பாரதி கண்ணம்மா சீரியல் முடிஞ்சி போச்சா? பாரதி வெளியிட்ட புதிய விடியோவால் ரசிகர்கள் குழப்பம்.

0
290
barathi
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்றுகொண்டிருக்கின்றது. மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார். சமீபத்தில் தான் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், ரோஷினி சீரியல் இருந்து விலகப் போகிறார் என்று சொன்னவுடனே ரசிகர்கள் எல்லோரும் தயவுசெய்து சீரியலை நிறுத்தி விடுங்கள் என்று தங்களின் வருத்தத்தை தெரிவித்து இருந்தார்கள். தற்போது கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். வினுஷா தேவி பார்ப்பதற்கு அச்சு அசலாக ரோஷினி போல் இருக்கிறார். பின் புதிய கண்ணம்மாவாக வினுஷா நடிக்க ஆரம்பத்திலிருந்து சீரியல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. தற்போது சீரியலில் பல்வேறு திருப்பங்களும் வந்துகொண்டிருக்கின்றது.

- Advertisement -

இதனிடையே வெண்பா கதாபாத்திரத்தில் நடித்த பரினாவுக்கு குழந்தை பிறந்திருப்பதால் தற்போது சீரியலில் இருந்து அவருடைய காட்சிகள் மட்டும் காண்பிக்காமல் இருக்கிறார்கள். ஆனால், வெண்பா கதாபாத்திரத்திற்கு பதில் வேறு ஒருவர் நடிக்கிறாரா? இல்லையா? என்பது இன்னும் தெரியவில்லை. இப்படி போய்க்கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் பாரதியாக நடிக்கும் அருண்பிரசாத் தற்போது வீடியோ ஒன்றை தன்னுடைய பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ மூலம் அவர் சிம்லாவுக்கு சென்றிருப்பது தெரிய வருகிறது. வீடியோவில் அருண் ஒரு ஹோட்டல் முன்பு டான்ஸ் ஆடி இருக்கிறார்.

பின் அவர், நீண்ட காலத்திற்குப் பிறகு நான் நானாக இருக்கிறேன். பாரதியை மறந்துவிட்டு இப்போது அருண் ஆக இருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்த வீடியோவில் அவருடைய கெட்டப் பயங்கரமாக மாறிருக்கிறது. சீரியலில் அவர் தாடி, மீசையுடன் தான் நடித்து வந்தார். ஆனால், தற்போது அதை எல்லாம் எடுத்து புது கெட்டப் உடன் அருண் இருக்கிறார். இதையெல்லாம் பார்த்த நெட்டிசன்கள் அப்போது பாரதிகண்ணம்மா சீரியல் நெஜமாவே முடிஞ்சு போச்சா? என்று கேட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement