வர்மா படத்தால் ஏற்பட்ட அவமானம். ஆதித்ய வர்மா படத்திற்கு போட்டியாக வர்மா படத்தை வெளியிடும் பாலா.

0
31240
Adithya-Varma
- Advertisement -

தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகரான விஜய் தேவர்கொண்ட நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படம் தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கில் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் இந்த படம் வெகுவாக கவர்ந்திருந்தது. இந்த படத்தை இயக்குனர் பாலா ‘வர்மா’ என்ற பெயரில் ரீ-மேக் செய்ய விக்ரம் மகன் துருவ் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் முதல் ட்ரைலர் வரை அனைத்தும் வெளியான நிலையில் இந்த படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக இருந்தது.

-விளம்பரம்-
Varma

ஆனால், படத்தின் இறுதி ரிசல்ட் திருத்திகாரமாக இல்லை என்றும் படத்தில் சில மாற்றங்களை செய்ய பாலா மறுத்துவிட்டார் அதனால் படத்தை வெளியிடபோவது இல்லை என்று இ4 நிறுவனம் அறிவித்தது. இந்த நிலையில் தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தில் இயக்கத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய கிரிசாயா என்பவரை வைத்து இந்த படத்தினை ‘ஆதித்திய வர்மா’ என்ற தலைப்பில் வெளியிட்டனர். இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதையும் பாருங்க : இந்த வயசில் நடிக்க காரணமே இதான். மேடையில் கண்கலங்கிய மெர்சல் , விஸ்வாசம் பட புகழ் சீனியம்மாள்.

- Advertisement -

ஆனால், படத்தை முழுவதுமாக எடுத்துவிட்டு பின்னர் வெளியிடாமல் போனது தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான பாலாவிற்கு இது மிகவும் ஒரு கௌரவ இழுக்காக அமைந்தது. அதே போல வர்மா பட விவகாரத்தில் விக்ரமுக்கும் பாலாவிற்கும் கூட சில மன சங்கடங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தினை மீண்டும் பாலா வெளியிட தீவிரம் காட்டி வருகிறாராம். இதனால் ஆதித்ய வர்மா பட குழுவினர் கொஞ்சம் கலக்கத்தில் இருந்து வருகின்றனர்.

Varma-bala

கொஞ்சம் பொறுங்க, பாலா இயக்கிய ‘வர்மா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக போவது இல்லை. இருப்பினும் எடுத்த படத்தை எப்படியாவது வெளியிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் பாலா, வர்மா படத்தினை ‘நெட்பிலிக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட போகிறாராம். தனது படம் எப்படியாவது வெளிவந்தால் போதும் என்று இதற்காக பல முயற்சிகளை தீவிரமாக எடுத்த வருகிறாராம். வர்மா நெட்ப்ளிக்ஸ்சிலாவது வருமா என்று பொறுத்திருந்து பாப்போம்.

-விளம்பரம்-
Advertisement