இயக்குனர் பாலாவை வம்பிழுத்த வலைப்பேச்சு பிஸ்மி, பதிலுக்கு வச்சு செஞ்ச பாலா – வைரலாகும் வீடியோ

0
459
- Advertisement -

பிரபல இயக்குனர் பாலாவிடம், வலைப்பேச்சு பிஸ்மி நக்கலாக கேட்ட கேள்விக்கு அவர் பதிலடி கொடுத்திருக்கும் வீடியோ தான் தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களின் பாலாவும் ஒருவர். மேலும், இவர் சினிமாவில் பிரபலமான இயக்குனரான பாலு மகேந்திராவின் படைப்பில் இருந்து உருவாக்கப்பட்டவர். அதுமட்டுமில்லாமல் பாலா அவர்கள் சினிமா உலகில் இயக்குனர் ஆன முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

பொதுவாக பாலா படங்களில் முன்னணி நடிகர்கள் நடிக்கவே தயங்குவார்கள். அதற்கு முக்கிய காரணம் பாலா ஒரு டெரர் பீஸ். நடிப்பு சொல்லித் தரும்போது பல நடிகர்களை திட்டியும் இருக்கிறார். சிலரை அடித்தும் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இவர் சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய எல்லா படங்களுமே விருதுகள் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இயக்குனர் பாலா:

பாலா இயக்குனர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். இவர் மாயாவி, பிசாசு, சண்டி வீரன், விசித்திரன் போன்ற படங்களை தயாரித்துள்ளார். இந்த படங்களை இவர் இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாலா தயாரிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் ‘பிசாசு’ என்ற திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகியிருந்தது. அந்தப் படத்தின் ப்ரோமோஷனில் பாலா கலந்து கொண்டிருந்தார்.

பாலாவை வம்பிழுத்த பிஸ்மி:

நிகழ்ச்சியில் வலைப்பேச்சு பிஸ்மி, ‘உங்களைப் போன்ற தரமான இயக்குனர்கள் கமர்சியல் பேய் படங்கள் எடுக்கலாமா’ என்று பாலாவிடம் கேள்வியை எழுப்பியிருந்தார். அதற்கு பாலா, ‘ உங்களை விடவா நான் கமர்சியல் திரைப்படம் எடுத்து விட்டேன். நீங்கள் தயாரித்த ஒரு படத்தை நான் பார்த்திருக்கிறேன். அதில் நீங்கள் ஒரு கேரக்டரில் நடித்திருந்தீர்கள் அதையும் பார்த்தேன்’ என்று கூற, பிஸ்மி வாயை மூடிக்கொண்டு தலை குனிந்துள்ளார்.

-விளம்பரம்-

பிஸ்மி தயாரித்த படம்:

அதாவது வலைப்பேச்சு பிஸ்மி, ‘தத்தி தாவுது மனசு’ என்ற படத்தை தயாரித்துள்ளார். அந்தப் படத்தில் நடிகை மும்தாஜ் தான் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதில் பிஸ்மி ஒரு கேரக்டரில் நடித்து இருந்தார். அதாவது பேருந்தில் பெண்களை உரசும் ஒரு காட்சியில் பிஸ்மி நடித்திருப்பார். அதைத்தான் பாலா குறிப்பிட்டு இருப்பார். பல ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாக்கப்பட்டு வருகிறது.

பாலா குறித்து:

இயக்குனர் பாலா மதுரையில் பிறந்தவர். இவர் சினிமாவில் வர வேண்டும் என்ற குறிக்கோளோடு அமெரிக்கன் காலேஜில் படித்தவர். கடந்த 2004 ஆம் ஆண்டு இவர் முத்துமலர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். பின் சில மனக்கசப்பால் கடந்த 2022 ஆம் ஆண்டு பாலா மற்றும் முத்துமலர் விவாகரத்து பெற்றது நான் மறந்ததே. சமீபத்தில் பாலா ‘வணங்கான்’ படத்தை இயக்க இருந்தார். பின் சில காரணங்களால் படம் நிறுத்தப்பட்டது.

Advertisement