பெட்ரோல் விலை உயர்வை நக்கல் செய்யும் விதமாக சன்னி லியோன் பதிவிட்ட புகைப்படம். (பாராட்டும் ரசிகர்கள்)

0
4527
Sunny Leon
- Advertisement -

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நடிகை சன்னி லியோன் ட்விட்டரில் பெட்ரோல் விலை ஏற்றம் குறித்து பதிவிட்டுள்ள பதிவு வைரலாகியுள்ளது. ஹாலிவுட்டில் பாலியல் ஆபாச படங்களில் நடித்து பின்னர் திரைப்படங்களில் நடிகையாக மாறியவர் நடிகை சன்னி லியோன். தற்போது ஹிந்தி திரையுலகின் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவருக்கு டேனியல் வெபர் என்ற கணவர் இருக்கிறார்.ஆபாச நடிகையாக இருந்தாலும் இவரை இந்திய ரசிகர்கள் நடிகையாக ஏற்றுக்கொண்டனர்.

-விளம்பரம்-
Image

திருமணம் ஆன பின்னர் இரண்டு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும், தற்போது தமிழ், மலையாளம் என்று பல படங்களில் நடித்து வருகிறார்.முன்னர் பார்ன் எனப்படும் நீலப்படங்களில் நடித்து வந்த அவர் பாலிவுட்டில் அறிமுகமாகி தற்போது அங்கு முன்னணி நடிகையாகவும் மாறிவிட்டார். தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

இதையும் பாருங்க : கல்லூரியில் படிக்கும் போது அப்படி இருக்க ஆசை பட்டேன், இப்போ இப்படி இருக்கேன். ஆனால் – ஆண்ட்ரியா பகிர்ந்த கல்லூரி ஸ்டோரி.

- Advertisement -

அதன் பின்னர் வீரமாதேவி என்ற படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி படத்திலும் கமிட் ஆகி இருந்தார். மேலும், தென்னிந்திய ரசிகர்கள் மத்தியிலும் ரசிகர்களை ஈர்த்து வருகிறார் சன்னி. மேலும், தென்னிந்திய சினிமாவிலும் கால்பதிக்க முயற்சி செய்து வருகிறார். இதற்காக தமிழில் பொட்டு வடிவுடையான் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார்.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலை பல இடங்களில் ரூ.100ஐ தாண்டியும் விற்பனையாகி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பல இடங்களிலும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வு குறித்து ட்விட்டரில் சூசகமாக பதிவிட்டுள்ள நடிகை சன்னி லியோன் “இது ரூ.100 ஐ தாண்டிவிட்டால் உங்கள் உடல்நலனை காத்து கொள்வது அவசியம். சைக்கிள் ஓட்டுவது நலம்” என்று பதிவிட்டுள்ளார், தற்போது பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement