பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்- நடிகைகள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா ? இதோ விவரம்.

0
1839
Baakiyalakshmi
- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர், நடிகைகள் வாங்கும் சம்பளம் குறித்த பட்டியல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவி பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக செல்கின்றது. இதனால் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி என்ற கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது. பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது. தற்போது சீரியலில் ராதிகா- கோபி இருவரும் பாக்யாவின் வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

வீட்டில் உள்ள எல்லோரும் அவர்களை வெளியே அனுப்ப பார்க்கிறார்கள். ஆனால், இருவரும் போகாமல் வீட்டிலேயே இருக்கிறார்கள். என்ன செய்வதென்று புரியாமல் பாக்யாவும், மொத்த குடும்பமும் நிம்மதியை இழந்து தவித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து ராதிகாவுக்கும், ஈஸ்வரிக்கும் இடையே சண்டை சச்சரவு நடந்து கொண்டே இருக்கிறது. இதற்கு கோபி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ராதிகா கோபப்பட்டு ஈஸ்வரியை திட்டி விடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த பாக்கியா, கோபியையும் ராதிகாவையும் வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார்.

சீரியலின் கதை:

அதற்கு கோபி, நீ இந்த வீட்டிற்க்கான முழு தொகையும் கொடுத்தால் தான் செல்வேன் என்று பாக்யாவிடம் சொல்கிறார். இதனால் பாக்கியா இன்னும் ஒரு மாதத்திற்குள் நான் 18 லட்சம் ரூபாயை கொடுத்து விடுகிறேன். அதற்குப்பின் நீங்கள் இருவரும் இந்த வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று சவால் விடுகிறார். பின் தான் போட்ட சவாலில் வெற்றி பெற வேண்டும் என்று பாக்யா ஒரு புதிய சமையல் ஆர்டரை வாங்குகிறார். இது 5000 பேருக்கு சமைக்க வேண்டிய கேட்டரிங் ஆர்டர். இதற்காக இவர் மூன்று நாட்கள் தங்கி சமைக்க வெளியூருக்கு செல்கிறார்.

-விளம்பரம்-

சீரியல் ட்வ்ஸ்ட்:

மேலும், பாக்கியா கோபியிடம் விட்ட சவாலில் வெற்றி பெறுவதற்காக கடுமையாக உழைக்கிறார். இறுதியில் அந்த பெரிய ஆர்டரையும் எடுத்து வெற்றிகரமாக சமைத்து முடிகிறார். இதனால் கோபியும் ராதிகாவும் வயிறு எரிகிறார்கள். இருந்தாலும், பாக்கியாவால் 18 லட்சம் புரட்ட முடியாது என்று தைரியமாக இருக்கிறார்கள். ஆனால், அவர் எட்டு லட்சத்தை ரெடி பண்ணி விட்டார். மீதி 10 லட்சத்திற்கு என்ன செய்வது என்று புரியாமல் பயத்திலும் குழப்பத்திலும் இருக்கிறார். அப்போது செழியன்- எழில் 10 லட்சத்தை பாக்யாவிடம் ஒப்படைத்து நீங்கள் 18 லட்சத்தை அவரிடம் தூக்கி முகத்தில் வீசுங்கள் என்று சொல்கிறார்கள்.

நடிகர்கள் சம்பளம்:

இனி சவாலில் பாக்யா வெற்றி பெறுவாரா? கோபி ராதிகா வீட்டை விட்டு வெளியேறுவார்களா என்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்கள் வாங்கும் சம்பளம் குறித்த பட்டியல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில்,
பாக்கியாவாக நடிக்கும் சுசித்ராவின் சம்பளம் ஒரு நாளைக்கு 15,000 ரூபாய்
சதிஷ், ரேஷ்மா-12, 000 சம்பளம்
செழியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷால், ஜெனி திவ்யா கணேஷ்- 10,000
இனியா கதாபாத்திரம் நேகா- 8,000 ருபாய் சம்பளம் பெறுகிறார்.

Advertisement