பாரதிக்கு DNA டெஸ்ட் எடுக்க போறாங்களா – ரசிகரின் கேள்விக்கு பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை சொன்ன பதில்.

0
5664
bharathi
- Advertisement -

தற்போது இருக்கும் கால கட்டங்களில் வெள்ளித்திரையில் ஒளிபரப்பாகும் படங்களை ரசிப்பதை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை ரசிக்கும் மக்கள் தான் அதிகமாக உள்ளனர். அந்த வகையில் தற்போது போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு சேனல்களிலும் தொடர்களை அதிகப்படுத்திக் கொண்டு வருகின்றனர் சேனல் நிறுவனம். இதனைத்தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எல்லா சீரியல்களுமே தூள் கிளப்புகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி ஒளிபரப்பாக துவங்கிய “பாரதி கண்ணம்மா” சீரியல் மாபெரும் ஹிட் அடைந்துள்ளது.

-விளம்பரம்-
fareena

ஆரம்பத்தில் கொஞ்சம் சுமாராக சென்று கொண்டு இருந்த இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த சீரியலின் TRP வேற லெவலில் எகிறியது. அதற்கு முக்கிய காரணமே மீம் கிரியேட்டர் தான். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீரியலில் கண்ணம்மா கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். கண்ணம்மா தொடர்ந்து நடந்து செல்வதை ட்ரோல் செய்து நெட்டிசன்கள் பல்வேறு மீம்களை போட்டு வச்சி செய்து வந்தனர்.

இதையும் பாருங்க : பெட்ரோல் விலை உயர்வை நக்கல் செய்யும் விதமாக சன்னி லியோன் பதிவிட்ட புகைப்படம். (பாராட்டும் ரசிகர்கள்)

- Advertisement -

இதை தொடர்ந்து இந்த சீரியலின் Trp எகிறியது. ஆனால், சமீப காலமாக இந்த தொடர் ரசிகர்களின் பொறுமையை மிகவும் சோதித்து வருகிறறது. இதனால் ரசிகர்கள் பலரும் பாரதிக்கு dna டெஸ்ட் எடுத்து தொலைங்க என்ற அளவிற்கு கடுப்பாகிவிட்டனர். பாரதிக்கு DNA டெஸ்ட் எடுத்துவிட்டால் இந்த தொடர் முடிந்துவிடும் என்பதால் இந்த தொடரை ஜவ்வாக இழுத்து கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த தொடரை சீக்கிரம் முடித்துவிடுங்கள் என்று ரசிகர்கள் பலரும் புலம்பி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து பரீனாவிடம் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர், பாரதியை DNA டெஸ்ட் எடுக்க விடுவீர்களா என கேட்க, அதற்கு பரீனா Wait And Watch என்று கூறியுள்ளார். அதே போல மற்றொரு ரசிகர், பாரதி கண்ணம்மா முடிய போகுதா என்று கேட்டதற்கு, வாய்ப்பில்ல ராஜா, DNA டெஸ்ட் எடுக்கமா எப்படி சீரியல முடிப்போம் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement