சர்கார் கதை திருட்டு விவகாரம்..!முருகதாஸிற்கு எதிராக நிற்கும் பாக்கியராஜ்..!

0
918
Bakiyaraj
- Advertisement -

சர்கார் படம் வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் சமீபத்தில் உதவி இயக்குனர் வருண் என்பவர் சர்க்கார் படத்தின் கதை என்னுடையது என்று எழுத்தாளர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், செங்கோல்’ என்று பெயரில் ஒரு கதையை ஏற்கனவே எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாகவும். அந்த கதையை திருடித்தான் ஏ ஆர் முருகதாஸ் சர்கார் படத்தை உருவாக்கி வருகிறார் என்றும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

Bakiyaraj

- Advertisement -

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் நடிகர் விஜய்யின் சர்கார் திரைப்படத்திற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது தீர்ப்பு வழங்கியதால் விஜய் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.இதையடுத்து இன்று சென்சர் போர்டு படத்திற்கு ‘U/A’ சான்றிதழை வழங்கிய தகவலையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

ஆனால், எழுத்தாளர்கள் சங்கத்தில் இயக்குனர் வருண் அளித்த புகாரின் அடிப்படையில் எழுத்தாளர் சங்கம் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸிடம் பஞ்சாயத்து பேசியுள்ளது. இதில் பிரபல இயக்குனரும் நடிகருமான பாக்யராஜும் பஞ்சாயத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த பிரச்சனை குறித்து முருகதாசுடம் பேசியுள்ள பாக்கியராஜ், இது உண்மையில் திருடப்பட்டதுதான் தான் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

-விளம்பரம்-

Murugathass

இதுகுறித்து பாக்யராஜ் தெரிவிக்கையில் வருண் ராஜேந்திரனின் செங்கோல் கதை என்ன சொல்கிறதோ அதையே தான் முருகதாசின் கதையும் சொல்கிறது. எழுத்தாளர் சங்கத்தலைவரின் கடமை எதுவோ அதை செய்து வருகிறேன். முருகதாசிடம் தனிப்பட்ட முறையில் பிரச்னையை தீர்த்துக் கொள்ளுங்கள் என்கிற விவரத்தைச் சொன்னேன்.ஆனால், அவரோ நடிகர் சிவாஜியின் ஓட்டை யாரோ போட்டு விடவில்லயா? அவரை மையமாக வைத்து தான் நான் இந்த கதையை எழுதி இருகிறேன் என்று கூறிவிட்டார்.

உண்மையில் ஏ ஆர் முருகதாஸ் கூறும் கதையை 10 வருடத்திற்கு முன்பாகவே உதவி இயக்குனர் வருண் எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறார். ஆனால், அதனை மதிக்காமல் சார் கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறேன் .நீங்க அந்த ஆளின் புகாரை பதிவு செய்து கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டார். வருண் அளித்த புகாரின் பேரில் தற்போது சங்கத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எழுத்தாளர் சங்கம் முடிந்த அளவிற்கு துணையாக இருக்கும் என்று உறுதியளிக்கபட்டுள்ளது என்று கூறியுள்ளார் பாக்கியராஜ்.

Advertisement