின் மகனையும் தனியாக பேச அனுப்பி வைக்கிறார்கள். அப்போது சுதாகரின் மகன் பேசிக்கொண்டே இருக்கிறார். ஆனால், இனியா ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை. அதற்கு பின் காபி ஷாப்பில் சந்திக்கலாம் என்கிறார் சுதாகர் மகன். இத்துடன் சீரியல் முடிகிறது.






