100% என் படம்னு சொன்னாரே லோக்கி : லியோ படத்தின் கதையில் புகுந்து குழப்பியுள்ள விஜய் – – உளறி கொட்டிய தயாரிப்பாளர்.

0
483
- Advertisement -

லியோ படம் தொடர்பாக தயாரிப்பாளர் லலித் குமார் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், லியோ படம் கண்டிப்பாக ஆயிரம் கோடி வசூலிக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ரஜினிகாந்த் லியோ படத்தை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டி இருந்தார். லோகேஷ் கலகராஜ் அடுத்ததாக தலைவருடைய 171 வது படத்தை இயக்க இருக்கிறார். ஏற்கனவே மாஸ்டர் படத்திலும் நான் தான் தயாரிப்பாளராக இருந்தேன். மாஸ்டர் படம் வெற்றி அடைந்தபோது விஜய் இடம் உங்களுக்கு ஏதேனும் பரிசு கொடுக்க நினைக்கிறேன் என்று கேட்டேன்.

-விளம்பரம்-

அதற்கு விஜய், அதெல்லாம் எதற்கு? எனக்கு நீங்கள் சம்பளம் கொடுத்து விட்டீர்கள், அதுவே போதும் என்று சொன்னதாக கூறி இருக்கிறார். மேலும், படத்தின் கதையை முதலில் விஜய் தான் தேர்ந்தெடுத்தார். பின்னர் நான் அதில் சில மாற்றங்களை செய்யசொன்னேன். பின்னர் விஜயும் லோகேஷ் கனகராஜிடன் இதுகுறித்து பேசி இருந்தார். பின்னர் 10 நாட்கள் கழித்து கதையில் மாற்றம் செய்து வந்தார் லோகேஷ் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

சமீப காலமாக விஜய் திரைப்படங்கள் தோல்வியடைய காரணம் விஜய் படத்தின் கதையில் தலையிடுவது தான் என்ற ஒரு பேச்சுக்களும் நிலவி வருகிறது. லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்திற்கு முன்னர் இயக்கிய மாநகரம், கைதி ஆகிய இரண்டு படங்களுமே பெருமளவு வெற்றி பெற்றதற்கு காரணம் இயக்குனர் சுதந்திரம் தான். ஆனால், கைதி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் 50% விஜய் திரைப்படமாகவும் 50% லோகேஷ் கனகராஜ் திரைப்படமாகவும் தான் அமைந்திருந்தது.

இதனாலையே மாஸ்டர் திரைப்படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்தவில்லை. சொல்லப்போனால் இந்த படம் ஓடியதற்கு விஜய் சேதுபதி தான் முக்கிய காரணம் என்ற ஒரு பேச்சுக்களும் அடிபட்டது. இப்படி ஒரு நிலையில் தான் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் மீண்டும் கூட்டணி அமைத்தார்கள். மேலும், மாஸ்டர் படத்தின் போது 50 சதவீதம் என்னுடைய படமாகவும் 50 சதவீதம் விஜயின் படமாகவும் இருந்தது என்பதால் அடுத்த படம் 100% என்னுடைய படமாக தான் இருக்க வேண்டும் என்று விஜய்யிடம் கூறியதாக லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

இதனால் மாநகரம் கைதி போன்ற படங்களைப் போல லியோ திரைப்படமும் 100% லோகேஷ் கனகராஜ் திரைப்படமாக இருக்கும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் இந்த படம் 100% லோகேஷ் கனகராஜ் படம் இல்லை என்று தான் கூறி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதியை லோகேஷ் கனகராஜ் இயக்கவில்லை என்றும் அவரது உதவியாளரான ரத்தினகுமார் தான் இரண்டாம் பாதியை இயக்கினார் என்ற அளவிற்கு இந்த படத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் கதையில் விஜய் தலையிட்டது குறித்து தயாரிப்பாளரை கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதே போல தான் நெல்சன் கோலமாவு கோகிலா, டாக்டர் என்று இரண்டு வெற்றிடங்களை கொடுத்தார். ஆனால், விஜயை வைத்து இயக்கிய பீஸ்ட் திரைப்படம் தோல்வியை தழுவியது. எனவே, அந்த படத்தில் கூட விஜய்யின் குறுக்கீடு இருக்குமோ என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.

Advertisement