‘ஏன்ட்ரி பாவா இதி’ 63வயது பாலய்யாவிற்கு காஜல் அகர்வால் ஆன்டியாம் – தெலுங்கு ரசிகர்களே கான்டாகிட்டாங்க.

0
564
Balayya
- Advertisement -

காஜல் அகர்வால் ரசிகர்கள் கொந்தளித்து நடிகர் பாலையாவை திட்டி வரும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கு சினிமாவில் பல ஆண்டு காலமாக மிகப் பிரபலமான நடிகராக கொடிகட்டி பறப்பவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார். ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த நடிகர் டி ராமாராவ் அவர்களின் ஆறாவது மகன் தான் நந்தமூரி பாலகிருஷ்ணா.

-விளம்பரம்-

இவர் குழந்தை நட்சத்திரமாக தாத்தம்மா கலா என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார், அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு இவர் அரசியலில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து இருக்கிறார். வயதானாலும் பாலகிருஷ்ணா அவர்கள் இன்னும் படங்களில் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

வீர சிம்ஹா ரெட்டி படம் :

அதிலும் அதிரடி, ஆக்ஷன் போன்ற படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் பாலகிருஷ்ணா. அந்த வகையில் கடைசியாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் இயக்குனர் கோபிசந்த் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த படம் வீர சிம்ஹா ரெட்டி. இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் வரலட்சிமி சரத்குமார், ஹனி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

பகவந்த் கேசரி படம்:

இப்படத்திற்கு வாரிசு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை அடுத்து தற்போது பாலையா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் பகவந்த் கேசரி. இந்த படத்தில் காஜல் அகர்வால், ஸ்ரீ லீலா, அர்ஜுன் ராம்பால் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தை அணில் ரவிபுடி இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு தமன் இசை அமைத்திருந்தார்.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

தன்னுடைய தங்கையை எப்படியாவது ஒரு போலீஸ் அதிகாரியாக ஆக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு பாலையா இருக்கிறார். அதற்காக வரும் பிரச்சனைகளையும், வில்லன்களையும் தன்னுடைய ஸ்டைலில் அடித்து துவம்சம் செய்கிறார். ஒரு ஆக்ஷன் கலந்த செண்டிமெண்ட் திரைப்படமாக பகவந்த் கேசரி உருவாகி இருக்கிறது. இந்த படம் சில தினங்களுக்கு முன்பு தான் வெளியாகியிருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை தான் பெற்றிருந்தது. காரணம், இந்த படம் வெளியான அன்றே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படம், இன்னொன்று ரவி தேஜா நடிப்பில் வெளிவந்த டைகர் நாகேஸ்வர ராவ்.

கொந்தளிப்பில் காஜல் அகர்வால் ரசிகர்கள்:

இந்த இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனால் இந்த இரண்டு படங்களுடன் போட்டி போட முடியாமல் பகவந்த் கேசரி தவித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பகவந்த் கேசரி படத்தின் ஒரு காட்சி தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை கிளம்பி இருக்கிறது. அதாவது, ஒரு காட்சியில் காஜல் அகர்வாலை பார்த்து பாலையா ஆன்ட்டி என்று அழைக்கிறார். இதை பார்த்த காஜல் அகர்வால் ரசிகர்கள் கோபத்தின் உச்சத்தில் கொந்தளித்து பாலையாவை திட்டி வருகிறார்கள். அதிலும், பாலையாவிற்கு 63 வயது, காஜல் அகர்வாலுக்கு 38 வயது. தன்னை விட 25 வயது குறைவான நபரை பார்த்து எப்படி அவர் ஆன்ட்டி என்று அழைக்கலாம் காலம் கொடுமை என்றெல்லாம் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Advertisement