பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் இணையும் அட்லீ.. சம்பளம் மட்டும் இத்தனை கோடியா அட்லீக்கு..

0
4852
atlee
- Advertisement -

தென்னிந்திய திரைப்பட இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் தளபதி விஜய் நடித்துள்ள 63 வது படமான “பிகில்” படம் இன்னும் சில நாட்களில் அதாவது தீபாவளி அன்று திரையரங்குக்கு வெளிவர உள்ளது என்ற தகவல்கள் சமூக வலைத் தளங்களில் ஜெட் வேகத்தில் பரவி வருகின்றது.விஜய்யின் ‘பிகில்’ படம் ரசிகர்களிடையே அதிக ஆர்ப்பாட்டத்தையும், ஆவலையும் தூண்டியுள்ளது. தளபதி ரசிகர்கள் மற்றும் மக்கள் அனைவரும் பிகில் படத்திற்காக ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். பிகில் படத்தின் டிரைலர் இணையங்களில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் திருவிழா போன்று கொண்டாடி வருகின்றனர். பிகில் ட்ரைலர் வந்த சில மணி நேரங்களிலேயே பல மில்லியன் பார்வையாளர்களை தாண்டியது.விஜய் அவர்களின் பிகில் படத்தின் ட்ரைலரை பார்த்துவிட்டு பல பிரபலங்கள் பாராட்டியும், வாழ்த்துகளை தெரிவித்தும் வருகிறார்கள்.

-விளம்பரம்-
Atlee with Shah Rukh Khan at MA Chidambaram stadium

மேலும், பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் அட்லி அவர்கள் கூறியது, தளபதி விஜயுடன் அடுத்த படத்திலும் நாங்கள் இணைவோம் என்று கூறியிருந்தார். ஆனால், விஜய் அவர்கள் அதற்கு முன்னாடியே மாநகரம் படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் “விஜய் 64” படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு அந்த படத்திற்கான படப்பிடிப்பு மும்முரமாக போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் விஜய் அவர்களுக்கு கால்ஷீட் கிடைக்காததால் அட்லி உடன் இணைய வாய்ப்பு இல்லை என்ற தகவலும் வெளிவந்துள்ளது. இதனை தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் அவர்கள் பிகில் படத்தில் ஒரு 15 நிமிடங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்து இருந்தது. ஆனால், கடைசி நிமிடங்களில் அவர் கால்ஷீட் கிடைக்காததால் ஷாருக்கான் படத்தில் நடிக்க வில்லை என்று தெரிந்தது. பின்னர் அவருக்கு பதிலாக ஜாக்கி ஷெராப் கமிட்டானார்.

இதையும் பாருங்க : காதலர் தினம் குணால் மரணத்தின் மர்மம் என்ன ?அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா ..

- Advertisement -

சமீபத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஷாருக்கான்,அட்லீயும் ஒருத்தருக்கு ஒருத்தர் பக்கத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அதற்கான புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார்கள்.மேலும், கடைசியாக ஷாருக்கான் அவர்கள் நடித்த ஜீரோ படம் ஹிந்தியில் பட்டையை கிளப்பியது. அந்த அளவுக்கு ஷாருக்கான் தெரிக்கவிட்டாரு. இந்த நிலையில் , தற்போது ஹிந்தி வட்டாரத்தில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்க போகிறார் என்ற தகவல் வைரலாக பரவி வருகிறது. தற்போது ஷாருக்கானும் டிசம்பர் மாதம் ஃபிரியாக இருப்பதால் அட்லி உடன் இணைய வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். சமீபத்தில் கூட அட்லியின் பிகில் படத்தின் டிரைலரை பார்த்து ஷாருக்கான் இணையங்களில் தன்னுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து இருந்தார்.

Image result for atlee shahrukh

ஆகவே இவர்கள் இருவரும் இணைந்து படத்தில் பணிபுரிவார்கள் என ஆணித்தரமாக முக்கிய செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் பரவி வருகிறது. இந்நிலையில் அட்லிக்கு இந்த படத்தில் 30 கோடி ரூபாய் சம்பளம் தருவதாக ஒப்பந்தம் செய்ய உள்ளதாகவும் கூறி இருந்தார்கள்.இதுவரை தமிழ் திரைப்பட இயக்குனர்களில் சங்கர் தான் அதிக அளவு சம்பளம் வாங்குவார். மேலும், ஷாருக்கான் இவரது படத்தில் ஒப்பந்தம் செய்தால் சங்கரை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் திரைப்பட இயக்குனர்களில் அட்லீ தான் முதல் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்,அட்லி, சாருக்கான் இணையும் படம் குறித்த தகவல்கள் டிசம்பர் மாதம் தெரியும் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றன. அப்ப நம்ம அட்லீயும் பாலிவுட்டில் கலக்க தயாராக உள்ளார் என்று தெரியவருகிறது.

-விளம்பரம்-
Advertisement