விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபத்தில் நிதிஷ், அப்படி தான் பேசுவேன். என்ன செய்ய முடியுமோ பண்ணுங்கள் என்று திமிராக பேசி இருந்தார். இதனால் செழியன், எழில் இருவருமே சண்டை போட்டார்கள். பின் சுதாகர், மரியாதையாக நடந்து கொள்ளுங்கள் என்று மிரட்டி இருந்தார். கோபியுமே சுதாகருக்கு பதிலடி கொடுத்துவிட்டு வந்தார். அதற்குப் பின் சுதாகர், பாக்கியாவின் ஓட்டலுக்கு போனார். அங்கு சுதாகர்-பாக்கியா இருவரும் என்று சண்டை போட்டார்கள். அந்த சமயம் வந்த கவுன்சிலர், சுதாகரை திட்டி இருந்தார். இது எல்லாம் பார்த்து சுதாகருக்கு பயங்கர கோபம் வந்தது.

பாக்கியா, சுதாகரின் வீட்டிற்கு சென்று சண்டை போட்டீர்களா? என்று கேட்டார். அதற்கு கோபி, நிதிஷ் ரொம்ப தவறாக பேசினான். அதனால்தான் நம்ம பிள்ளைகள் சண்டை போட்டார்கள் என்று சொன்னார். உடனே இனியா, இதற்கெல்லாம் ஒரே முடிவு விவாகரத்து தான். நான் நிதீஷை விவாகரத்து செய்தால் தான் அவர் அவரிடம் அவரிடம் எந்த அவர் என்னை தொந்தரவு செய்ய மாட்டார் என்று சொன்னார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே இனியாவிற்கு விவாகரத்து வாங்க முடிவெடுத்தார்கள். அதற்குப்பின் இனியா, கோபி, பாக்கியா எல்லோருமே வக்கீலை சந்தித்து பேசி இருந்தார்கள்.
பாக்கியலட்சுமி:
அப்போது கோபி நடந்த எல்லா விஷயத்தையும் வக்கீல் இடம் சொன்னார். அதற்கு வக்கீல், எல்லாத்தையும் ஸ்டேட்மெண்டாக எழுதிக் கொடுக்க சொன்னார். அதற்கு இனியா, நானே எழுதி உங்களுக்கு மெயில் பண்ணி விடுகிறேன் என்றார். அதற்குப்பின் பாக்கியா ஹோட்டலில் செல்வி, இனியாவிற்கு ஆறுதல் சொன்னார். அதற்கு பின் அங்கு வந்த ஆகாசிடம் இனியா எதார்த்தமாக பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த நிதீஷ், ஆகாஷ்-இனியா இருவரும் பேசுவதை பார்த்து ரொம்பவே கோபப்பட்டார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் இனியா- ஆகாஷ் இருவரும் பேசி இருப்பதை பார்த்த நிதிஷ் கோபப்பட்டு இனியாவிடம் சண்டை போட்டார். அப்போது நிதீஷ், பழைய காதலனுடன் சேர தான்என்னை வேண்டாம் என்று சொன்னாயா? என்று ரொம்ப மோசமாக இனியாவை பற்றி பேசினார். இதனால் ஆகாஷ் பேச வர, நிதிஷ் அடிக்கப் போனார். கடைசியில் இனியாவின் கையை பிடித்து வம்பிழுத்து கொண்டு இருந்தார் நிதீஷ். அந்த சமயம் வந்த பாக்கியா, என் மகளின் கையை விடு இல்லை என்றால் நடப்பதே வேறு என்று கொந்தளித்தார். வேறு வழியில்லாமல் நிதீஷ், இனியாவின் கையை விட்டார். மீண்டும் நிதீஷ், இனியாவை பற்றி மோசமாக பேச, கோபத்தில் பாக்கியா திட்டினார்.

சீரியல் ட்ராக்:
அப்போது அங்கு வந்த கவுன்சிலர், நிதீஷை மிரட்டி அனுப்பி வைத்தார். பின் ஹோட்டலில் நடந்த விஷயத்தை பாக்கியா வீட்டில் சொன்னவுடன் எழில்- செழியன் இருவருமே கோபப்பட்டு நிதீஷ்வீட்டிற்கு போனார்கள். அங்கு நிதீஷ் மீண்டும் இனியாவை பற்றி ரொம்ப மோசமாக பேச, கொந்தளித்த செழியன்- எழில் இருவருமே நிதீஷை அடித்தார்கள். இதை பார்த்த நிதிஷின் அம்மா, போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டார். பின் போலீஸிடம் இருந்து கோபிக்கு போன் வந்தது. நிதிஷ் அம்மா புகார் கொடுத்ததால் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர சொன்னார்கள். இதைப் பற்றி கோபி, வீட்டில் செல்வதால் பாக்கியா ஷாக் ஆனார்.
https://www.youtube.com/watch?v=FgOzGvEF4D4
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் சுதாகர் வைத்த ஆள் பாக்கியாவிடம் சமையல் ஆர்டரை கொடுக்கிறார். அதோடு அந்த நபர், ஐம்பதாயிரம் பணம் கொடுத்துவிட்டு செல்கிறார். அடுத்த நாள் பாக்கியா, அந்த நபரிடம் பணம் கேட்கிறார். ஆனால், அந்த நபர் நான் அஞ்சு லட்சம் பணத்தை கொடுத்து விட்டேன். ஏமாற்றுகிறீர்களா? என்று சண்டை போடுகிறார். அதற்கு பின் அந்த நபர் போலீசையும் அழைத்து வந்து பாக்கியா மீது புகார் கொடுத்து விடுகிறார். அப்போது செழியன், எந்த மண்டபத்தில் திருமணம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்க, அவர் ஒரு மண்டபத்தின் பெயரை சொல்கிறார். ஆனால், அப்படி ஒரு மண்டபமே கிடையாது. இதனால் போலீஸ் அந்த நபரை கைது செய்யும் போது அவர் தப்பித்து விடுகிறார். அதற்குப்பின் அந்த நபர் சுதாகர் வைத்த ஆள் தான் என்று தெரிந்து எழில் வீட்டில் சொன்னவுடன் பாக்கியா ஷாக் ஆகிறார்.






