தன் திருமண ரிஷப்ஷனில் பாலாவை கண்டதும் ரித்திகா கொடுத்த ரியாக்ஷன் – வைரலாகும் வீடியோ இதோ.

0
242
- Advertisement -

சீரியல் நடிகை ரித்திகாவின் திருமண வரவேற்பில் பாலா மற்றும் புகழ் செய்திருக்கும் ரகளை வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரித்திகா. இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர். சிறு வயதிலேயே இவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால் ஆரம்பத்தில் சென்னையில் வாய்ப்பு தேடி அலைந்திருந்தார். அதற்குப்பின் இவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த ராஜா ராணி முதல் பாகத்தில் கதாநாயகனின் தங்கையாக நடித்திருந்தார். மேலும், முதல் சீரியலிலேயே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும், இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற ஷோ என்றால் குக் வித் கோமாளி தான்.

- Advertisement -

குக் வித் கோமாளி நிகழ்ச்சி:

புது வித வித்தியாசமான முறையில் இந்த சமையல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தற்போது இந்த நிகழ்ச்சிக்கு ஒன்று உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதோடு இந்த நிகழ்ச்சியின் மூலம் பல பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்து இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் ரித்திகா வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்திருந்தார். அதிலும், இந்த நிகழ்ச்சியில் பாலா- ரித்திகா காம்போ ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது.

ரித்திகா நடிக்கும் சீரியல்:

இதனால் பலருமே பாலா- ரித்திகா இருவரும் காதலிக்கிறார்கள் என்றெல்லாம் வதந்திகளை கிளப்பியிருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் ரித்திகா- பாலா உடைய ரீல்ஸ் வீடியோக்களை எல்லாம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி இருந்தது. மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு ரித்திகா அவர்கள் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் வகிக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவர் அம்ருதா என்ற கதாபாத்திரத்தில் எழிலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

-விளம்பரம்-

ரித்திகா திருமணம்:

தற்போது இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் தான் ரித்திகாவிற்கு திருமணம் நடந்திருக்கிறது. அதாவது, விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக வேலை செய்து வரும் வினு என்பவருக்கும் ரித்திகாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டு இருக்கிறது. பின் இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதத்துடன் சமீபத்தில் கேரளாவில் உள்ள ஒரு கோயிலில் எளிமையாக திருமணம் செய்து இருக்கிறார்கள். இவர்களுடைய திருமணத்திற்கு சின்னத்திரை பிரபலங்கள் யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா-புகழ் செய்த சேட்டை:

இதனை அடுத்து இவர்கள் இருவரும் திருமண வரவேற்பு நிகழ்வை சென்னையில் நடத்தி இருக்கிறார்கள். அதில் விஜய் டிவி பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் ரித்திகாவின் திருமண வரவேற்பில் புகழ் மற்றும் பாலா செய்திருக்கும் சேட்டை வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. அதாவது, திருமண வரவேற்பில் மேடையில் பாலா ரித்திகாவிற்கு பூங்கொத்தை கொடுத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அப்போது ரித்திகா ‘சாப்பிட்டு தான் போகணும் பாலா’ என்று அக்கறையுடன் கூறியுள்ளார்.

Advertisement