மூன்று சிகரெட் பாக்கெட்டுகளை வாங்கி கொடுத்து வழி அனுப்பிய அம்மா, பின் கோமாவில் சென்ற பரிதாபம். நினைவுகள் பகிர்ந்த பாரதிராஜா.

0
478
Barathiraja
- Advertisement -

தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் பாரதிராஜா. இவரை இயக்கத்தின் இமயம் என்று தான் அனைவரும் சொல்வார்கள். அந்த அளவிற்கு இவரது படைப்புகள் உள்ளது. இன்றும் இவர் தமிழ் சினிமாவில் சிறந்த காவியமாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். மேலும், பாரதிராஜா அவர்கள் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். அதுமட்டும் இல்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே கிராமத்து மண்வாசனை, உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை மையமாகக் கொண்டது. அதனால் தான் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனராக பாரதிராஜா திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், தமிழ் சினிமா உலகில் ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, ஸ்ரீதேவி போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்து வைத்தது பாரதிராஜா தான். இவர் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். தற்போது இவர் படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

- Advertisement -

பாரதிராஜா பார்த்த அரசு வேலை:

இந்நிலையில் சமீபத்தில் பாரதிராஜா அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவரிடம் திரைப்பயணம் குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் உங்களின் சினிமா பயணம் குறித்து கேட்டதற்கு பாரதிராஜா கூறியது, சொந்த மண்ணில் 120 ரூபாய் சம்பளத்தில் இன்ஸ்பெக்டராக கம்பீரமாக வேலை பார்த்தவர் சின்னசாமி. பாரதிராஜா கனவை நனவாக்குவதற்கு சென்னை வந்தார். வந்த இடத்தில் மாதம் 70 ரூபாய் சம்பளத்தில் பெட்ரோல் பங்கில் வேலைக்கு சேர்ந்தார். அந்த சின்ன சம்பளத்திலும் குருவி போல சேர்த்து வைத்து சென்னையில் நாடகம் போட்டார்.

போலீஸ் வேலையை விட காரணம்:

அத்தனை வறுமையிலும் கஷ்டத்திலும் பாரதிராஜாவின் கலைத்தாகத்தை அணைய விடாமல் காப்பாற்றியதில் சின்னசாமிக்கு பெரிய பங்கு உண்டு. பாரதிராஜாவின் கனவுகளுக்காக பெட்ரோல் பங்க் வேலை அலுப்பையும், பசி வேதனையும் சின்னசாமி தாங்கிக் கொண்டான். இந்த இயக்குனர் பாரதிராஜாவை அந்த சின்னசாமி தான் வளர்த்தான். இப்போதும் எனக்கு இருக்கிற ஒரே உற்ற நண்பன் நான் தான். நான் தான் அந்த சின்னசாமி. போலீசில் இருந்து இயக்குனர் ஆனேன் என்று கூறினார். பின் இதனை தொடர்ந்து உங்கள் அம்மா கருத்தம்மா உங்களுக்கு எந்த அளவுக்கு சுதந்திரம் கொடுத்தார்கள் என்று கேள்வி கேட்டதற்கு அவர் கூறியிருப்பது,

-விளம்பரம்-

பாரதிராஜா சினிமாவில் நிலைய காரணமாக இருந்தது:

கருத்தம்மா இல்லைன்னா, இந்த பாரதிராஜா இல்லை. அரசாங்க வேலையை உதறிவிட்டு சென்னைக்கு புறப்பட்டபோது என் எல்லா உறவுகளும் கறுப்புக்கொடி காட்டினார்கள். ஆனால், என் அம்மா மட்டும் தான் எனக்கு ஆதரவு தெரிவித்தார்கள். பாசத்தோடு அனுப்பி வைத்தார்கள். என் சூட்கேஸில் 3 பேண்ட், 3 சட்டை போக எனக்கு பிடித்த மூன்று சிகரெட் பாக்கெட்டுகளை வாங்கி வைத்து என்னை வழி அனுப்பினார்கள். சென்னை வந்து சினிமாவில் வேர்பிடித்து நான் வளர்ந்த பிறகு என் கூடவே அவர்கள் வந்து தங்கினார்கள். சில வருடங்களுக்கு முன்னாடி அவங்க உடல் நிலை சரியில்லாமல் போன போது கூட என்னை பக்கத்தில உட்கார வைத்து ராசா ராசா என்று என முகத்தை வருடிக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.

பாரதிராஜா அம்மா இறந்த காரணம்:

அந்த அளவிற்கு பாசக்காரி. அப்போது திடீரென்று ஒருநாள் அவர் சுயநினைவை இழந்துவிட்டார். அதிலிருந்து அவளை ஒரு குழந்தையாக சாப்பாடு ஊட்டுவது, குளிப்பாட்டுவது என எல்லாமே நானே செய்தேன். மருந்து மாத்திரைகளோடு நான் ஊட்டிய பாசமும் வீண்போகவில்லை. திடீரென்று ஒருநாள் அவருக்கு சுயநினைவு வந்து பழைய பாசத்தோடு ராசா என்று என்னை கண் கலங்கியபடி கூப்பிட்டு எண்ணெயும் கலந்து வைத்திருந்தார். அதன் பிறகு 2 வருடம் வரை அவர் உயிரோடு இருந்தார். இப்ப கருத்தம்மா இல்லாத உலகத்தில் இந்த பாரதிராஜா பாதி உயிரோடு தான் நடமாடி இருக்கிறார் என்று
கண்கலங்கியபடி கூறினார்.

Advertisement