இனி நான் தான் நிரந்தர சந்தியா, ஷாக் கொடுத்த புதிய நாயகி – ஆல்யா மானஸா என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
620
RajaRani
- Advertisement -

ராஜா ராணியில் இனி சந்தியாவாக ரியா நிரந்திரமாக நடிக்க இருக்கிறார் என்று சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வைரலானதை தொடர்ந்து தற்போது இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் ஆல்யா. சின்னத்திரையில் மிகப்பிரபலமான தம்பதிகளாக திகழ்பவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. ராஜா ராணி சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் ஆல்யாவும், சின்னையா கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தார்கள். அதோடு இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் சஞ்சீவ் – ஆல்யா.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-118.png

மேலும், இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். கடந்த ஆண்டு தான் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. இவர்களுடைய குழந்தையின் பெயர் அய்லா. பின் குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் கலக்கிக் கொண்டு வருகிறார். அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் சமீபத்தில் தொடங்கிய கயல் சீரியலில் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : அட, ரம்யா கிருஷ்ணனுக்கு சோ ராமசாமி இப்படி ஒரு நெருங்கிய உருவினரா ? இது தெரியுமா ?

- Advertisement -

சீரியலில் ஆல்யா விலக காரணம்:

இந்நிலையில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறார். இப்படி இரண்டாம் முறை கர்ப்பமாக இருந்தாலும் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால், விரைவில் ஆல்யாவிற்கு குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிவிட்டார். ஆல்யா விலகியதை தொடர்ந்து தற்போது ஆல்யா மானஸாவிற்கு பதிலாக ரியா என்பவர் புதிய சந்தியாவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

This image has an empty alt attribute; its file name is 1-432.jpg

கர்பத்தால் விலகிய ஆல்யா :

முதல் குழந்தை பிறந்து சில மாதத்திலேயே ஆள்யா மானஸா ‘ராஜா ராணி’ தொடரில் நடிக்க வந்துவிட்டார். எனவே, இரண்டாம் முறையும் குழந்தை பிறந்தவுடன் மீண்டும் நடிக்க வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட ஆல்யா மானஸா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியது, ராஜா ராணி 2வில் இருந்து விலக எந்த ஒரு எண்ணமும் இல்லை. ஒரே ஒரு சந்தியா தான். அது இந்த ஆல்யா மட்டும் தான் என்று பதில் அளித்து இருந்தார்.

-விளம்பரம்-

நான் தான் நிரந்திர சந்தியா :

அதே போல புதிய சந்தியாவாக நடித்து வரும் ரியாவை ரசிகர்கள் சிலர் ஏற்றுக்கொண்டாலும் மற்றவர்கள் சிலர் ஆல்யா தான் சந்தியாவாக வர வேண்டும் என்று கூறி வருகின்றனர். அதே போல சமீபத்தில் ரியாவின் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர் ஒருவர் ‘தயவு செஞ்சி temporaryனு சொல்லிருங்க, ஆல்யா தான் சரியா இருப்பாங்க’ என்று கமன்ட் செய்து இருந்தததற்கு தான் permanent ஆக சந்தியா ரோலில் நடிக்கப்போவதாக கூறி இருக்கிறார் ரியா.

ஆல்யா மானஸா விளக்கம் :

ரியாவின் இந்த பதிலால் ஆல்யாவின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர் ஒருவர், எப்போ நீங்க ராஜா ராணியில் வருவீர்கள், உங்களை மிகவும் மிஸ் செய்கிறோம் என்று கூறி இருந்தார். இதற்கு பதில் அளித்த ஆல்யா, நான் ராஜா ராணியில் மீண்டும் வரப்போவது இல்லை. சந்தியா கதாபத்திரம் இனி நிரந்திரமாக புதிய நாயகி தான் நடிப்பார் என்று ஷாக் கொடுத்துள்ளார்.

Advertisement