ரோஷினி சீரியலை விட்டு விலக காரணம் இதான் – வெளியான தகவல். புதிய கண்ணம்மாவுடன் தொடருமா ? இல்ல எண்டு கார்டா ?

0
69954
rohini
- Advertisement -

பாரதி கண்ணம்மா தொடரிலிருந்து ரோஷினி வெளியேறியதற்கான காரணம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் பாரதி கண்ணம்மா ஒன்று. இந்த சீரியல் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்றுகொண்டிருக்கின்றது. மேலும், பாரதி கண்ணம்மா சீரியல் இல்லத்தரசிகளின் பேவரட் சீரியல்களில் ஒன்றாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி ஹரிப்ரியன் தற்போது இந்த சீரியலில் இருந்து திடீரென விலகியுள்ளார்.

-விளம்பரம்-

அக்டோபர் 23ஆம் தேதி சனிக்கிழமை சூட்டிங்கில் ரோஷினி கலந்து கொண்டுள்ளார். பின் நான் இன்றில் இருந்து சீரியலில் இருந்து விடை பெறுகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டாராம். தற்போது இந்த தகவல் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. மாடலிங் மூலம் தன்னுடைய கேரியரை தொடங்கினார் ரோஷினி. அதற்கு பிறகு தான் இவர் சின்னத்திரை நோக்கி வந்தார். இவர் முதன் முதலாக நடித்த சீரியல் பாரதிகண்ணம்மா தான். இவர் நடித்த முதல் சீரியலே மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக ஹிட்டானது.

இதையும் பாருங்க : தாதா சாகேப் விருது மேடையில் தன் பஸ் ட்ரைவர் நண்பர் குறித்து பேசிய ரஜினி – யார் தெரியுமா அவர் ? இதோ புகைப்படம்.

- Advertisement -

உண்மையாகவே கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். இந்த சூழலில் திடீரென சீரியல் இருந்து ரோஷினி வெளியேறியது குறித்து ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்து வருகின்றனர். அதில் சிலர் இவர் சீரியல் பிரபலத்தின் மூலம் இவருக்கு சினிமாவில் பல பட வாய்ப்புகள் வந்ததாகவும், சினிமாவில் கவனம் செலுத்துவதற்காக தான் சீரியலில் இருந்து வெளியேறுகின்றார் என்றும் கூறுகின்றனர். இது குறித்து ரோஷினியின் நெருங்கிய நண்பர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியது, பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் தான் அவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது.

அதன் மூலம் அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் வந்தது என்னவோ உண்மை தான். ஆனால், ரோஷினி அந்த வாய்ப்புகளை முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. நிதானமாக யோசித்து முடிவெடுக்கலாம் என்று இருந்தார். இந்த நிலையில் சில பெரிய பேனரில் இருந்து கேட்டு சிலர் வந்தார்கள். தொடர்ச்சியாக நீங்கள் சினிமாவில் படம் பண்ணலாம். ஆனால், சீரியலில் ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கிறது உங்களுடைய அடையாளத்தை சினிமாவில் குழைக்கும். இதனால் ஹீரோயினியாக இல்லாமல், துணை நடிகை வாய்ப்புகள் வரும் என்று சொன்னார்கள். இதனால் கொஞ்ச நாளாகவே ரோஷினி குழப்பத்தில் இருந்தார்.

-விளம்பரம்-

கடைசியில் தான் ரோஷினி இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறினார்கள். அதுமட்டுமில்லாமல் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் பரீனா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். கூடிய விரைவில் அவர் டெலிவரி செல்லும் சூழ்நிலையில் இருப்பதால் இவருக்கு பதில் வேறு ஒரு கதாபாத்திரம் வருகிறார் என்று சொல்கிறார்கள். இந்த நிலையில் ஹீரோயின் விலகுவது பாரதிகண்ணம்மா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அது மட்டுமில்லாமல் பாரதிகண்ணம்மா சீரியல் டிஆர்பி இனிமேல் முன்னிலையில் வகிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.

Advertisement