‘அவர் மூஞ்சி காமெடியா இருந்ததுன்னு அவர படத்துல இருந்து தூங்கிட்டேன்’ – மேடையில் பேசிய இயக்குனர். சிவகார்த்திகேயனின் ரியாக்ஷனை பாருங்க.

0
304
sivakarthikeyan
- Advertisement -

தமிழ் சினிமாவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று கிடைத்த வாய்ப்பையேல்லாம் பயன்படித்தி இன்று சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். தற்போது இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருக்கிறார்.

-விளம்பரம்-

சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் கூட மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் பிரியங்கா, யோகிபாபு, இளவரசன், தீபா, அர்ச்சனா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் வெற்றிப்படமாக டாக்டர் படம் அமைந்தது. இதனை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் அயலான், டான் ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார்.

- Advertisement -

வாய்ப்பு தேடி அலைந்த இயக்குனர்கள் :

இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். பின் உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார்.இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். சமீபத்தில் சிவகார்த்திகேயனிடம் நிகழ்ச்சி ஒன்றில் நீங்கள் சினிமா துறையில் யாரிடம் அதிகமாக வாய்ப்பு தேடி அலைந்தீர்கள்? என்று கேட்டு இருந்தார்கள். அதற்கு சிவகார்த்திகேயன் கூறியது, நான் அதிகமாக வாய்ப்புகள் போய் கேட்கவில்லை.

வழக்கு எண் படத்தின் வாய்ப்பை தவறவிட்ட Sk :

சிலபேரை முயற்சி செய்திருக்கிறேன். அதில் நான் அதிகம் வாய்ப்பு கேட்டது வெங்கட் பிரபு சார் தான். இளைஞர்கள் மத்தியில் அவருக்கு நிறைய மரியாதை உண்டு. ஆனால், ட்ரை பண்ணேன் கிடைக்கவில்லை. போய் கேட்டவுடனே வாய்ப்பு கொடுக்கனும் என்ற கட்டாயம் கிடையாது. அதேமாதிரி வழக்கு எண் 18 கீழ் 9 என்ற படத்தில் நடிப்பதற்கு ஸ்ரீ முதலில் இருந்தார். மூன்றாவது இடத்தில் நான் இருந்தேன். ஆனால், இரண்டாவது இடத்தில் யார் என்று தெரியவில்லை.

-விளம்பரம்-

சிவகார்த்திகேயன் குறித்து பாலாஜி சக்திவேல் :

இருந்தாலும் முயற்சி பண்ணி நடிக்க முடியாமல் போனது. அப்போது அந்த படத்தை எடுத்த இயக்குனர் வேலைக்காரன் படத்தை பார்த்து வாழ்த்தும் போது எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் விழா ஒன்றில் பங்கேற்ற பாலாஜி சக்திவேல் பேசும் போது, நான் நிறைய புதுமுகங்களை வைத்து நடிக்க வைத்திருக்கிறேன் என்பது மட்டும் தான் உங்களுக்கு தெரியும்.

சிவாவை நிராகரித்த காரணம் :

ஆனால், நான் நிறைய பேரை Reject பண்ணி இருக்கேன். அவர்களும் புது முகங்கள் தான். அது அவர்களுக்கும் தெரியுமா. அவர்கள் எல்லாம் இப்போ பெரிய ஹீரோ, வானுயர்ந்த இருக்கிறார்கள். நான் Reject பண்ண பெரிய ஹீரோ யாருன்னு சிவகார்த்திகேயன். முதலில் அவரை தான் தேர்ந்தெடுத்தேன். பின்னர் அவர் முகம் கொஞ்சம் காமடியாக இருக்கிறது என்று அவரை நீக்கிவிட்டு ஸ்ரீயை போட்டேன் என்று கூறியுள்ளார். இதை மோடியின் கீழ் அமர்ந்து இருந்த சிவகார்திகேயனும் கேட்டு கொண்டு இருக்கிறார்.

Advertisement