தன்னை விட 30 வயது குறைந்த நடிகையை திருமணம் செய்த பாலு மஹிந்திராவின் சொல்ல மறந்த கதை..

0
13861
balu-mahindra
- Advertisement -

தென்னிந்தியா சினிமா திரை உலகில் இயக்குனர் பாலுமகேந்திரா என்று சொன்னால் தெரியாதவர் எவரும் இலர். அந்த அளவிற்கு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர். அவர் இயக்கிய பல படங்கள் இன்றும் வரை அழியாத காவியங்கள் என்று சொல்லலாம். இவர் சமகால தமிழ் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கியவர். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய பல மொழி திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் ஒளிப்பதிவாளர், எழுத்தாளர் ,தயாரிப்பாளர் என பன் முகங்களை கொண்டவர். இவருடைய சினிமாத்துறை வாழ்க்கை அனைவரும் அறிந்தது தான் .ஆனால், பாலுமகேந்திராவின் வாழ்க்கை வரலாற்றை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பல மேடு பள்ளங்களை கொண்டிருந்தது. பாலு மகேந்திராவுக்கு மூன்று மனைவிகள் இருந்தார்கள். அது அகிலா, நடிகை ஷோபா மற்றும் நடிகை மௌனிகா ஆகும். மேலும் அவர், தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், தன்னுடைய மனைவிகள் குறித்தும் வெளிப்படையாக பேசுவார்.

-விளம்பரம்-
Image result for balu mahendra

அதில் பாலுமகேந்திரா அவர்கள் தன்னுடைய முதல் மனைவி அகிலா குறித்து பேசியது, எனக்கு அகிலா மனைவியாக கிடைத்தது முன்ஜென்மத்தில் நான் செய்த புன்னியம் ஆகும். அகிலாவை நான் திருமணம் செய்யும் போது அவளுக்கு18 வயது. சரியா புடவை கூட கட்ட தெரியாத அந்த அளவுக்கு ஒரு வெகுளித்தனமான பெண். நாம் புராணகாலத்தில் வாழ்ந்த கண்ணகி, சீதை போன்ற பத்தினி பெண்களை பற்றி படித்து இருப்போம். அகிலாவும் அந்தமாதிரியான புராண காலத்தில் வாழ்ந்த பெண்மணிகள் போல இருந்தவள். இந்த யுகத்தில் அவள் பிறந்திருக்க தேவையில்லை. அந்த அளவிற்கு அடக்கம், அமைதி, பொறுமை என பத்தினி பெண்களுக்கு தேவையான அனைத்து குணங்களையும் கொண்டவர். மேலும், நான் வாழ்க்கையில் இவ்வளவு முன்னேறிய தற்கு முக்கிய காரணம் அகிலா என்று கூட சொல்லலாம். ஆனா அகிலா செய்த பாவம் எனக்கு மனைவியாக அமைந்தது. ஆனால்,நான் அவரைப்பற்றி யோசிக்காமல் மௌனிகா உடன் என் உறவை ஆரம்பிக்கத் தொடங்கினேன்.இதை நான் அகிலாவை பற்றி ஒருபோதும் நினைத்துப் பார்க்காமல் செய்துவிட்டேன் என்று கூறினார்.

இதையும் பாருங்க : பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் இணையும் அட்லீ.. சம்பளம் மட்டும் இத்தனை கோடியா அட்லீக்கு..

- Advertisement -

இதனைத்தொடர்ந்து பாலுமகேந்திரா அவர்கள் நடிகை சோபாவை கல்யாணம் செய்து கொண்டாலும் அவரை பற்றி அதிக இடங்களில் பேசுவதையோ, அவர்களுடைய திருமணம் பற்றியோ எந்த தகவலும் வெளிவரவில்லை. மேலும், சோபா அவர்கள் தன்னுடைய 17 வயதிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் மட்டும் வெளிவந்தது. மேலும், அவருடைய மரணம் குறித்து பாலு மகேந்திரா அவர்கள் கூறியது, தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்த தேவதை என் மனைவி ஷோபா. ஆனால், வந்த கொஞ்ச காலங்களிலேயே என்னை விட்டு பிரிந்து சென்று விட்டாள். அந்த தேவதையைப் பற்றி என்ன சொல்வது? என்ன எழுதுவது? சோபா என் மனைவி மட்டும் அல்லாமல் ஒரு சிறந்த நடிகையும் ஆவார் என்று கூறினார். இதனை தொடர்ந்து நடிகை மெளனிகாவை எல்லாருக்குமே தெரியும்.மேலும், பாலு மகேந்திராவுடன் இறுதிவரை வாழ்ந்தது நடிகை மௌனிகா தான். இன்னும் சொல்லப்போனால் பாலுமகேந்திராவை விட 30 வயது சிறியவள் மௌனிகா.

Related image

பாலுமகேந்திராதன் மனைவி மெளனிகா பற்றி கூறியது, கடந்த 1998-ஆம் ஆண்டு நாங்களிருவரும் மனப்பூர்வமாக கல்யாணம் செய்து கொண்டோம். மேலும், திருமதி பாலுமகேந்திரா என்று என்னை கூப்பிட்டாங்கனா! அகிலா அம்மாவுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்.இதை என்னால புரிஞ்சுக்க முடிகிறது என மௌனிகா கூறினார். அந்த அளவிற்கு வெள்ளை மனது உடையவள். மேலும்,தன் மூலம் ஒரு குழந்தை பெற்று கொண்டால் பிற்காலத்தில் குடும்பத்திற்குள் பல பிரச்சனைகள் ஏற்படும் என்ற ஒரே காரணத்துக்காக தாய் ஆகவேண்டும் என்ற ஆசையை கூட தவிர்த்தவள் என்று பெருமையுடன் கூறினார். அந்த அளவிற்கு என் மனைவியையும் என்னையும் நேசித்தவர். அவள் மனைவியாக கிடைக்க நான் பெரும் பாக்கியம் செய்துள்ளேன் என்றும் கூறியிருந்தார்.

-விளம்பரம்-
Advertisement