5 வயதில் இறந்த மகள், அவர் நினைவாக trust நடத்தி இத்தனை குழந்தைகளை தத்தெடுத்து வளர்ந்து வரும் படவா கோபி – ஹரிதா.

0
457
badava
- Advertisement -

பல குழந்தைகளை நடிகர் படவா கோபி-ஹரிதா தம்பதியினர் தத்து எடுத்து வளர்த்து வரும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் படவா கோபி. அதோடு இவர் மிக சிறந்த மேடை நகைச்சுவை கலைஞரும் ஆவார். இவர் சென்னையை சேர்ந்தவர். இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த பொய் திரைப்படத்தின் மூலம் தான் படவா கோபி சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் பல குரல் இசை கலைஞர், வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பன்முகங்களை கொண்டு திகழ்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் தொழில்முறை வீரர்களுக்காக பணியாற்றுவதற்கு முன்பு ஆரம்பத்தில் பிரபலங்கள் பங்குபெறும் கிரிக்கெட் லீக் போட்டிகளில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

படவா கோபி திரைப்பயணம்:

இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வருகிறார். சமீபத்தில் சிம்புவின் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகியிருந்த மாநாடு படத்திலும் இவர் நடித்திருந்தார். இந்த படத்தை பிரபு காமாட்சி தயாரித்திருந்தார். மேலும், இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். அதோடு நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

படவா கோபி- ஹரிதா :

இதனை தொடர்ந்து இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே படவா கோபி அவர்கள்
ஹரிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஹரிதாவும் படங்களில் நடித்தும், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். ஆனால், ஒரு மகள் இறந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதுகுறித்து கூட படவா கோபி- ஹரிதா பல இடங்களில் கூறியிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

படவா கோபி- ஹரிதா மகள் இறப்பு:

அதில், எனக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள். 2007 ஜுலை 24, 25 ஆகிய நாட்களில் நாங்கள் நால்வரும் ஆசிரமத்திற்கு வந்துவிட்டு சென்றோம். திடீரென ஆகஸ்ட் 7ம் தேதியன்று என் மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அப்போது அவளுக்கு 5 வயது. அப்போது சத்குருவிடம் தொடர்பிலும் இருந்தோம். ஆனால், 3 நாட்களில் அவள் இறந்து விட்டாள். ஏன் எப்படி என்று யாருக்கும் தெரியவில்லை என்று கூறி இருந்தார்கள்.

படவா கோபி- ஹரிதா நடத்தும் ட்ரஸ்ட்:

இந்நிலையில் நடிகர் படவா கோபி- ஹரிதா தம்பதியினரின் ஐந்து வயது மகளான ஆத்யா காலமான பின்னர் aadya hug என்கிற பெயரில் டிரஸ்ட் ஒன்று ஆரம்பித்திருக்கிறார்கள். இன்று வரை அந்த டிரஸ்ட் மூலமாக 260 குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார்கள். தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் படவா கோபி- ஹரிதாவை பாராட்டி, வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement