சமீப காலமாகவே மக்களின் பொழுதுபோக்கு நிகழ்வாக சின்னத்திரை தொடர்கள் அமைந்துள்ளது. அதிலும் கொரோனா லாக் டவுனில் இருந்து அனைவரும் சின்னத்திரை சீரியலை நோக்கி தான் சென்று கொண்டு இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. அதுமட்டுமில்லாமல் இல்லத்தரசிகளின் பேவரேட்களில் ஒன்றாக பாரதிகண்ணம்மா திகழ்ந்து வருகிறது.
இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார். சமீபத்தில் தான் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். திடீரென சீரியல் இருந்து ரோஷினி வெளியேறியது குறித்து ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்தது.தற்போது கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார்.
புதிய கண்ணம்மா :
இவர் விஜய் டிவி பிரபலமான மைக்கேல் நடித்த ‘N4’ என்ற படத்தில் 3 நாயகிகளில் ஒருவராக நடித்து இருக்கிறார். வினுஷா தேவி தமிழ்நாட்டை சேர்ந்தவர். இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் படிப்பை முடித்துள்ளார். வினுஷா தேவி ஒரு புரோபஷனல் மாடல். அதுமட்டுமில்லாமல் இவர் டிக் டாக் வீடியோக்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் மிக பிரபலமானவர். மேலும், வினுஷா தேவி பார்ப்பதற்கு அச்சு அசலாக ரோஷினி போல் இருக்கிறார்.
ரீ – என்ட்ரி கொடுத்த பரீனா :
மேலும், வெண்பா கதாபாத்திரத்தில் நடித்த பரினா மீண்டும் வில்லியாக சீரியலில் என்றி கொடுத்துவிட்டார். இந்த சீரியலில் கோர்ட்டில் பாரதியும் கண்ணம்மாவும் ஆறு மாத காலம் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என்று கோர்ட்டில் தீர்ப்பு வழங்கி இருந்தது. இதனால் பாரதி, கண்ணம்மா இருவரும் கண்ணம்மா வீட்டில் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால், பாரதி வேண்டாவெறுப்பாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
மேலும், இவர்கள் இருவருக்குமான குழந்தைகள் இருவருமே பாரதியின் தாய், தந்தையருடன் இருக்கிறது.
இந்த வாரம் பாரதியும், கண்ணம்மாவும் நீதி காத்த அம்மன் கோயிலில் பொங்கல் வைக்கிறார்கள்.
அதில் நியாயம் கண்ணம்மா பக்கத்தில் இருக்கிறது என்று நீதி கிடைக்கிறது. பாரதி நிஜமாகவே கண்ணம்மா பக்கம் தான் நியாயம் இருக்கிறதா? என்று குழப்பத்தில் இருக்கிறார். அடுத்த வாரம் பாரதியும் கண்ணம்மாவும் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க போகிறார்கள்.
வினுஷாவின் சம்பளம் :
இப்படி பல திருப்பங்களுடன் இந்த சீரியல் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது வினுஷா தேவி குறித்து ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், கண்ணம்மாவாக நடிக்கும் நடிகை வினுஷா தேவிக்கு ஒரு வார சம்பளமாக 20 ஆயிரம் வாங்குகிறாராம். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஒரு நாளைக்கு கண்ணம்மாவுக்கு இவ்வளவு சம்பளமா! என்று கேட்டு வருகிறார்கள்.