இது தான் என் கடைசி படம்.! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ராஜமௌலி.!

0
1074
Rajamouli
- Advertisement -

பாகுபலி என்ற பிரம்மாண்டா படத்தின் மூலம் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் ராஜமௌலி. தற்போது தனது அடுத்த படமான ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் பிரம்மாண்டம் குறித்தும், படத்தின் உறுதுணை கதாபாத்திரங்கள் குறித்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி பேசியுள்ளார். 

-விளம்பரம்-
Image result for rajamouli

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (மார்ச் 14), ஹைதராபாத்தில், திரைப்படம் பற்றிய முதல் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் டிவிவி தானய்யா, நாயகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், இயக்குநர் ராஜமௌலி ஆகியோர் பங்கேற்றனர்.

இதையும் படியுங்க : கே ஜி எப் 2 அறிவிப்பிற்கு போட்டியாக ‘RRR’ படத்தின் நடிகர்களின் பெயரை அறிவித்த ராஜமௌலி.!

- Advertisement -

அப்போது இந்த படம் குறித்து பேசிய ராஜமௌலி,
சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த மாவீரர்கள், ஒருவரை ஒருவர் சந்திக்காதவர்கள், சம்பந்தம் இல்லாதவர்கள், இருவரும் வீட்டை விட்டு வெளியேறிய அந்தச் சமயத்தில், ஒருவருக்கு மற்றொருவர் சுதந்திரப் போராட்டத்துக்கான உந்துதலாய் இருந்திருந்தால், பின்வரும் காலத்தில் அவர்களின் போராட்டத்துக்கான காரணம், இந்த நட்பாய் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்ற எனது கற்பனையே இந்தப் படம். என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த படம் எனது கடைசி படம் இல்லை என்று கூறிய ராஜமௌலி, மஹாபாரதம் எனது கடைசி படம், ஆனால், அந்த படத்தை 4 முதல் 5 பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளேன்.எனவே, அதனை எடுத்து முடிக்கவே 10 வருடங்கள் ஆகிவிடும் என்று கூறியுள்ளார் ராஜமௌலி.

-விளம்பரம்-
Advertisement