செய்தியாளர் கேள்வியால் கோபப்பட்டு பாலாஜி முருகதாஸ் செய்து இருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் 4’ல் கலந்து கொண்டு இரண்டாம் பாஸ் பிடித்தார். ஆனால், இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இதனால் இவர் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருந்தார்.

அந்த நிகழ்ச்சியில் பாலாஜி டைட்டில் வின்னரும் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் சில படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் ‘ஃபயர்’ என்னும் படத்தில் நடித்திருந்தார். தயாரிப்பாளரும், நடிகருமான ஜே.சதீஷ்குமார் இயக்கத்தில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இது தான் இவர் இயக்குனராக அறிமுகம் ஆன முதல் படம். இதில் ரக்ஷிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன், ஷா, சுரேஷ் சக்கரவர்த்தி, சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்து இருக்கிறார்கள்.
ஃபயர் படம்:
மேலும், ஜே.எஸ்.கே பிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, டி.கே இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் நான்கு பெண்களை மையமாக வைத்து தமிழ்நாட்டில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. காசி என்ற ஒரு டாக்டர் பல பெண்களுடைய வாழ்க்கையில் விளையாடி இருக்கிறார். அந்த டாக்டர் கதாபாத்திரத்தில் தான் பாலாஜி முருகதாஸ் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது.
View this post on Instagram
பாலாஜி முருகதாஸ் பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் பயர் படம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பாலாஜி முருகதாஸ் கோபப்பட்டு அளித்திருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்பட்டு இருக்கிறது.
செய்தியாளர்கள் சந்திப்பில் பாலாஜி முருகதாஸிடம், காசி பண்ணது சரியா? தவறா? என்று கேள்வி கேட்டு இருக்கிறார்கள். இதனால் ஆவேசப்பட்ட பாலாஜி முருகதாஸ், இந்த கேள்வி கேட்கலாமா? உங்களுக்கு தோன்றுவதை எல்லாம் கேள்வி கேட்கக்கூடாது.

பாலாஜி கோபப்பட காரணம்:
காசி எப்படி நல்லவன். நான் காசி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேனே தவிர காசி கிடையாது. இந்த கேள்வியை கேட்பது ரொம்ப தப்பு என்று ஆவேசமாக பதில் அளித்து அங்கிருந்து செல்கிறார். மேலும்,
தமிழகத்தை உலுக்கிய உண்மை சம்பவத்தை தான் இந்த படத்தில் காண்பித்து இருக்கிறார்கள். காசி என்ற ஒரு டாக்டர் பல பெண்களுடைய வாழ்க்கையில் விளையாடி இருக்கிறார். படத்தில் பிசியோதெரபி ஆக இருக்கும் பாலாஜியை காணவில்லை என்று அவருடைய பெற்றோர்கள் போலீசில் புகார் அளிக்கிறார்கள். பின் தீவிரமாக போலீசும் அந்த வழக்கை விசாரிக்கிறார்கள்.

படத்தின் கதை:
அப்போதுதான் விசாரணையில் நான்கு பெண்களை பற்றிய விவரம் தெரிய வருகிறது. பாலாஜி அந்த பெண்களுடன் நெருக்கமாக இருந்து அதை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் வாங்கி இருக்கிறார். இந்த அதுமட்டுமில்லாமல் நிறைய பெண்கள் பாலாஜியால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்து இருக்கிறது. இன்னொரு பக்கம் பாலாஜி முருகதாஸை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்று அமைச்சரும் அழுத்தம் கொடுக்கிறார். அதற்குப் பிறகு என்ன நடந்தது? குற்றவாளியை போலீஸ் கண்டுபிடித்தார்களா? பாலாஜியின் நிலை என்ன? என்பதுதான் படத்தின் உடைய மீதி கதை.






