கே ஜி எப் 2 அறிவிப்பிற்கு போட்டியாக ‘RRR’ படத்தின் நடிகர்களின் பெயரை அறிவித்த ராஜமௌலி.!

0
257

பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ராஜ மௌலி. தற்போது மற்றுமொரு பிரம்மாண்ட படத்தை இயக்கிவருகிறார். ஆர் ஆர் ஆர் என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட எஸ்.எஸ். ராஜமுௗலின் அடுத்த பெரிய முயற்சிகளுக்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.

இந்த படத்தை பற்றிய அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியாகியிருந்தது. மேலும், படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய பல்வேறு செய்திகள் வெளியாகி இருந்த்து. இந்த படத்தில் என் டி ஆர் மற்றும் ராம் சரண் முக்கிய நடிகர்களாக நடித்து வருகின்றனர்.

இதையும் படியுங்க : ஆவலுடன் எதிர்பார்த்த KGF படத்தின் இரண்டாம் பாகம்.! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.! 

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நாடிகளின் விவரத்தை வெளியிட்டுள்ளார் இயக்குனர் ராஜமௌலி, இந்த படத்தில் இந்தி நடிகர்களான ஆலியா பட், கஜோல் கணவர் அஜய் தேவ்கன், ஹாலிவுட் நடிகை டெய்ஸி எட்கர்-ஜோன்ஸ் போன்றவர்கள் போன்றவர்கள் நடிக்கின்றனர்.

நேற்று தான் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடைந்த ‘kgf’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பூஜை துவங்கி இருந்தது. இந்த நிலையில் ராஜ மௌலி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.