ஆர்யனை தொடர்ந்து, பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து பாக்கியா விலகலா?- அவரே கொடுத்த விளக்கம்.

0
495
baakiyalakshmi
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்று விடுகிறது. ஒவ்வொரு சேனலும் தங்கள் சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக புதுப்புது வித்தியாசமான தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், அவரின் கணவராக சதீசும் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Baakiyalakshmi Serial Aryan Quits | பாக்கியலட்சுமி ஆர்யன்

மேலும், இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாகவும் பாக்கியலட்சுமி திகழ்கின்றது. இந்த தொடர் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்தி உருவாகி உள்ளது. தற்போது இந்த சீரியலில் கோபி இரண்டாவது திருமணம் செய்யப் போகிறார். உண்மை தெரிந்தவுடன் கோபியின் அப்பா மனமுடைந்து மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து பேச முடியாமல், நடக்க முடியாமல் போகிறது. பின் பாக்யாவின் மாமனார் மருத்துவ செலவுக்கு காசு பற்றாமல் பாக்கியா கடுமையாக வேலை செய்துகொண்டிருக்கிறார்.

- Advertisement -

பாக்யலக்ஷ்மி சீரியல் கதை:

இதைப்பார்த்த ஜெனி தன்னுடைய வீட்டில் பணம் கேட்கிறார். இதை அறிந்த ஜெனியின் கணவர் செழியன் பாக்கியாவிடம் சண்டை போட்டு தனிக்குடித்தனம் செல்ல முடிவெடுக்கிறார். இதையெல்லாம் பார்த்த கோபி இதுதான் சாக்கு என்று ராதிகா வீட்டிற்கு போய் தங்குகிறார். அப்போது பாக்கியா ராதிகாவின் வீட்டிற்கு வருகிறார். கோபி எப்படியோ தப்பித்து விடுகிறார். ஆனால், செல்விக்கு கோபி மீது அதிகமாக சந்தேகம் வருகிறது. இதை எழிலிடம் சொல்கிறார். எழில் கண்டு பிடிப்பாரா? கோபி ராதிகாவை திருமணம் செய்வாரா?

சீரியலில் இருந்து பாக்கியா விலகுகிறார்:

இப்படி பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சீரியலில் இருந்து பாக்கியாலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்கும் சுசித்ரா விலக உள்ளார் என்று சோசியல் மீடியாவில் சில தினங்களாகவே வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் ரசிகர்கள் பலரும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர். சீரியலில் இருந்து சுசித்ரா விலகிவிட்டால் சீரியலே இல்லை என்பதற்கு ஏற்ப கதைக்களமும் சீரியலும் சென்று கொண்டிருக்கிறது. சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் உள்ளது என்றால் அதற்கு சுசித்ரா தான் காரணம் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

விளக்கம் கொடுத்த பாக்கியலட்சுமி:

ஆனால், இவர் விலகுவது குறித்து வரும் செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் இது குறித்து சித்ராவிடம் கேட்டபோது அவர் கூறியிருப்பது, நான் சீரியலில் இருந்து விலகவில்லை. இப்போ கூட நான் சூட்டிங்கில் தான் இருக்கிறேன். சீரியல் காண புரமோஷன் வேலை எல்லாம் போய்கொண்டு இருக்கிறது. நான் எப்படி சீரியலை விட்டு விலகுவேன். இதெல்லாம் பொய்யான தகவல் என்று சுசித்ரா பேட்டியளித்திருக்கிறார்.

சீரியலில் இருந்து விலகிய செழியன்:

இப்படி இவர் கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் உற்சாகத்தில் உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் கடந்த வாரம் தான் சீரியலில் இருந்து செழியன் கதாபாத்திரத்தில் நடித்த வந்த ஆர்யன் விலகி இருக்கிறார். இந்த சீரியலில் செழியன் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் இதற்கு முன்பு கடைக்குட்டி சிங்கம் என்ற தொடரில் நடித்தார். மேலும், தவிர்க்க முடியாத காரணங்களால் தான் பாக்யலக்ஷ்மி தொடரிலிருந்து ஆர்யன் விலகி இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement