ஹீரோவானார் ‘பாரதி கண்ணம்மா’ அகிலன் – பூஜையுடன் துவங்கிய ஷூட்டிங், ஷூட்டிங் புகைப்படங்கள் இதோ.

0
472
- Advertisement -

பொதுவாகவே விஜய் டிவியில் கலக்கி வந்த பல நடிகர்கள் தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து கொண்டிருக்கிறார்கள். விஜய் டிவியில் ஆங்கராக இருந்த சிவகார்த்திகேயன் தொடங்கி தற்போது இருக்கும் குக் வித் கோமாளி புகழ் வரை என பலரும் வெள்ளித்திரையில் களமிறங்கி கலக்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பாரதி கண்ணம்மா தொடரில் அறிமுகமான நடிகர் அகிலன் தற்போது ஹீரோவாக சினிமா உலகில் களம் இறங்கி இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது.

-விளம்பரம்-

இந்த தொடர் 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. காதல், குடும்பம் என எல்லாம் கலந்த கலவை தொடராக உள்ளது. மேலும், இந்த சீரியல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது. இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார். கடந்த ஆண்டு தான் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார்.

இதையும் பாருங்க : இனி நான் தான் நிரந்தர சந்தியா, ஷாக் கொடுத்த புதிய நாயகி – ஆல்யா மானஸா என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியல் பற்றிய தகவல்:

தற்போது கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். வினுஷா தேவி பார்ப்பதற்கு அச்சு அசலாக ரோஷினி போலவே இருக்கிறார். மேலும், புதிய கண்ணம்மாவாக வினுஷா நடிக்க ஆரம்பத்திலிருந்து சீரியல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. மேலும், ரோஷினி சீரியலில் இருந்து விலகியவுடன் அகில் கதாபாத்திரத்தில் நடித்த இருந்த அகிலன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த சீரியல் இருந்து விலகிவிட்டார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பாரதியின் தம்பி மற்றும் அஞ்சலியின் கணவன் கதாபாத்திரத்தில் அகிலன் நடித்திருந்தார்.

சீரியலில் இருந்து விலகிய அகிலன்:

இவர் சீரியலில் விலகி அடுத்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும், சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போது அகிலனுக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது. தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டி இருந்ததால் சீரியலை விட்டு விலகுவதாக அகிலன் அறிவித்து இருந்தார். மேலும், அகிலன் சீரியலில் விலகியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் சினிமாவில் நடிகிறார் என்றவுடன் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும், அகிலன் பாரதி கண்ணம்மா சீரியல் இருந்து விலகிய பிறகு அகிலன் ஆல்பம் பாடல்களில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

அகிலன் நடித்த படம்:

அதற்கு பிறகு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வீரமே வாகை சூடும் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை து.பா. சரவணன் இயக்கி இந்த இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி சார்பாக விஷால் தயாரித்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்த நிலையில் அகிலன் முதல் முறையாக கதாநாயகனாக நடிக்கும் படம் பற்றிய தகவல் சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியானது. அகிலன் அவர்கள் முதல் முறையாக தெலுங்கு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அகிலன் நடிக்கும் படம் பற்றிய தகவல்:

இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார். இந்த படத்தை ரவிசங்கர் என்பவர் தயாரிக்கிறார். இயக்குனர் பானு சங்கர் படத்தை இயக்குகிறார். மணிசர்மா இந்த படத்திற்கு இசையமைப்பாளராக இருக்கிறார். தற்போது அகிலன் சினிமா சூட்டிங்கில் படு பிசியாக இருக்கிறார். அந்த படத்தின் பூஜை சமீபத்தில் தான் நடந்தது. மேலும், அகிலன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆனது தொடர்ந்து ரசிகர்கள் அகிலனுக்கு வாழ்த்துக்களை குவித்து இருக்கின்றனர். சீரியலில் ரசிகர்களை கவர்ந்த அகிலன் வெள்ளித்திரையிலும் கவருவாரா? என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

Advertisement