பாலசந்தர் சூட்டிங் ஸ்பாட்டில் நடிகையை அடிக்க சென்றுள்ள சமுத்திரகனி – அவரே சொன்ன விஷயம்.

0
368
samuthirakani
- Advertisement -

சூட்டிங் ஸ்பாட்டில் நடிகை செய்த செய்தால் கடுப்பாகி ரைட்டிங் அட்டையை எடுத்து சமுத்திரகனி அடிக்க சென்ற சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் சமுத்திரக்கனி. இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பன்முகங்களைக் கொண்டு திகழ்கிறார். இவர் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர்.

-விளம்பரம்-

இவர் 1998ல் இருந்து சினிமாவில் இருந்து வருகிறார். சினிமாவின் ஜாம்பவான் இயக்குனர் கே. பாலச்சந்தரின் துணை இயக்குநராக இருந்தவர் சமுத்திரக்கனி. பின் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த உன்னை சரணடைந்தேன் என்ற படத்தின் மூலம் தான் இவர் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழியில் படங்களை இயக்கி இருக்கிறார். தமிழ் சினிமாவில் சமூக அக்கரை கொண்ட படங்களை கொடுப்பதில் வல்லவர் சமுத்திரகனி.

- Advertisement -

சமுத்திரக்கனி திரைப்பயணம்:

இவரது படங்களில் எப்போதும் சமூக அக்கறை கொண்ட கருத்துக்கள் சொல்லும் விதமாக இருக்கும். இவர் கிட்டத்தட்ட 10 படங்களை இயக்கி இருக்கிறார். மேலும், 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவரின் நடிப்பு திறமைக்காக பல விருதுகளை வாங்கி இருக்கிறார். அதிலும், விசாரணை படத்திற்காக பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்டருக்கான தேசிய விருதையும் இவர் வாங்கி இருந்தார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சமீபத்தில் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த யானை படத்தில் சமுத்திரகனி நடித்திருந்தார்.

சமுத்திரக்கனி அளித்த பேட்டி:

இதனை தொடர்ந்து இவர் அந்தகன், பப்ளிக் போன்ற சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சமுத்திரக்கனி அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் துணை இயக்குனராக இருந்தபோது நடிகை செய்த செயலால் கடுப்பாகி அடிக்க சென்ற சம்பவம் குறித்து கூறி இருந்தது, நான் கே பாலச்சந்தர் சாரிடம் துணை இயக்குனராக பணிபுரிந்து இருந்தேன் இருந்தேன். பொதுவாக நான் நடிகர்களிடம் கோபப்பட மாட்டேன். ஆனால், ஒருமுறை ஒரு நடிகையிடம் பயங்கரமாக கோபப்பட்டு இருக்கிறேன்.

-விளம்பரம்-

உதவி இயக்குனராக இருந்த போது நடந்த சம்பவம்:

நான் அந்த நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை. அவரிடம் நான் டயலாக் சொல்லும்போது அவர் கண்டு கொள்ளாமல் போன் பேசிக்கொண்டே இருந்தார். அந்த இடத்தில் மரியாதை இல்லை என்றவுடன் நான் திரும்பி வந்து விட்டேன். பின் இயக்குனர் எல்லோரையும் அழைத்து ஆக்சன், ரெடி என்று சொல்லியிருந்தார். உடனே அந்த நடிகை, எனக்கு டயலாக் கொடுக்கவில்லை என்று சொன்னவுடன் நான் சொல்ல வந்தேன். ஆனால், அவர் தான் போன் பேசிக் கொண்டிருந்தார் என்று சொன்னேன். உடனே அவர், நீங்கள் என்னை கூப்பிட்டு சொல்லி இருக்கலாம் இல்லை என்று சொன்னவுடன் இந்த பேப்பருக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது.

நடிகையை அடிக்க சென்ற காரணம்:

அதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளுங்கள் என்று இருவருக்குமே பயங்கரமாக வாக்குவாதம் ஏற்பட்டது. பின் நான் கோபத்தில் கையில் இருந்த பேடை அடிக்கும் மாதிரி தூக்கி விட்டேன். இதனால் கோபப்பட்ட இயக்குனர், ஷட் அப்! போங்க இங்கிருந்து என்று கத்தினார். நாங்கள் எல்லாருமே சென்று விட்டோம். பின் சிறிது நேரம் கழித்து இயக்குனர் என்னை அழைத்திருந்தார். அவர் சேரில் உட்காருவார். நான் அவருக்கு கீழே உட்கார்ந்து இருந்தேன். அவர் என் தலை, முதுகில் தட்டி ஏன் இப்படி கோபப்படுகிறாய்? நடிகர்களை நாம் தான் பக்குவமாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களிடம் இருந்து நமக்கு தேவையான விஷயங்கள் கிடைக்கும். கோபப்படாதே இப்படி எல்லாம் இருந்தால் சாதிக்க முடியாது என்று எனக்கு அறிவுரை சொன்னார். அதுதான் நான் ஒரு நடிகரிடம் கடுமையாக நடந்து கொண்டது என்று கூறியிருந்தார்.

Advertisement