‘6 மணி நேரம் ஆச்சி’ – பிரசவத்திற்கு பிறகு வெண்பாவிடம் இருந்து இப்படி ஒரு பதிவா?

0
229
Farina
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் தொடர்களில் பாரதி கண்ணம்மா சீரியல் ஓன்று. சமீபத்தில் தான் இந்த சீரியலில் இருந்து கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி விலகி இவருக்கு பதில் தற்போது வேறு ஒரு நடிகை நடித்து வருகிறார். கண்ணம்மாவுக்கு பிறகு இந்த சீரியலில் மக்கள் மத்தியில் அதிகம் கவர்ந்த கதாபாத்திரம் வெண்பா. இந்த வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பரினா ஆசாத். இந்த தொடரில் வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் பரினா நடித்திருந்தார்.

-விளம்பரம்-

மேலும், நிஜ வாழ்க்கையில் பரினா கர்ப்பமாக இருந்தததால் இவருடைய காட்சிகள் காண்பிக்கப்படவில்லை. சமீபத்தில் தான் பரினாவுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து பரினா சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். இதற்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் பரினா தன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் அனைத்து தருணங்களையும் சோஷியல் மீடியாவில் அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறார்.

இதையும் பாருங்க : ஒரே மாசம் உணவு இல்லமா செத்துடிச்சி, சீல் வைக்கப்பட்ட தன் வீட்டிற்குள் செல்ல மறுத்த மன்சூர் அலிகான்.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது அவர் MY LABOUR STORY என்று இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பது, பொதுவாகவே கர்ப்பமாக இருந்தால் வேலைகளை விட வேண்டும். அதற்காக வேலைகளை செய்யாமல் இருக்க வேண்டும் என்பதில்லை. கர்ப்ப காலம் முழுவதும் சுறுசுறுப்பாக இருந்தால் தான் பிரசவத்தின் போது கஷ்டம் இல்லாமல் இருக்கும். நான் பிரசவத்தின் கடைசி வாரம் வரை சூட்டிங் போனேன். தினசரி உடற்பயிற்சிகள், யோகா போன்றவற்றை எனக்கு பிரசவ காலத்தில் உதவியது. என்னால் முடியும் என்றால் எல்லோராலும் செய்ய முடியும்.

This image has an empty alt attribute; its file name is image-126.png

கர்ப்பமாக இருக்கும் போது நீங்கள் உங்களை முழுவதுமாக மாற்றி கொள்ள வேண்டியது இல்லை. கர்ப்பம் என்பது வாழ்க்கையில் ஒரு பகுதி. எனவே நீங்கள் நீங்களாகவே இருங்கள். அதை எதிர் கொள்ளுங்கள். இந்த நேரத்தில் நான் சுந்தரம் மருத்துவ அறக்கட்டளையின் டாக்டர் உமா அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கர்ப்பத்தின் கடைசி தருணம் வரை என்னை வெண்பாவாக ஸ்கிரீனில் தோன்ற வைத்திருந்ததற்கு, என்னைப்பற்றி எல்லா விதமான கருத்துக்களையும் உடைத்ததற்கு சீரியல் டைரக்டர் பிரவீனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

-விளம்பரம்-

அதோடு என்னை முழுநேர மோட்டிவேட் செய்து பயிற்சி அளித்த திலகிற்கு நன்றி. மீண்டும் ஒரு வாரத்தில் நான் உடற்பயிற்சிகளில் ஈடுபட காத்துக்கொண்டிருக்கிறேன். வாழ்நாள் முழுவதும் எனக்கு அன்பு மற்றும் ஆதரவு தந்த என்னுடைய கணவர் உபைத் ரஹ்மானுக்கும் நன்றி என்று பதிவிட்டிருக்கிறார். தற்போது இந்த போஸ்ட் சோசியில் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் உங்கள் வேலையில் மீதான ஆர்வத்திற்கு எங்களுடைய பாராட்டுக்கள் என்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

Advertisement